Sunday, July 18, 2010

உழுவதற்கும் களை எடுப்பதற்கும் ஓர் எளிய கருவி

வேகமாகச் சுருங்கிவரும் விளைநிலங்கள், கடு மையான ஆட்பற்றாக்குறை, வீழ்ந்துவரும் வருமா னம் போன்ற காரணங்களால் விவசாயத்தைத் தொட ரத்தான் வேண்டுமா என்ற கேள்வி விவசாயிக ளிடையே எழுந்துள்ளது. “குறுநில விவசாயிகளுக்கு ஒரு ஜோடி உழவு மாடுகளைப் பராமரிப்பதே பெரும் சுமையாக மாறிவந்தபோது, டிராக்டரை வாங்குவ தற்கு வங்கிக்கடன் தாராளமாகக் கிடைத்ததால் அது அவர்களுக்கு ஒரு மாற்றாக முதலில் தோன் றியது. ஆனால் மாதாமாதம் கடனைத் திருப்பிக் கட் டுவது இயலாததாக மாறி, நிலத்தையே விற்கவேண் டிய நிலைக்கு பல விவசாயிகள் தள்ளப்பட்டனர்” என்கிறார் அகமதாபாதிலுள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் நிதின் மௌரியா.

கருவி உருவான விதம்

விவசாயிகளுக்குச் சொந்தமான நிலம் ஒரு ஏக் கரோ, 10 ஏக்கர்களோ உழுவதையும் களை எடுப்ப தையும் அவர்கள் தொடர்ந்து செய்தாக வேண்டும். ஆட்பற்றாக்குறையைச் சமாளிக்க மகாராஷ்ட்ர மாநில ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி கோபால் பிஸே உருவாக்கிய கிருஷிராஜா என்ற சைக்கிள் களை எடுப்புக் கருவிக்கு விவசாயி களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உழவு மாடுகளை வாங்கக்கூட இயலாத நிலையில் இம்மாதிரி ஒரு கருவியைத் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார் பிஸே.

“எங்களுக்குச் சொந்தமான 0.8 ஹெக்டேர் நிலம் வளமான பூமிதான். கிணறு தோண்டுவதற்கு ஆட்களை அமர்த்த வசதி இல்லாததால் நானும் என் மனைவியுமே சிரமப்பட்டு ஒரு கிணற்றைத் தோண்டி னோம். ஒரு நாள் ஒரு சைக்கிளில் சில மாவு மூட் டைகளை ஏற்றிச் சென்ற ஒரு வியாபாரியைப் பார்த்த தும் உழவுக்குப் பயன்படும் வகையில் சைக்கிளை மாற்றியமைக்கும் யோசனை எனக்கு வந்தது... என்னை மாதிரியோர் ஏழை விவசாயிக்கு ஒரு ஜோடி உழவு மாடுகளைவிட ஒரு சைக்கிளைப் பராமரிப்பது கட்டுப்படியாகக் கூடியது. உழவு மாடுகளுக்குப் பதி லாக அவை செய்யக் கூடிய வேலைகளைச் செய்யும் வகையில் ஒரு சைக்கிளின் முன் சக்கரம், அச்சு, ஹாண்டில்பார் ஆகியவற்றை மாற்றியமைத்தேன்” என்கிறார் கோபால் பிஸே.

விடாமுயற்சிக்குப் பலன்

களையெடுப்பதற்கும் உழுவதற்கும் தனித்தனி யான உபகருவிகளை கிருஷி ராஜாவுடன் இணைத்துக் கொள்ள முடியும். “சைக்கிளை நான் இம்மாதிரி மாற்றி யமைப்பதைப் பார்த்து மற்ற விவசாயிகள் முதலில் கேலி யாகச் சிரித்தனர். ஆனால் நான் விடா முயற்சியுடன் பாடு பட்டேன். கடைசியில் என் உழைப்புக்குப் பலன் கிடைத் திருக்கிறது. இன்று கிருஷி ராஜாவுக்கு உள்ளூர் சந்தை யில் நல்ல கிராக்கி ஏற்பட்டுள் ளது” என்கிறார் பிஸே பெரு மையுடன். இக்கருவியைக் கொண்டு அவ்வளவாக இறுக் கம் இல்லாத மண்ணை ஓரடி ஆழம் வரை உழமுடியும். ஜல் கான் மாவட்டத்தில் 200 விவ சாயிகள் உழவு மாடுகளை விட்டுவிட்டு, கிருஷிராஜா வுக்கு மாறிவிட்டனர் (தகவல் : தி இந்து).

மேற்கொண்டு தகவல் வேண்டுவோர் திரு கோபால் பிஸேயுடன் (9970521044) அல்லது டாக்டர் நிதின் மௌரியாவுடன் (079/26732456) தொடர்பு கொள்ளலாம்.

Courtesy: Theekkathir

No comments: