Friday, August 27, 2010

வறண்ட பகுதிகளில் நீர்ப்பாதுகாப்பு

லட்சக்கணக்கான மரங்களை நடுதல், நூற்றுக்கணக்கான தடையணைகளை வடிவமைத்தல், வறண்ட பகுதிகளில் மரக்கன்றுகளை வளர்க்க புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்தல் ஆகியவை குஜராத் மாநில ராஜ்காட்டைச் சேர்ந்த பிரேம்ஜிபாய் படேலின் சாதனைகள். அவரது மரம் நடும் முயற்சிகள் ராஜ் காட்டில் தொடங்கி இன்று மகாராஷ்ட்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங் கள் வரை விரிவடைந்துள்ளன
(தகவல் : தி இந்து).

பை நிறைய விதைகளையும் சிறிய மண்வெட்டியையும் சுமந்து கொண்டு வயல் வரப்புகளில், சாலையோரங்கள் மற்றும் காலி நிலங்களில் விதைகளை விதைப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த வழிமுறை மிகவும் காலம் தாழ்த்தக் கூடியது என் பதால், பெட்ரோலினால் இயங்கும் ஒரு விதைதூவி இயந்திரத்தை அவர் வடிவமைத்தார். விதைகளை வீசித் தூவும் அந்த இயந்திரத்தை ஒரு வாகனத்தில் ஏற்றி விரைவாக விதைகளை விதைக்க முடியும். ரூ. 12,000 செலவில் வடிவ மைக்கப்பட்ட இந்த இயந்திரம் 15 மீட்டர் தூரத்திற்கு விதைகளை வீசியெறியக் கூடியது. அதைப் பயன்படுத்தி பல கிராமங்களில் 10 டன் புளியம் விதைகளை அவரால் மிகக் குறுகிய காலத்தில் விதைக்க முடிந்தது.

கட்ச், புஜ், சௌராஷ்ட்ரா போன்ற வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிக ளில் மரம் நடுவதற்குப் புதிய வழிமுறை யையும் பிரேம்ஜிபாய் கண்டுபிடித்துள்ளார். 7 இன்ச் விட்டமும் 1.5 அடி உயரமும் உள்ள பிளாஸ்டிக் குழாயை அவர் மரக்கன்றைச் சுற்றி தோண்டப்பட்ட அரை அடி ஆழம் உள்ள குழியில் இறக்கினார். மணல், மண்,கப்பி ஆகியவற்றைக் கொண்டு குழாயை நிரப்பிய பிறகு குழாயை எடுத்துவிட்டார். இதற்குப் பின் மணலில் ஊற்றப்படும் நீர் ஆவியாகி வீணாகாமல் வேர் வரை சென்றுவிடுகிறது என்பதையும் இந்த வழிமுறையைக் கடைப்பிடித்தால் மரக் கன்றுகள் நன்கு பிழைத்துக் கொள் கின்றன என்பதையும் அவர்
கண்டறிந்தார்.

தற்போது பிரேம்ஜிபாய் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள் ளார். வறட்சிப் பிரதேசங்களில் தடை யணைகளை அமைக்க அரசு மானியம் அளித்த போதிலும் விவசாயிகள் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தனர். விவசாயிகளிடையே ஆர்வம் ஏற்படுத்த சிமெண்ட் செலவை அவர்கள் ஏற்றுக் கொண்டால், தடையணைகளை அமைக்கும் பொறுப்பை பிரேம்ஜிபாய் ஏற்றுக் கொண்டார். இதற்கு ஒரு டிரஸ்டின் உதவியையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். ஆற்றுநீரின் நடுவே பெரிய கற்களை வைத்து தடையணை களை அவர் உருவாக்கினார். கற்களின் இடைவெளிகளை ஆற்று மணல், சிறு கற்கள், சிமெண்ட் ஆகியவற் றைக் கொண்டு நிரப்பினார். இவ்வாறு அமைக்கப்பட்ட 1500 தடையணைகளையும் 50000 அடி நீளம் உள்ள குழாய் களையும் பயன்படுத்தி அப்பகுதியில் கிணற்று நீர் வற்றாமல் இருக்குமாறு செய்தார். இவரது முயற்சிகளினால் வறட்சி காலங்களிலும் நீர்த்தட்டுப்பாடு இன்றி விவசாயம் செய்ய முடியும் என்பதை விவசாயிகள் உணர்ந்தனர். அண்மையில் பிரேம்ஜிபாய்க்கு நீர்வளத் துறையின் தேசிய விருது கிடைத்தது.

மேற்கொண்டு தகவல் வேண்டு வோர் அவரை 9426202340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

1 comment:

வடுவூர் குமார் said...

மனம் உவந்து பாராட்டுகிறேன்.