வியாழன் கிரகத்தின் அளவிலான கிரகம் ஒன்றைப் புதிதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சத்தில் இதுவரை அறியப்பட்டுள்ள கிரகங்களிலேயே மிகவும் இருட்டான ஒன்று இது என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களில் ஒருவரான டேவிட் கிப்பிங். முழுமையான வாயுப்பந்து போன்று நெருக்கமாகப் பார்த்தால் தெரிகிறது. அதே வேளையில், ஆங்காங்கே சிவப்புப் புள்ளிகள் போன்று சில பகுதிகளும் உள்ளன என்கிறார் அவர்.
டி.ஆர்.இ.எஸ்-2பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக்கிரகம் ஏன் இவ்வளவு இருட்டாக இருக்கிறது என்பதற்கான காரணங்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். தனது நட்சத்திரத்திலிருந்து 30 லட்சம் மைல்கள் தொலைவில் இந்த கிரகம் அமைந்திருக்கிறது. 980 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கொண்டதாகக் கருதப்படும் இந்தக் கிரகம், தனது நட்சத்திரத்திலிருந்துதான் இருக்கும் வெளிச்சத்தையும் பெறுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்த இருட்டுக் கிரகத்தின் பரப்பில் ஆவி வடிவத்தில் சோடியம் மற்றம் பொட்டாசியம் அல்லது வாயு வடிவில் டைட்டானியம் ஆக்சைடு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இவையனைத்தும் ஒளியை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டவை. அதனால்தான் தனது நட்சத்திரத்திலிருந்து பெறும் வெளிச்சம் இந்த கிரகத்திற்கு பயன்படாமல் போய்விட்டது என்று ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள்.
அமெரிக்க விண்வெளி மையமானநாசாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் பல்வேறு விபரங்களை இந்த ஆய்வாளர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் விபரங்கள் கிடைப்
பதன் மூலம் இருட்டுக்கான காரணத்தைத் துல்லியமாகச் சொல்ல முடியும் என்கிறார்கள் அவர்கள்.
நன்றி: தீக்கதிர்
No comments:
Post a Comment