மதிய உணவிற்குப் பிறகு சுமார் ஒரு மணி நேரம் உறங்கி விழிக்கும் மாணவர்கள், அப்படித் தூங்காமல் விழித்திருந்த மாணவர்களைவிட கற்கும் விஷயங்களை நன்கு உள்வாங்க முடி கிறது என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானி கள். தூக்கம் அவர்களது மூளைக்கு புத் துணர்ச்சியை அளிப்பதுதான் காரணம். இரவு முழுவதும் விழித்திருக்கும் மாணவர்கள், புதிய விஷயங்களை மனதில் ஏற்றிக் கொள்ளும் திறனில் 40 சதத்தை இழந்துவிடுவதாகவும் அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாத்யூ வாக்கர் குழு, 39 மாணவர் களை சோதனைக்கு எடுத்துக் கொண்டு, அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்துக் கொண்டது. மதிய நேரத்தில் நினைவாற் றலுக்கு வேலை கொடுக்கும் ஒரு கற்றல் பயிற்சி அவர்கள் அனைவருக்கும் கொடுக்கப் பட்டது. இரண்டு மணி நேரம் கழித்து ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் சிறிது நேரம் தூங்க அனுமதிக்கப்பட்டனர். அடுத்த குழு மாண வர்கள் தூங்கவில்லை. மாலையில் அவர்கள் அனைவருக்கும் நினைவாற்றல் பயிற்சி மீண்டும் கொடுக்கப்பட்டது. தூங்கி விழித்த மாணவர்கள், விழித்திருந்த மாணவர்களை விட ஆற்றலை நன்கு வெளிப்படுத்தினர். அது மட்டுமல்ல, மதிய நேரத்தில் காண்பித்த ஆற்றலைவிட அதிகமாக மாலையில் காண் பிக்க முடிந்தது.
நமது மாணவர்கள் மீதும் இந்த சோதனை யை நடத்தி, சிறிதளவு கண்ணயர்வதன் கார ணமாக கற்றல் திறன் மேம்படுகிறதா என நமது ஆய்வாளர்கள் ஓர் ஆய்வினை நடத்து வது நல்லது.
வகுப்பில் தூங்கிவிழும் மாணவர்களை ஆசிரியர்கள் எழுப்பிக் கேட்டால், “கொஞ்சம் தூங்கி எழுந்து கவனிச்சா மூளையிலே நல்லாப் பதியும்னு நீங்கதானே சார் சொன் னீங்க?” என்று இனி சொல்லக் கூடும் !
No comments:
Post a Comment