Monday, December 27, 2010

எல்லா கிரகங்களும் கோள வடிவத்திலேயே இருப்பதன் காரணம்...?

தண்ணீர் சிறு துளிகளாக மேலிருந்து கீழே விழும்போது, ஒவ்வொரு துளியும் கோளவடிவத்தில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு சமதளப்பரப் பில் ஒரு துளி பாதரசத்தை வைத்தால் அது தண்ணீரைப் போல் படராமல் கோள வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. ஒரு திரவத்துளி எந்த வடிவத்தை வேண்டுமானாலும் எடுக்க முடியும் எனும்போது அது கோள வடிவத்தை மட்டுமே எடுப்பதற்குக் காரணம் இருக்கிறது.

எந்தவொரு பொருளும் அதன் மொத்த சக்தி எந்த நிலையில் குறைவாக இருக்கிறதோ அந்த நிலையை அடையவே முயற்சிக்கும். மேலிருந்து கீழே விழும் ஒரு பொருளுக்கு இயங்கு சக்தி, உள்ளுறை சக்தி இரண்டுமே உண்டு. ஆனால் தரையை அடைந்ததும் இரண்டு சக்திகளுமே பூஜ்யமாகி, அது மிகக் குறைந்த சக்தி நிலையை அடைகிறது. அந்தரத்தில் விடப்பட்ட ஒரு பொருள் இந்த நிலையை அடையவே முயற்சிக்கும். ஒரு திரவத்தை எடுத்துக் கொண்டால், அதன் பரப்பு இழுவிசை அதன் மேல்பரப்பில் உள்ள சக்தியைக் குறிக்கிறது. ஒரு திரவத்துளி அதன் மேல்பரப்பின் பரப்பளவு குறைவாக இருக்கும் நிலையை அடைய முயற்சிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கன அளவு உள்ள திரவம் எடுக்கக்கூடிய எல்லா வடிவங்களிலும் கோள வடிவத்திற்கே வெளிப்பரப்பளவு குறைவானது. அதனால் ஒரு திரவத்திற்கு பல வடிவங்களை எடுக் கும் சுதந்திரம் இருந்தாலும், அது பரப்பு இழுவிசை குறைவாக இருக்கும் கோள வடிவத்தையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

பல்வேறு வாயுக்கள் திரவமாகக் குளிர்ந்து பின்னர் திடப்பொருளாக மாறியபிறகே கிரகங்கள் உருவாகின.

திரவநிலையில் இருக்கும்போதே அவை மேலே கூறிய காரணத்தினால் கோள வடிவத்தை எடுத்துக் கொண்டுவிட்டன. எல்லா கிரகங்களும் கோள வடிவில் இருப்பதற்கு இதுதான் காரணம்.

3 comments:

Aba said...

utterly foolish.. Our earth, a rocky planet is not a sphere. instead, it's a spheroid (elongated sphere). and there are thousands of meteoroids and comets which have irregular shapes unlike the planets. the reason for their spherical shape is the spinning nature of the planets. spinning pushes the matter towards their equator and therefore the planets take an approximate globular shape.

Raju said...

It was I who wrote that piece in the Science Corner of Theekkathir. I based my reply to the question under reference on "The HINDU speaks on Scientific Facts - Volume II" page 117.On the same page it is said " Asteroids were formed due to collision of celestial bodies. They get irregular shapes due to this collisional fragmentation".
Not all the planets spin and even they are spherical or nearly spherical.
If I am wrong I will get myself corrected. But Mr Abarajithan need not have used such a strong word as "foolish".
K. Raju

அறிவியல் விழிப்புணர்வு said...

Yes it is right that this article is from Theekkathir. I agree with Raju words. Anyone can give their comments but we should be careful in using the words.