Tuesday, March 16, 2010

மிருகங்களும் சிந்தித்து முடிவெடுக்கின்றன


கொஞ்ச நேரம் நிதானமாக யோசிக்கிறார், சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று வேலையை ஆரம்பிக்கிறார். இதை சிந்தித்து முடிவெடுத்தல் என்கிறோம். மிருகங்கள் இப்படி சிந்தித்து முடிவெடுக்கின்றனவா அல்லது எந்திரம் போல வெளியிலிருந்து வரும் தூண்டுதலுக்கு ஏற்ப ஆட்டோமேட்டிக்காக முடிவெடுக்கின்றனவா என்பது பெரும் சர்ச்சையாக இருந்து வருகிறது. யூனிவர்சிட்டி ஆஃப் பஃப்பெல்லோவைச் சேர்ந்த டேவிட் ஸ்மித் என்பவர் டால்ஃபின், குரங்குகள், புறாக்கள் போன்ற எளிய மிருகங்களும் தம்மை உணர்கின்றன, யோசிக்கின்றன, மனத்தில் தீர்மானம் செய்தபிறகு செயலில் ஈடுபடுகின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

டால்ஃபினுக்கு ஒரு சோதனை தந்தபோது அது சிறிது நேரம் நிதானித்து அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை முடிவு செய்துவிட்டு பின் செயலில் இறங்குவதை அவர் குறிப்பிடுகிறார். பரிணாமத்தில் ஏதோ ஒரு விலங்குக் கூட்டத்தில்தான் உணர்வு பிறந்திருக்கிறது. அதன் காரணமாக சிந்தனையும் தோன்றியிருக்கிறது என்று அவர் தெரிவிக்கிறார். பறவை பாலூட்டிகளிடம் அது இருப்பதால் அதற்கும் முந்தைய ஊர்வனவற்றில் அது தோன்றியிருக்கலாம் என்று தெரிகிறது.

No comments: