Sunday, January 11, 2009

பூமி சூடாவதன் காரணமாக மேலும் பல பாதிப்புகள்

குறிப்பாக இந்தியா வையும் தமிழ்நாட்டையும் பாதிக்கக்கூடி யவை - பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம்.

காடுகள் மற்றும் உயிரினப் பன்மை

பூமியின் சுற்றுச்சூழலுக்கு பாது காப்பு அரணாக விளங்கிவரும் காடுகள் எதிர்காலத்தில் வரக்கூடிய தட்பவெப்ப நிலை மாற்றங்களினால் கடுமையாகப் பாதிக்கப்படும் என ஐபிசிசிஏஆர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. புவி யின் வெப்பநிலை 1 அல்லது 2 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்தாலும் உயிரினங் களின் எண்ணிக்கை, உற்பத்தி மற்றும் உயிரினப்பன்மை மாற்றங்களுக்குள்ளா கும் என்பதால் பூமியின் நிலப்பரப்பு களும் சுற்றுச்சூழலும் பாதிப்படையும். காடுகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக் கும் மக்களின் வாழ்வாதாரங்களை இந்த மாற்றங்கள் சீரழித்துவிடும். இந்தி யாவைப் பொறுத்தவரை, உயிரினங்கள் மற்றும் தாவரவகைகளில் ஏறக்குறைய பாதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

விவசாயம்

வெப்பநிலை மற்றும் மழைப் பொழி வில் ஏற்படும் மாற்றங்களினால் நேரடி யாகவும் மண்வளம், பூச்சிகள், நோய் கள் ஆகிவற்றின் காரணமாக மறைமுக மாகவும் இந்தியாவின் வேளாண் உற் பத்தி பாதிப்படையும். குறிப்பாக வெட் டுக்கிளி போன்ற பூச்சிகளின் எண்ணிக் கைப் பெருக்கத்தின் காரணமாக தானிய உற்பத்தி கணிசமாகக் குறையும். அதே சமயம், பூமத்தியரேகையை விட்டுத் தள்ளி இருக்கும் குளிர்ப்பிரதேச நாடு களில் குளிர் பருவகாலம் குறைந்து பயிர் வளர்வதற்குச் சாதகமான பருவகா லம் அதிகரிக்கக் கூடும் என்பதால், ஒட்டுமொத்த விளைச்சல் அதிகரிக்கும்! அப்படிப்பட்ட நாடுகள் “பூமி சூடானால் சூடாகிவிட்டுப் போகட்டுமே, நல்லது தானே?” என்று கேட்டாலும் ஆச்ச ரியம் இல்லை.

நதிநீர்ப் படுகைகள்

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் மாஹி, பெண்ணாறு, சபர்மதி, தபி ஆற் றுப் படுகைகளும் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். காவிரி, கங்கை, நர்மதா, கிருஷ்ணா நதி நீர்ப் படுகைகள் அந்த அளவிற்கு இல் லாவிட்டாலும் அவ்வப்போது பற்றாக் குறையைச் சந்திக்க வேண்டியிருக்கும். கோதாவரி, பிரம்மபுத்ரா, மகாநதி ஆகிய நதிநீர்ப் படுகைகளில் கடும் வெள்ள அபாயம் ஏற்படும் ! இமாலயப் பனி மலை களிலிருந்து உருகி வரும் தண் ணீர்தான் உலக மக்கள் தொகையின் 40 சதம் பேருக்கு நீர்வளத்தைத் தந்து கொண்டிருக்கிறது. இந்த எல்லைகளை இந்தியா, சீனா, பூடான், பர்மா ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன. இங் குள்ள ஆறுகள் வற்றிப் போனால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடற்கரைச் சூழல்

இந்தியாவின் கடலோர மாநிலங் களில் தமிழ்நாட்டின் கடற்கரை 1076 கி.மீ. நீளமுடையது. மாநிலத்தின் கட லோரப் பகுதி கடல் சீற்றங்கள், சுனா மிகள், புயல் காற்றுகள், சூறாவளிகள் ஆகியவற்றி னால் தாக்குத லுக் குள்ளா கக் கூடிய பகுதி. புயலினால் அதிகம் பாதிப்படையும் மூன்று மாநி லங்களில் தமிழ்நாடும் ஒன்று. மற்ற இரண்டு ஒரிஸ்ஸாவும் ஆந்திராவும். புயல் கரை கடந்து விட்டது என்ற தமிழ் நாட்டுக்கான நல்ல செய்தி ஆந்திரா வைப் பொறுத்தவரை கெட்ட செய்தி யாக மாறுவதைப் பல முறை பார்த்திருக் கிறோம். இந்தியாவின் மேற்குப் பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் உருவா கும் புயல்களை விட கிழக்குப் பக்கம் உள்ள வங்காள விரிகுடா பகுதியில் நான்கு மடங்கு அதிகமாக புயல்கள் உருவாகின்றன என்கிறது பேரிடர்த் தயாரிப்புநிலைக்கான ஆசிய மையம்.

2050-க்குள் இந்தியக் கடற்கரைப் பகுதியில் சராசரி கடல் மட்ட உயர்வு 15லிருந்து 38 சென்டிமீட்டர் வரையும் 2100க்குள் 46லிருந்து 59 சென்டிமீட்டர் வரையும் இருக்கும் என மதிப்பிடப்பட் டிருக்கிறது. குஜராத், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களின் கடற் கரைப் பகுதிகள் பாதிக்கப்படும். தமிழ் நாட்டின் 13 மில்லியன் ஹெக்டேர் கட லோரப் பகுதி வெள்ளத்தால் சூழப்படும். 16.2 லட்சம் மக்கள் இடம் பெயர வேண்டியிருக்கும்.

உடல்நலம்

மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம் போன்ற இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதி மாநிலங் களையும், தெற்கே உள்ள மாநிலங் களையும் வடகிழக்கு மாநிலங்களையும் மலேரியா நோய் தாக்குவது அதிகரிக் கும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

No comments: