Monday, October 11, 2010

ஹோமியோபதி என்றால் என்ன?

ஹோமியோபதி உலகின் இரண்டாவது பெரிய மருத்துவமுறையாகும்.

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர். சாமுவேல் ஹானிமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையாகும்.

ஒத்தநோய் அறிகுறிகளை ஒத்த மருந்துகளால் (முள்ளை முள்ளால் எடுப்பது) இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்துவது இம்மருத்துவ முறையின் அடிப்படைத் தத்துவம்.

ஹோமியோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் அதிகம் என்று சொல்லப்படுவது உண்மையா?

நூறு சதவீதம் தவறு. ஹோமியோபதி மருந்துகள் வீரியப்படுத்துதல் என்ற முறையில் மருந்தின் அளவைக் குறைத்து அதன் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆகையால் இதில் மருந்தின் அளவு மிகமிகக் குறைவாக இருப்பதால் பக்கவிளைவுகள் என்பது இல்லவே இல்லை.

மேலும் சக்தி மட்டுமே பயன்படுத்தப்படுவதால் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் நோயாளி குணப்படுத்தப்படுகிறார்.

ஹோமியோபதிக்கு பத்தியம் இருக்கிறதா?

ஹோமியோபதி மருந்து சாப்பிட எந்தவித பத்தியமும் இல்லை.

நோயின் தன்மைக் கேற்றவாறு உணவுக் கட்டுப்பாடுகள் தேவை.

ஹோமியோபதி மருந்துகளை யாரெல்லாம் சாப்பிடலாம்?

பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் உகந்த இனிப்பானவை ஹோமியோபதி மருந்துகள். பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் எவ்வித பயமும் இன்றி உட்கொள்ளக்கூடிய ஒரே மருந்து ஹோமியோபதி.

ஹோமியோபதியில் ஸ்டீராய்டு உள்ளதாகச் சொல்லப்படுகிறதே அது உண்மையா?

ஹோமியோபதியில் மட்டுமே சுமார் இரண்டாயிரம் மருந்துகள் உள்ளது.

இவைகளில் ஸ்டீராய்டு மருந்துகள் என்று எதுவும் இல்லை.

படிக்காமல் ஹோமியோபதி மருத்துவர் என்ற பெயரில் போலியாக மருத்துவம் செய்பவர்கள் ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகிப்பதால் இந்த அவப்பெயர் ஹோமியோபதிக்கு ஏற்பட்டுள்ளது.

ஹோமியோபதி மருத்துவத்தை முறையாக கல்லூரிகளில் பயின்ற மருத்துவர்களிடத்தில் சென்றால் இதுபோன்ற தவறுகள் ஏற்படுவதில்லை.

ஹோமியோபதி தாமதமாக வேலை செய்யும் என்பது சரியா?

தவறு. ஹோமியோபதி மருத்துவரிடம் வரும் நோயாளிகள் பெரும்பாலும் நீண்டகால நோய்களுடனே வருகிறார்கள்.

எத்தனை வருடங்கள் மருந்து சாப்பிட்டாலும் குணமாகாத இந்த நோய்கள் ஹோமியோபதியில் ஒன்று அல்லது இரண்டு வருடங்களிலேயே குணமாகிறது. ஒப்பிட்டு பார்க்கும்போது இது மிக வேகமான குணமாகும்.

தொடர்ந்து ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ளவர்களுக்கு குறுகிய கால நோய்களும் உடனடியாக குணமாகும்.

ஹோமியோபதியில் அறுவைச் சிகிச்சைகளைத் தவிர்க்க முடியுமா?

மிக அதிகச் செலவுகளை ஏற்படுத்தக்கூடிய, திரும்பத் திரும்ப வரக்கூடிய சிறுநீரகக்கல், மூலம், டான்சில், இருதய நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், பித்தப்பை கல், மார்பகக் கட்டிகள், சைனஸ், ப்ராஸ்டேட் போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சையைத் தவிர்த்து மருந்துகள் மூலமாகவே குணமளிக்க முடியும்.

ஹோமியோபதியில் எந்தெந்த நோய்கள் குணமாகும்?

நீண்டகால நோய்களான தும்மல், சைனஸ், ஆஸ்த்துமா, குடல்புண், டான்சில், நெஞ்செரிச்சல், தீராத தலைவலி, வாயு, சிறுநீரகக்கல் மற்றும் சிறுநீரக நோய்கள், கர்ப்பப்பை கட்டிகள், மாதவிலக்குப் பிரச்சனைகள், மூலம், பௌத்திரம், குழந்தைப் பேரிண்மை, மார்பகக் கட்டிகள், ப்ராஸ்டேட், மூட்டுவலி, சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, இரத்தசோகை, இருதய நோய்கள், வயிற்றுப்போக்கு, கண்நோய்கள், குழந்தை நோய்கள் போன்றவை குணமாகும்.

குறுகிய கால நோய்களான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, வயிற்றுவலி போன்றவையும் உடனடியாக குறைக்க முடியும்.

நோயை அல்லாமல் நோயாளியின் அறிகுறிகளை வைத்து மருந்து கொடுப்பதால் எந்த நோயாக இருந்தாலும் ஹோமியோபதியில் பார்க்க முடியும்.

Courtesy: Theekathir

1 comment:

VELU.G said...

ஹோமியோபதி பற்றி நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டேன்