Sunday, October 10, 2010

பென் டிரைவ் மூலம் வைரஸ் பரவாமல் இருக்க...

பொதுவாக சில கோப்புக்களை எளிதாக கொண்டு செல்ல பென் டிரைவ்வை பயன்படுத்துகிறோம். அப்படி ஒரு கணினியில் இருந்து மற்ற கணினிக்கு கோப்புகளை பரிவர்த்தனை செய்யும் போது ஒரு கணினியில் இருக்கும் வைரஸ் மற்ற கணினிக்கும் பரவ அதிக வாய்ப் புள்ளது. பொதுவாக வைரஸ் புரோக்கிராம் பென் டிரைவில் உள்ள ஆட்டோ ரன் (Autorun ) என்ற பைலின் ஊடாக பரப்பப்படுகிறது. பென் டிரைவை கணினியில் பொருத்திய உடன் அது தானாக இயங்க ஆரம்பிக்கும். அப்படி இயங்கும் போது ஆட்டோ ரன் பைல் செயல்படத் துவங்கும். அந்த பைல் கணினியின் ஊடாக புகுந்து நமது கோப்புக்களை பாதிப்புக்குள்ளாக்கும்.

இதனை கட்டுப்படுத்த பாண்டா நிறுவனம் பாண்டா யுஎஸ்பி வேக்சின் ( Panda USB Vaccine) என்ற புரோக்கிராமை உருவாக்கி யுள்ளது. இந்த புரோக்கிராமை கணினியில் இணைத்துக் கொண்டால் பென் டிரைவை கணினியுடன் இணைக்கும் போது அதில் ஆட்டோ ரன் வைரஸ் இயங்குவதை தடுத்து விடும். அது மட்டுமல்ல, மற்ற டிவைஸ்களின் தானியங்கி செயல்பாட்டையும் முடக்கும். உதாரணமாக சி.டி. அல்லது டி.வி.டி. டிவைஸ்கள். மேலும் ஆட்டோ ரன் கோப்புகள் எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கிவிடும். கணினியின் பாதுகாப்பை பலப்படுத்தும்.

No comments: