Monday, January 3, 2011

பூமியின் உட்புற காந்த வலிமையின் அளவு கண்டுபிடிப்பு

பூமியில் உள்ள புவி ஈர்ப்பு விசைக்கு காரணமாக இருப்பது காந்த சக்தியே ஆகும். அப்படி இருக்கும் காந்த சக்தியின் அளவு பூமியின் அனைத்து பகுதிகளிலும் ஓரே அளவில் இருக்கிறதா? அல்லது பூமியின் அடியில் செல்ல செல்ல அளவு மாறுபடுகிறதா? அதன் மைய வலிமை எவ்வளவு என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழக பூமி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பாக ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் காந்த சக்தியை விட பூமியின் உட்புறத்தில் காணப்படும் காந்த சக்தி 50 மடங்கு வலிமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக பூமி மற்றும் கோள் அறிவியல் துறையின் பேராசிரியர் புரூஸ் ஏ.பபெட் தெரிவித்திருப்பதாவது :

பூமியின் உட்புறம் சுமார் 2896 கி.மீ ஆழத்தில் காந்த சக்தியின் மையம் அமைந்துள்ளது. பூமியில் காணப்படும் வெப்பத்தின் காரணமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக காந்தபுலம் இந்த பூமியில் இருந்து வருகிறது. பூமிக்கு மூன்று வழிகளில் வெப்பம் கிடைப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு இந்த பூமி உருவானபோது ஏற்பட்ட வெப்பம், பூமிக்கு அடியில் காணப்படும் தனிமங்கள் வெளியிடும் புவி ஈர்ப்பு ஆற்றல் வழியாக கிடைக்கும் வெப்பம் மற்றும் பூமியில் உள்ள பொட்டாசியம், யூரேனியம் மற்று தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களின் சிதைவுகளால் வெளிப்படும் வெப்பம் ஆகியவற்றின் மூலம் பூமிக்கு வெப்பம் கிடைக்கிறது. இப்படி உருவாகும் வெப்பமே தொடர்ந்த காந்த புலத்தை தோற்றுவிக்கும் சக்தியாக விளங்குகிறது. சுமார் 2,253 கி.மீ அளவிற்கு அடர்த்தி மிகுந்த பூமியின் வெளிப்புற அடுக்கு வெப்பத்தின் உதவியால் முதலில் கொதிப்படைகிறது. இதனால் உள்ளே உள்ள தனிமங்கள் ஆற்றலை உற்பத்தி செய்து பின்னர் சிறிது சிறிதாக அவற்றை மின்னாற்றலாக மாற்றுகிறது. இந்த மின்னாற்றல் காந்த சக்தி மையம் பூமியில் தொடர்ந்து நீடிக்க வழிவகுக்கிறது.

நன்றி: தீக்கதிர்

No comments: