பூமி சூடேறுவதால் கடல் மட்டம் உயர்வது, பனி மலைகள் உருகுவது போன்ற பல்வேறு பாதிப்புகளைப் பற்றி பார்த்திருக் கிறோம். பூமி தொடர்ந்து சூடேறிக் கொண்டே போவதால் மக்கள் உடல் நலம் பெரிதும் பாதிப்படையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக உடல்நல நாள் ஆன ஏப்ரல் 8 தினத் தை, திடீர் பருவநிலை மாற்றங்கள் உடல்நலத்தைப் பாதிக்காமல் தடுப் பது எப்படி என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாக இந்த ஆண்டு அனுசரிப்பது என்று உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்தது.
கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.75 டிகிரி சென்டி கிரேட் கூடியுள்ளது. சே, இவ்வளவு தானா என்று நினைக்க வேண்டாம். இதுவே மனிதகுலத்திற்குப் பல பாதிப் புகளை ஏற்படுத்த வல்லது. அதிகபட் சமாக, வெப்பம் மனிதர்களை நேரடி யாகத் தாக்கி மரணத்தை ஏற்படுத்தி விடக்கூடியது. வெப்பம் கூடுவதால் இதயக் கோளாறுகள் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணத்தில் போய் முடியும். வயது முதிர்ந்தவர்கள் பாதிப்பு அடைவதற்கு வாய்ப்பு அதிகம். 2003 கோடையில் ஐரோப்பாவில் வெப்ப நிலை கூடியதன் விளைவாக மட்டும் 70,000 பேர் இறந்துவிட்டனர். பெருநக ரங்களில் காற்று மாசுபடுவதன் காரண மாக ஒவ்வோர் ஆண்டும் 8,00,000 மரணங்கள் நிகழ்கின்றன. பூமி சூடே றிக் கொண்டே போவதன் காரணமாக இந்த மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
குறையவும் கூடாது, அதிகரிக்கவும் கூடாது
வெப்பம் உயர்வதன் காரணமாக பூமியில் உள்ள நீர்நிலைகள் ஆவியா வது துரிதப்படுவதால், உலகில் சுத்த மான நீரின் அளவு குறைந்துவிடும். சுத்தமான நீர் குறையக் குறைய, பொது சுகாதாரம் சீர்கெடும். இதனால் வயிற்றுப்போக்கு நோய் (னயைசசாடிநயட னளைநயளந) பீடிப்பது அதிகரிக்கும். குழந் தைகளைப் பலி கொள்வதில் முதல் இடம் இந்த வயிற்றுப்போக்கு நோய்க் குத்தான். ஒவ்வோர் ஆண்டும் இந்த நோயினால் 18 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. திடீர் பருவநிலை மாற் றங்கள் பெருமழையையும் கொண்டு வரும். அந்த சமயங்களில் அளவுக்கு அதிகமான தண்ணீர் வெள்ளமாகப் பெருகி நீர்நிலைகளை அசுத்தப்படுத்தி விடும். இதனாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
கொசுக்கள் பெருகும்-விளைச்சல் குறையும்
தற்போது கொசுக்களினால் பரவும் மலேரியா நோயினால் உலகில் ஒவ் வோர் ஆண்டும் 11 லட்சம் பேர் மரண மடைகின்றனர். மழைகாலங்கள் மாறுவது, காற்றில் நீர்ப்பதம் அதிகரிப் பது, வெப்பநிலை உயர்வது எல்லாம் சேர்ந்து கொசுக்கள் பெருகி, மலேரியா நோய் பெருகவும் காரணமாகி விடும்.
திடீர் பருவநிலை மாற்றங்களால் பல வளரும் நாடுகளில் தானிய விளைச்சல் குறைந்துவிடும். சில ஆப் பிரிக்க நாடுகளில் 2020-க்குள் வானம் பார்த்த நிலங்களிலிருந்து கிடைக்கும் மகசூல் பாதியாகக் குறைந்துவிடும் ! ஏற்கனவே ஒவ்வோர் ஆண்டும் ஊட் டச்சத்து போதாமையினால் 35 லட்சம் மக்கள்-பெரும்பாலும் குழந்தைகள்-இறந்துவிடுகின்றனர். மகசூல் குறை வினால் பட்டினியால் இறக்கும் மக்க ளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். பூமி சூடேறுவதால் சின்னஞ்சிறு தீவு களிலும் தாழ்ந்த பகுதிகளிலும் வசிக் கும் மக்களே அதிகம் பாதிக்கப்படு வர். வெப்பம் மிகுந்த இந்தியா போன்ற நாட்டுப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் அதிக வெப்பம், வெள்ளம், காற்று மாசுபடுதல் மற்றும் தொற்று நோய்க ளால் அதிகம் பாதிப்பு அடைவார்கள். மலை மேல் வசிக்கும் மக்களும் தண்ணீர் பற்றாக்குறை, நிலச்சரிவுகள், தொற்று நோய்கள் போன்ற பாதிப் புகளிலிருந்து தப்பிக்க முடியாது.
ஆபத்து நெருங்கிவிட்டது
பூமி சூடேறும் பிரச்சனை எப் போதோ எதிர்காலத்தில் என்றோ ஒரு நாள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும், உடனடியாக எந்த ஆபத்தும் இல்லை என்று அலட்சியமாக இல்லாமல் மக்கள் உடல்நலத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் தேவை என்பதை சுற்றுச்சூழல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகள் `பூமிக்கு கெட்ட காலம் பொறக்குது’ என்று குடுகுடுப்பை அடித்துச் சொல் வதுபோல இருந்தாலும் நம்மை சரி யான நேரத்தில் எச்சரிக்கை செய்வதா கவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
`விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்றார் பட்டுக்கோட்டை.
விழித்துக் கொள்வோம் !
No comments:
Post a Comment