அணுக்கள், தனிமங்கள் மற்றும் மூலக் கூறுகளின் பண்புகளை எளிதாக அறிவ தற்கும் அவற்றுக்கான வேதியியல் குறி யீடுகளை முடிவு செய்வதற்கும் 18-19ஆம் நூற்றாண்டுகளில் விஞ்ஞானிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்காக உழைத்து வெற்றிகண்டோர் வரிசையில் டிமித்ரி மெண்டலீவ் மிக முக்கியமானவர். தனிம அட்டவணையை உரு வாக்கியவர் இவர்தான்.
தனிமங்களை அவற்றின் அணு எடை அடிப்படையில் வரிசைப்படுத்திய போது, ஒரு குறிப்பிட்ட அணு எண்கள் இடைவெளியில் உள்ள தனிமங்களுக்கு ஒரே மாதிரியான பண்புகள் இருப்பதை அவர் கண்டார். உதாரணமாக, லித்தியம், சோடியம், பொட்டாசியம் ஆகியவை ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டவை. இவற்றின் அணு எண்கள் முறையே 3, 11, 19 (அதாவது இவற்றின் இடையே எட்டு எண்கள் இடைவெளி உள்ளது). இந்த தனிமங்களில் அணுவின் கரு வைச் சுற்றி வரும் எலெக்ட்ரான்களில் ஒரு எலெக்ட்ரான் மட்டும் வெளியே உள்ள வட்டப் பாதையில் சுற்றிவரும். இவற்றின் வேலன்ஸி ஒன்று என்று கணக்கிடப்படுகிறது. வெளியே உள்ள வட்டப்பாதை யில் எத்தனை எலெக்ட்ரான்கள் சுற்றி வரு கின்றனவோ, அதுதான் அந்த தனிமத் தின் வேலன்ஸி. பண்பில் ஒத்த தனிமங் களையெல்லாம் (தனிமக் குடும்பங்கள் என்று அவற்றை அழைக்கலாம்) ஒரே செங்குத்துப் பத்திகளில் வருமாறு ஓர் அட்டவணையில் அவர் வரி சைப்படுத்தினார். அவர் காலத்தில் தெரிந்திருந்த 63 தனிமங்களை யும் இந்த அட்டவணையில் இடம் பெறச் செய்தார். இதுவே தனிம அட்டவணை எனப்படுகிறது. இந்த அட்டவணையை உருவாக்கியது வேதியியல் வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த ஒரு சாதனை. ஒரு தனிமம் அட்டவணையில் இருக்கும் இடத்தை அல்லது அது சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்து (அதாவது அதன் அணு எண் மற்றும் எடையை வைத்து) அதன் வேதியியல் குணங்களை அறிந்து கொண்டுவிட முடியும்.
“தனிமங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த விவரங்களை ஒழுங்கு படுத்தித் தந்ததின் மூலம் தனிம அட்ட வணை வேதியியலில் ஓர் ஒழுங்கினைக் கொணர்ந்தது. இயற்பியலில் நியூட்ட னின் ஆய்வுகள் அல்லது உயிரியலில் டார் வினது கண்டுபிடிப்புகளுக்கு இணை யான மாபெரும் அறிவியல் முன்னேற்ற மாக இது கணிக்கப்படுகிறது. முற்றிலும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையி லேயே இது தயாரிக்கப்பட்டது. அரை நூற்றாண்டிற்குப் பிறகு ரூதர்ஃபோர்டு, நீல்ஸ் போர் போன்றோரின் அணுக்களின் அமைப்பு பற்றிய ஆய்வுகள் வெளியான பிறகே, கோட்பாட்டு ரீதியான விளக்கங் கள் கிடைத்தன” என்கிறது கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகளின் அகராதி.
மெண்டலீவ் 1834 பிப்ரவரி 7 அன்று சைபீரியாவில் டோபோல்ஸ் என்ற இடத் தில் பிறந்தார். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்று, ஆய்வுப் பணிகளைத் தொடர்ந் தார். 1863-ல் அப்பல்கலைக்கழகத்தி லேயே பேராசிரியராகச் சேர்ந்தார். மெண் டலீவுக்கு முன்னரே தனிமங்களை வரி சைப்படுத்துவதில் சில விஞ்ஞானிகள் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், 1871ல் ஒரு முழுமையான அட்டவணையை உரு வாக்கிய பெருமை மெண்டலீவையே சேரும். அட்டவணையில் சில இடங் களை அவர் காலியாக விட வேண்டியி ருந்தது. அந்த இடங்களை நிரப்பக்கூடிய (அதுவரை கண்டுபிடிக்கப்படாத) தனி மங்களின் குணங்களை முன்கூட்டியே அறிவித்ததுதான் அவரது சாதனை. அடுத்த 15 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப் பட்ட காலியம், ஸ்காண்டியம், ஜெர்மே னியம் ஆகிய தனிமங்களின் குணங்கள் மெண்டலீவ் முன்கூட்டி அறிவித்தபடியே இருந்தன. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்கள் எல்லாம் அட்டவணையில் அவற்றுக்குரிய இடங்களில் சேர்க்கப்பட் டன. அணு எண் 101-க்கு அவரது நினை வாக மெண்டலினியம் என்று பெயரிடப் பட்டு, அதற்கு ஆன என்ற குறியீடும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று வேதியி யல் கற்பித்தலில் மிக முக்கியமான இடத் தை தனிம அட்டவணை பெற்றிருக்கிறது.
வேதியியல் துறை போக, இயற்பியல், திரவங்களின் இயக்கவியல், வானிலை ஆய்வு, புவியியல் போன்ற துறைகளிலும் வெடிமருந்து, பெட்ரோலியம், எரிபொருள் போன்ற வேதியியல் தொழில்நுட்பத் துறைகளிலும், மெண்டலீவ் ஆய்வுகளை மேற்கொண்டார். கடல் மட்டத்திற்கு மேல் உயரத்தைத் துல்லியமாகக் கணக்கிடக் கூடிய புதுவகையான காற்றழுத்தமானி யைக் கண்டுபிடித்தார். 1887 ஆகஸ்ட் 7 அன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தை ஒரு பலூனில் பறந்து சென்று ஆய்வு செய் தார். பொருளாதாரத்தையும் கூட அவர் விட்டுவைக்கவில்லை.
மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும் மெண்டலீவ் முன்னணி யில் நின்றார். ஏராளமான விருதுகளைப் பெற்றபோதும் இவருக்குக் நோபல் பரிசு கிட்டாதது மற்ற விஞ்ஞானிகளால் ஒரு நெருடலான விஷயமாகவே பார்க்கப்பட் டது. 1907 பிப்ரவரி 2 அன்று அவர் மறைந்தபோது அவரது இறுதி ஊர்வலத் தில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் தனிம அட்டவணை அடங்கிய அட்டை களைச் சுமந்தபடி கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
Courtesy: Theekkathir
1 comment:
//வெளியே உள்ள வட்டப்பாதை யில் எத்தனை எலெக்ட்ரான்கள் சுற்றி வரு கின்றனவோ, அதுதான் அந்த தனிமத் தின் வேலன்ஸி. //
தவறு நண்பரே, ஒரு அணு, தனக்கு மிக அருகிலிருக்கும் செயலறு வளிமம் (noble gas) இன் electronic configuration ஐப் பெறுவதற்கு பெற, இழக்க அல்லது பகிர வேண்டிய எலெக்ட்ரான்களின் எண்ணிக்கைதான் வேலன்சி.
உ+ம்: Chlorine இன் electronic configuration 2,8,7. அதன் அருகிலிருக்கும் செயலறு வளிமம் ஆர்கன் (2,8,8). எனவே குளோரின் ஆர்கனின் electronic configuration ஐ அடைய ஒரு எலெக்ட்ரானைப் பெறவேண்டும். அந்த ஒன்று எனும் எண்தான் Chlorine இன் வேலன்சி. (Chlorine இன் வெளிப்புற ஓட்டில் ஏழு எலெக்ட்ரான்கள் உள்ளன)
உங்கள் பதிவை நீண்ட நாட்களாக ரீடரில் படிக்கிறேன்.. நல்ல பதிவுகள். ஆனால் கமென்ட் செய்யும்போது வரும் வேர்ட் வேரிபிகேஷனை நீக்கி விட்டால் நல்லது. தமிழில் தட்டச்சும்போது கஷ்டமாக உள்ளது.
Post a Comment