பெரிய நீர்த்தேக்கங்கள் நிலநடுக்கத்தை ஏற்படுத்தவல் லவை என்பதை 1967-ல் மகா ராஷ்டிர மாநில கொய்னா நில நடுக்கம் ஏற்படும்வரை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. 6.3 ரிக்டர் அளவுக்கு இருந்த அந்த நிலநடுக்கம், பூகம்ப மையத்திலிருந்து (நயீiஉநவேசந) 230 கிலோமீட்டர் வரை அதிர்வை ஏற்படுத்தி யது; கொய்னாநகர் என்ற கிராமத்தையே அழித்து, 180 பேரைப் பலிகொண்டது ; 1500 பேரைப் படுகாயப்படுத் தியது; ஆயிரக்கணக்கா னோர் தங்கள் வீடுகளை இழந்தனர் ; அணைக்கட்டே சேதமடைந்தது ; மின்சார உற்பத்தி நின்றது ; மும்பை தொழிற்சாலைகள் ஸ்தம்பித் தன. 1962-ல் கட்டப்பட்ட கொய்னா அணையின் கார ணமாகவே அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதென்பது விஞ்ஞானி களின் கணிப்பு. தேக்கப்பட்ட நீரின் அபரிமிதமான அழுத் தம் காரணமாக பூமிக்கடியில் உள்ள தட்டுகளில் மாற்றம் ஏற் பட்டு பூகம்பத்தில் போய் முடிந் தது. அந்த பூகம்பத்திற்கு முன் னரும் அவ்வப்போது நிலநடுக் கங்கள் ஏற்பட்டதுண்டு. 2005-ம் ஆண்டுவரை அங்கு 19 நிலநடுக்கங்கள் பதிவா கின. (நிலநடுக்கத்தின்போது வெளிப்படும் சக்தியைக் குறிக்க ரிக்டர் என்ற அளவுகோலைப் பயன்படுத்துகின்றனர். (ரிக்டர் அளவு 5-க்கு மேல் இருந்தால் அதிக சேதாரத்தை ஏற்படுத் தக் கூடியது என்று புரிந்து கொள்ளலாம். ரிக்டர் 6 என் பது ஒரு மெகாடன் டி.என். டி.க்கும் ரிக்டர் 8 என்பது ஒரு பில்லியன் டன் டி.என்.டி.க்கும் சமம். ஒரு மெகாடன் டி.என். டி. = 4.184 ஓ 109 ஜூல். இங்கு டி.என்.டி. என்பது டிரை நைட்ரோ டொலுவீன் என்ற ஒரு வெடிமருந்துப் பொருள்.
கடந்த ஆண்டு சீனாவில் 8 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பம் 87000 பேரைப் பலி கொண்டது. இது 156 மீட்டர் உயர ஜிமிங்க்பு அணையில் தேக்கப்பட்டிருந்த 1.1 மில்லி யன் கியூபிக் மீட்டர் கன அளவு நீர் கொடுத்த அழுத்தத் தின் காரணமாகவே ஏற்பட்டது.
பெரும்பாலான நிலநடுக் கங்கள் இயற்கையின் சீற்றங் களே என்றாலும், பெரிய அணைகள் புவியியலில் உள்ள குறைபாடுகளைத் தீவிரப் படுத்தி நிலநடுக்கம் உருவா கும் ஆபத்தை அதிகரிக்கின் றன என்பது உலகம் முழுவதும் உள்ள 100 நீர்த்தேக்கங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள கொய்னா, ஜாம்பியாவில் உள்ள காரிப் ஏரி, கிரீஸிலுள்ள கிரமிஸ்டா ஏரி, அமெரிக்கா வில் உள்ள மியட் ஏரி, இத் தாலியில் உள்ள வையோண்ட் ஏரி, ரஷ்யாவில் உள்ள மர்க் அணை, ஜப்பானில் உள்ள குரோமா அணை ஆகியவை உள்ள பகுதிகள் நீர் அழுத்தம் கூடியதால் நிலநடுக்கங்கள் அதிகரித்ததற்கான உதார ணங்கள். இந்தியாவில் 1980-களில் ஏற்பட்ட ஒன்பது நில நடுக்கங்களில், ஐந்து, நீர்த் தேக்கங்களின் காரணமாக ஏற்பட்டவை. கட்டப்படும் அணைகள் சிறியவையாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன.
ஆதாரம் : ‘தி இந்து’ இதழில் சிதேஷ் பாட்டியா எழுதிய கட்டுரை.
No comments:
Post a Comment