Showing posts with label குளோபல் warming. Show all posts
Showing posts with label குளோபல் warming. Show all posts

Monday, February 22, 2010

கார்பன் டை ஆக்சைடில் இருந்து எரிபொருள்


புவிவெப்பமாவதை எவ்வாறு தடுப்பது என்பதுதான் மனிதகுலத்தின் இன்றைய தலைகாய்ந்த பிரச்சினை. புவிக்கோளத்தின் பருவநிலை தாறுமாறாக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. எண்ணெய் சார்ந்த எரிபொருட்களை எரிப்பதால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடின் அளவை எவ்வாறு குறைப்பது என்பதை உலகத்தலைவர்கள் அனைவரும் கூடிப்பேசிவரும் காலம் இது. கார்பன் டை ஆக்சைடு ஒரு பசுமை இல்ல வாயுவாக இருப்பதால் வளிமண்டலத்தில் இந்த வாயுவின் அளவு அதிகரிக்கும்போது புவியின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது.

கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு சையனோபாக்டீரியத்தின் மரபியல் பண்புகளை மாற்றியமைப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை ஐசோபுயூட்டனால் என்னும் திரவ எரிபொருளாக மாற்ற முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள். இந்த ஐசோபுயூட்டனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிவாயுவிற்கு ஒரு மாற்றாக இருக்குமாம். இந்த வேதியியல் வினையை சூரிய ஒளியின் ஆற்றலைக் கொண்டே நிகழ்த்தமுடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஆய்வறிக்கை டிசம்பர் 9 ஆம் தேதியிட்ட Nature Biotechnology இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு இரண்டு நீண்டகால பயன்களை கொடுக்கவல்லது. முதலாவதாக நம்மை அச்சுறுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவை வளிமண்டலத்தில் இருந்து அகற்றுகிறது. இரண்டாவதாக சூரிய ஆற்றலை எரிபொருளாக மாற்றித் தருகிறது. இந்த எரிபொருளைக்கொண்டு இப்போதைய வாகனங்களைக்கூட இயக்கமுடியுமாம். சாதாரணமாக தாவரங்கள், ஆல்காக்கள் ஆகியவற்றில் இருந்துகூட உயிரி எரிபொருட்களைப்பெற இயலும். ஆனால் இந்த உயிரி எரிபொருட்களைப் பெற பல படிநிலைகளைக் கடந்தாகவேண்டும். தாவரங்களில் காணப்படும் செல்லுலோஸ் அழிக்கப்பட்டபிறகே இந்த உயிரி எரிபொருளை நாம் அடைய முடியும். இதனால் ஏற்படும் பொருளாதார சிக்கலில் இருந்து இந்த புதிய கண்டுபிடிப்பு நம்மை விடுவிக்கிறது.

RuBisCO என்னும் என்சைம் காற்றில் உள்ள அனங்கக கார்பனை அங்கக கார்பனாக மாற்றவல்லது. ஒளிச்சேர்க்கையின்போது இந்த என்சைம்தான் காற்றில் உள்ள கரிமத்தை தாவரங்களுக்கும் அதன்மூலம் மனிதர்கள் உட்பட்ட மற்ற உயிர்ப்பொருட்களுக்கும் மாற்றித்தருகிறது. cyanobacterium Synechoccus elongates என்னும் பாக்டீரியாவைப் பயன்படுத்தி RuBisCO என்சைமின் அளவு அதிகரிக்கப்படுகிறது. பிற நுண்ணியிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜீன்களின் உதவியால் cyanobacterium மாற்றமடைகிறது. இதன்விளைவாக கார்பன் டை ஆக்சைடும் சூரிய ஒளியும் உறிஞ்சப்பட்டு isobutyraldehyde வாயு உருவாகிறது. இந்த வாயு குறைந்த கொதிநிலையும், அதிகமான வாயு அழுத்தமும் கொண்டதாக இருப்பதால் இதனை பிரித்தெடுப்பது எளிதானது. இதிலிருந்து ஐசோபியூட்டனால் என்னும் எரிபொருள் பெறப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகாமையில் இந்த சாதனங்களைப் பொருத்துவதன் மூலம், வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடு உடனுக்குடன் பிடிக்கப்பட்டு எரிபொருளாக மாற்ற இயலுமாம். இந்த ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உற்பத்தித்திறன் இன்னும் மேம்படுத்தப்படவேண்டும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். அமெரிக்க அரசின் எரிசக்தி துறையின் நிதி உதவியுடன் இந்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

நன்றி : மு.குருமூர்த்தி

Saturday, February 20, 2010

பருவநிலைமாற்றங்களும் மக்கள் உடல்நிலையும்

பூமி சூடேறுவதால் கடல் மட்டம் உயர்வது, பனி மலைகள் உருகுவது போன்ற பல்வேறு பாதிப்புகளைப் பற்றி பார்த்திருக் கிறோம். பூமி தொடர்ந்து சூடேறிக் கொண்டே போவதால் மக்கள் உடல் நலம் பெரிதும் பாதிப்படையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக உடல்நல நாள் ஆன ஏப்ரல் 8 தினத் தை, திடீர் பருவநிலை மாற்றங்கள் உடல்நலத்தைப் பாதிக்காமல் தடுப் பது எப்படி என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாக இந்த ஆண்டு அனுசரிப்பது என்று உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்தது.

கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.75 டிகிரி சென்டி கிரேட் கூடியுள்ளது. சே, இவ்வளவு தானா என்று நினைக்க வேண்டாம். இதுவே மனிதகுலத்திற்குப் பல பாதிப் புகளை ஏற்படுத்த வல்லது. அதிகபட் சமாக, வெப்பம் மனிதர்களை நேரடி யாகத் தாக்கி மரணத்தை ஏற்படுத்தி விடக்கூடியது. வெப்பம் கூடுவதால் இதயக் கோளாறுகள் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணத்தில் போய் முடியும். வயது முதிர்ந்தவர்கள் பாதிப்பு அடைவதற்கு வாய்ப்பு அதிகம். 2003 கோடையில் ஐரோப்பாவில் வெப்ப நிலை கூடியதன் விளைவாக மட்டும் 70,000 பேர் இறந்துவிட்டனர். பெருநக ரங்களில் காற்று மாசுபடுவதன் காரண மாக ஒவ்வோர் ஆண்டும் 8,00,000 மரணங்கள் நிகழ்கின்றன. பூமி சூடே றிக் கொண்டே போவதன் காரணமாக இந்த மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

குறையவும் கூடாது, அதிகரிக்கவும் கூடாது

வெப்பம் உயர்வதன் காரணமாக பூமியில் உள்ள நீர்நிலைகள் ஆவியா வது துரிதப்படுவதால், உலகில் சுத்த மான நீரின் அளவு குறைந்துவிடும். சுத்தமான நீர் குறையக் குறைய, பொது சுகாதாரம் சீர்கெடும். இதனால் வயிற்றுப்போக்கு நோய் (னயைசசாடிநயட னளைநயளந) பீடிப்பது அதிகரிக்கும். குழந் தைகளைப் பலி கொள்வதில் முதல் இடம் இந்த வயிற்றுப்போக்கு நோய்க் குத்தான். ஒவ்வோர் ஆண்டும் இந்த நோயினால் 18 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. திடீர் பருவநிலை மாற் றங்கள் பெருமழையையும் கொண்டு வரும். அந்த சமயங்களில் அளவுக்கு அதிகமான தண்ணீர் வெள்ளமாகப் பெருகி நீர்நிலைகளை அசுத்தப்படுத்தி விடும். இதனாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

கொசுக்கள் பெருகும்-விளைச்சல் குறையும்

தற்போது கொசுக்களினால் பரவும் மலேரியா நோயினால் உலகில் ஒவ் வோர் ஆண்டும் 11 லட்சம் பேர் மரண மடைகின்றனர். மழைகாலங்கள் மாறுவது, காற்றில் நீர்ப்பதம் அதிகரிப் பது, வெப்பநிலை உயர்வது எல்லாம் சேர்ந்து கொசுக்கள் பெருகி, மலேரியா நோய் பெருகவும் காரணமாகி விடும்.

திடீர் பருவநிலை மாற்றங்களால் பல வளரும் நாடுகளில் தானிய விளைச்சல் குறைந்துவிடும். சில ஆப் பிரிக்க நாடுகளில் 2020-க்குள் வானம் பார்த்த நிலங்களிலிருந்து கிடைக்கும் மகசூல் பாதியாகக் குறைந்துவிடும் ! ஏற்கனவே ஒவ்வோர் ஆண்டும் ஊட் டச்சத்து போதாமையினால் 35 லட்சம் மக்கள்-பெரும்பாலும் குழந்தைகள்-இறந்துவிடுகின்றனர். மகசூல் குறை வினால் பட்டினியால் இறக்கும் மக்க ளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். பூமி சூடேறுவதால் சின்னஞ்சிறு தீவு களிலும் தாழ்ந்த பகுதிகளிலும் வசிக் கும் மக்களே அதிகம் பாதிக்கப்படு வர். வெப்பம் மிகுந்த இந்தியா போன்ற நாட்டுப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் அதிக வெப்பம், வெள்ளம், காற்று மாசுபடுதல் மற்றும் தொற்று நோய்க ளால் அதிகம் பாதிப்பு அடைவார்கள். மலை மேல் வசிக்கும் மக்களும் தண்ணீர் பற்றாக்குறை, நிலச்சரிவுகள், தொற்று நோய்கள் போன்ற பாதிப் புகளிலிருந்து தப்பிக்க முடியாது.

ஆபத்து நெருங்கிவிட்டது

பூமி சூடேறும் பிரச்சனை எப் போதோ எதிர்காலத்தில் என்றோ ஒரு நாள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும், உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை என்று அலட்சியமாக இல்லாமல் மக்கள் உடல்நலத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் தேவை என்பதை சுற்றுச்சூழல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகள் `பூமிக்கு கெட்ட காலம் பொறக்குது’ என்று குடுகுடுப்பை அடித்துச் சொல் வதுபோல இருந்தாலும் நம்மை சரி யான நேரத்தில் எச்சரிக்கை செய்வதா கவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

`விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்றார் பட்டுக்கோட்டை.

விழித்துக் கொள்வோம் !

Thursday, January 14, 2010

புவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய வழிமுறை

வெப்பமாகிக்கொண்டிருக்கும் இந்த பூமியைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்யலாம் என்று மனிதகுலம் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. புவிக்கோளத்தின் பருவநிலையோ, மனிதர்களைப்பற்றி கவலைப்படாமல் தன்போக்கில் தாறுமாறாக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. எண்ணெய் சார்ந்த எரிபொருட்களை எரிப்பதால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடின் அளவை எவ்வாறு குறைப்பது என்பதை உலகத்தலைவர்கள் எல்லோரும் கூடிப்பேசிவரும் காலம் இது. பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்கும்போது புவியின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது.

கலிபோர்னியா-லாஸ்ஏஞ்சலீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு சையனோபாக்டீரியத்தின் மரபியல் பண்புகளை மாற்றியமைப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை ஐசோபுயூட்டனால் என்னும் திரவ எரிபொருளாக மாற்ற முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள். இந்த ஐசோபுயூட்டனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிவாயுவிற்கு ஒரு மாற்றாக இருக்குமாம். இந்த வேதியியல் வினையை சூரிய ஒளியின் ஆற்றலைக் கொண்டே நிகழ்த்தமுடியும் என்பது கூடுதல் சிறப்பு. டிசம்பர் 9 ஆம் தேதியிட்ட Nature Biotechnology இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு இரண்டு நீண்டகால பயன்களைக் கொடுக்கவல்லது. முதலாவதாக, நம்மை அச்சுறுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவை வளிமண்டலத்தில் இருந்து குறைக்கமுடியும். இரண்டாவதாக, சூரிய ஆற்றலை எரிபொருளாக மாற்றமுடியும். இன்றைய வாகனங்களை இயக்க இந்த எரிபொருள் போதுமானது. தாவரங்களில் இருந்தும் ஆல்காக்களில் இருந்தும் எரிபொருளைப் பெறும் தொழில்நுட்பம் தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அதிகமான படிநிலைகளைக்கடந்த பின்னரே இந்த உயிரி எரிபொருளை பெற இயலும். மேலும் தாவரங்களில் காணப்படும் செல்லுலோஸ் அழிக்கப்பட்டபிறகே இந்த உயிரி எரிபொருள் கிடைக்கும். இதன்விளைவாக ஏற்படும் பொருளாதார சிக்கல்களில் இருந்து நம்மை விடுவிக்க புதிய ஆய்வு துணை செய்கிறது.

RuBisCO என்னும் என்சைம் காற்றில் உள்ள அனங்கக கார்பனை அங்கக கார்பனாக மாற்றவல்லது. அதாவது உயிரற்ற பொருளில் உள்ள கரிமத்திற்கும் உயிருள்ளவற்றில் உள்ள கரிமத்திற்கும் இணைப்புப்பாலமாக செயல்படுகிறது இந்த என்சைம். ஒளிச்சேர்க்கையின்போது RuBisCO என்சைம் காற்றில் உள்ள கரிமத்தை தாவரங்களுக்கும், அதன்மூலம் மனிதர்கள் உட்பட்ட மற்ற உயிர்ப்பொருட்களுக்கும் மாற்றித் தருகிறது.

ஆய்வின் முதல்படியில் cyanobacterium Synechoccus elongates என்னும் பாக்டீரியாவைப்பயன்படுத்தி RuBisCO என்சைமின் அளவு அதிகரிக்கப்பட்டது. பிற நுண்ணியிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜீன்களின் உதவியால் cyanobacterium ல் மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். இதன்விளைவாக கார்பன் டை ஆக்சைடும் சூரிய ஒளியும் உறிஞ்சப்பட்டு isobutyraldehyde வாயு உருவானது. இந்த வாயு குறைந்த கொதிநிலையும், அதிகமான வாயு அழுத்தமும் கொண்டது. எனவே இதனை பிரித்தெடுப்பது எளிதாக இருந்தது. Isobutyraldehydeல் இருந்து ஐசோபியூட்டனால் என்னும் எரிபொருள் பெறப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகாமையில் இந்த சாதனங்களைப்பொருத்துவதன் மூலம், வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடை உடனுக்குடன் சிறைபிடித்து எரிபொருளாக மாற்ற இயலுமாம். இந்த ஆய்வுகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. எரிபொருளின் உற்பத்தித்திறன் இன்னும் மேம்படுத்தப்படவேண்டும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். அமெரிக்க அரசின் எரிசக்தி துறையின் நிதி உதவியுடன் இந்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் படிக்க:http://www.sciencedaily.com/releases/2009/12/091210162222.htm

தகவல்: மு.குருமூர்த்தி

Wednesday, January 14, 2009

புவி சூடாதல்... பாதிப்புகளிலிருந்து மீள்வது எப்படி?

பூமி சூடாவதன் காரணமாக ஏற் படும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க இந்தியா,தேசிய அளவில் ஒரு திட்டம் தயாரித்து என்.ஏ.பி..சி.சி (சூயவiடியேட ஹஉவiடிn ஞடயn கடிச ஊடiஅயவந ஊாயபேந) என்ற அமைப்பின் மூலம் நடை முறைப்படுத்தி வருகிறது. தொழில் வளர்ச்சியின் காரணமாக பசுங்குடில் வாயுக்கள் வெளியிடப்பட்டு அதன் காரணமாக பூமியின் வெப்பநிலை கூடிவருகிறது என்பதற்காக தொழில் வளர்ச்சியை எந்த நாடும் நிராகரித்து விட முடியாது. நமக்கு தொழில் வளர்ச்சியும் வேண்டும் -அதே சமயம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண் டும். எனவே, நாம் சமச்சீர் வளர்ச்சிப் பாதையில் (ளரளவயiயேடெந னநஎநடடியீஅநவே யீயவா) முன்னேற வேண்டியிருக்கிறது. என்.ஏ.பி.சி.சி. புதுப்பிக்கக்கூடியவகை சக்தித் திட்டங்களை (சநநேறயடெந நநேசபல யீசடிதநஉவள) நடைமுறைப்படுத்த பல வழி முறைகளைப் பரிந்துரைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் அப்பரிந்துரைகளை ஏற்று சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காற்றின் சக்தி

காற்றின் சக்தியைப் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்படும் 8757 மெகாவாட் மின்சாரத்தில், தமிழ் நாட் டின் பங்கு 3856 மெகாவாட் மின்சா ரம். தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் நீண்ட மலைத் தொடர்கள் அமைந் திருப்பதே இதன் காரணம்.

சூரிய ஆற்றல்

பூமியில் உள்ள அனைத்து உயிரி னங்களுக்கும் ஆதாரமானது சூரிய ஒளி. ஒரு மணி நேரத்தில் 1.74 ஓ 1017 வாட் சக்தியை அது பூமிக்கு அளித்து வருகிறது. சூரிய ஆற்றல் பூமியின் மேற்பரப்பில் பரவலாக எங்கும் கிடைக்கிறது. அள்ள அள்ளக் குறை யாதது. சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காதது.

உயிர்க்கூட்டு சக்தி (biடிஅயளள நநேசபல)

தாவரங்களையும் மரங்களையும் எரிக்கும்போது கிடைக்கும் சக்தி, உயிர்க்கூட்டு சக்தி எனப்படுகிறது. ஆனால் அப்படி எரிக்கும்போது தங் கள் வாழ்நாளில் அவை சேமித்து வைத்த கரியமில வாயு காற்று மண்ட லத்தில் கலக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மாற்றம் செய்து, கார்பனை நடுநிலைக் குக் கொண்டுவந்து, அவற்றை சக்தி யாக மாற்றலாம். இப்படி மின்சாரம் தயாரிக்கும்போது கார்பன் வெளியீடு தவிர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உயிர்க்கூட்டு மின்சாரம் 474 மெகா வாட் தயாரிக்கப்படுகிறது.

தொழிற்சாலைக் கழிவுகளிலிருந்து மின்சாரம்

தொழிற்சாலைகளிலிருந்து வெளி யேறும் ஈரப்பதமுள்ள உயிர்க்கூட்டுக் கழிவுகளிலிருந்து கோயம்பேடு, நெசப்பாக்கம், கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் மின்சாரம் தயா ரிக்கப்படுகிறது.

உயிரிவாயு (biடிபயள)

மாட்டுச் சாணம், கோழிக் கழிவு கள், விவசாயக் கழிவுகள், சமைய லறைக் கழிவுகள், கரும்புச் சக்கை, மனிதக் கழிவுகள் ஆகியவற்றிலி ருந்து உயிரிவாயு தயாரித்து அதை சமையலுக்கும், விளக்குக்காக மின் சாரம் தயாரிக்கவும் பயன்படுத்த முடியும்.

உயிரி எரிவாயு

சமையலுக்குப் பயன்படாத அனைத்துத் தாவர எண்ணெய்களை யும் உயிரி டீசலாக மாற்ற முடியும்.

மீத்தேன் - எதிர்காலத்திற்கான எரிபொருள்

மீத்தனஜன்கள் பாக்டீ ரியா போன்றவை. கரியமில வாயுவிலிருந்து மீத்தே னைத் தயாரிக்க அவை உத வுவதால் கார்பன் வெளியீ டற்ற புதுப்பிக்கக்கூடிய வாயு தயாரிக்க அவற்றைப் பயன்படுத்த முடியும். ஒவ் வோர் ஆண்டும் ஒரு பில் லியன் (ஒரு பில்லியன் என் பது 100 கோடி) டன்கள் மீத்தேன் தயாரிக்க மீத்தனஜன்கள் பயன்படுகின்றன. பண்ணைகளி லிருந்தும் வீடுகளிலிருந்தும் வெளி யேறும் கழிவுகளில் மீத்தனஜன்கள் உயிர்வாழ முடியும். வெப்பத்தை உள்வாங்குவதில் கரியமிலவாயுவை விட மீத்தேன் 23 மடங்கு சக்தி வாய்ந் தது. எரிபொருளாக மீத்தேனைப் பயன்படுத்தினால் புவி வெப்பமடை வதை மட்டுப்படுத்த முடியும். எனவே மீத்தேன் எதிர்காலத்திற்கான எரி பொருளாகக் கருதப்படுகிறது.

Sunday, January 11, 2009

பூமி சூடாவதன் காரணமாக மேலும் பல பாதிப்புகள்

குறிப்பாக இந்தியா வையும் தமிழ்நாட்டையும் பாதிக்கக்கூடி யவை - பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம்.

காடுகள் மற்றும் உயிரினப் பன்மை

பூமியின் சுற்றுச்சூழலுக்கு பாது காப்பு அரணாக விளங்கிவரும் காடுகள் எதிர்காலத்தில் வரக்கூடிய தட்பவெப்ப நிலை மாற்றங்களினால் கடுமையாகப் பாதிக்கப்படும் என ஐபிசிசிஏஆர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. புவி யின் வெப்பநிலை 1 அல்லது 2 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்தாலும் உயிரினங் களின் எண்ணிக்கை, உற்பத்தி மற்றும் உயிரினப்பன்மை மாற்றங்களுக்குள்ளா கும் என்பதால் பூமியின் நிலப்பரப்பு களும் சுற்றுச்சூழலும் பாதிப்படையும். காடுகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக் கும் மக்களின் வாழ்வாதாரங்களை இந்த மாற்றங்கள் சீரழித்துவிடும். இந்தி யாவைப் பொறுத்தவரை, உயிரினங்கள் மற்றும் தாவரவகைகளில் ஏறக்குறைய பாதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

விவசாயம்

வெப்பநிலை மற்றும் மழைப் பொழி வில் ஏற்படும் மாற்றங்களினால் நேரடி யாகவும் மண்வளம், பூச்சிகள், நோய் கள் ஆகிவற்றின் காரணமாக மறைமுக மாகவும் இந்தியாவின் வேளாண் உற் பத்தி பாதிப்படையும். குறிப்பாக வெட் டுக்கிளி போன்ற பூச்சிகளின் எண்ணிக் கைப் பெருக்கத்தின் காரணமாக தானிய உற்பத்தி கணிசமாகக் குறையும். அதே சமயம், பூமத்தியரேகையை விட்டுத் தள்ளி இருக்கும் குளிர்ப்பிரதேச நாடு களில் குளிர் பருவகாலம் குறைந்து பயிர் வளர்வதற்குச் சாதகமான பருவகா லம் அதிகரிக்கக் கூடும் என்பதால், ஒட்டுமொத்த விளைச்சல் அதிகரிக்கும்! அப்படிப்பட்ட நாடுகள் “பூமி சூடானால் சூடாகிவிட்டுப் போகட்டுமே, நல்லது தானே?” என்று கேட்டாலும் ஆச்ச ரியம் இல்லை.

நதிநீர்ப் படுகைகள்

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் மாஹி, பெண்ணாறு, சபர்மதி, தபி ஆற் றுப் படுகைகளும் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். காவிரி, கங்கை, நர்மதா, கிருஷ்ணா நதி நீர்ப் படுகைகள் அந்த அளவிற்கு இல் லாவிட்டாலும் அவ்வப்போது பற்றாக் குறையைச் சந்திக்க வேண்டியிருக்கும். கோதாவரி, பிரம்மபுத்ரா, மகாநதி ஆகிய நதிநீர்ப் படுகைகளில் கடும் வெள்ள அபாயம் ஏற்படும் ! இமாலயப் பனி மலை களிலிருந்து உருகி வரும் தண் ணீர்தான் உலக மக்கள் தொகையின் 40 சதம் பேருக்கு நீர்வளத்தைத் தந்து கொண்டிருக்கிறது. இந்த எல்லைகளை இந்தியா, சீனா, பூடான், பர்மா ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. இங் குள்ள ஆறுகள் வற்றிப் போனால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடற்கரைச் சூழல்

இந்தியாவின் கடலோர மாநிலங் களில் தமிழ்நாட்டின் கடற்கரை 1076 கி.மீ. நீளமுடையது. மாநிலத்தின் கட லோரப் பகுதி கடல் சீற்றங்கள், சுனா மிகள், புயல் காற்றுகள், சூறாவளிகள் ஆகியவற்றி னால் தாக்குத லுக் குள்ளா கக் கூடிய பகுதி. புயலினால் அதிகம் பாதிப்படையும் மூன்று மாநி லங்களில் தமிழ்நாடும் ஒன்று. மற்ற இரண்டு ஒரிஸ்ஸாவும் ஆந்திராவும். புயல் கரை கடந்து விட்டது என்ற தமிழ் நாட்டுக்கான நல்ல செய்தி ஆந்திரா வைப் பொறுத்தவரை கெட்ட செய்தி யாக மாறுவதைப் பல முறை பார்த்திருக் கிறோம். இந்தியாவின் மேற்குப் பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் உருவா கும் புயல்களை விட கிழக்குப் பக்கம் உள்ள வங்காள விரிகுடா பகுதியில் நான்கு மடங்கு அதிகமாக புயல்கள் உருவாகின்றன என்கிறது பேரிடர்த் தயாரிப்புநிலைக்கான ஆசிய மையம்.

2050-க்குள் இந்தியக் கடற்கரைப் பகுதியில் சராசரி கடல் மட்ட உயர்வு 15லிருந்து 38 சென்டிமீட்டர் வரையும் 2100க்குள் 46லிருந்து 59 சென்டிமீட்டர் வரையும் இருக்கும் என மதிப்பிடப்பட் டிருக்கிறது. குஜராத், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களின் கடற் கரைப் பகுதிகள் பாதிக்கப்படும். தமிழ் நாட்டின் 13 மில்லியன் ஹெக்டேர் கட லோரப் பகுதி வெள்ளத்தால் சூழப்படும். 16.2 லட்சம் மக்கள் இடம் பெயர வேண்டியிருக்கும்.

உடல்நலம்

மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம் போன்ற இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதி மாநிலங் களையும், தெற்கே உள்ள மாநிலங் களையும் வடகிழக்கு மாநிலங்களையும் மலேரியா நோய் தாக்குவது அதிகரிக் கும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.