Thursday, March 18, 2010

சர். சி.வி. ராமன் (1888-1970)

சந்திரசேகர் வெங்கடராமன் தமிழ் நாட்டில் திருச்சி அருகே உள்ள திருவா னைக்காவலில் 1888-ஆம் ஆண்டு பிறந் தார். சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்த அவர் தனது 15-வது வயதில் இயற்பியல் மற்றும் ஆங்கில பி.ஏ. ஹானர்ஸ் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். பிறகு அதே கல்லூரியிலிருந்து முதுகலைப் படிப் பிலும் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். அறிவியல் ஆர்வம் மிக்கவரா னாலும், அத்துறையில் அன்று வேலை வாய்ப்புகள் குறைவாக இருந்த காரணத் தினால் கொல்கத்தாவில் நிதித் துறை அலுவலகத்தில் வேலையில் சேர்ந்தார். எனினும் ஓய்வு நேரங்களில் கம்பி / நரம்பு வாத்தியங்கள் மற்றும் தாளவாத்தியங் களின் ஒலி தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

நோபல் பரிசு

10 ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்தபிறகு 1917-ல் கொல்கத்தா பல் கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத் தது. ஒளிச்சிதறல் பற்றிய அவரது கண்டுபிடிப்புகள் உலகின் கவனத்தைக் கவர்ந்தன. பிரிட்டிஷ் அர சின் கௌரவப் பட்டத்தைப் பெற்றதால் `சர்’ என்ற அடைமொழி அவரது பெயரு டன் சேர்ந்து கொண்டது. 1933-ல் பெங்க ளூரு இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்த அவர் 1948 வரை அங்கு பணி புரிந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிற கும் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். ஒளியியல் துறையிலும் ஒலியியல் துறையிலும் அவரது ஆராய்ச் சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஐரோப்பாவில் நடந்த ஒரு விஞ் ஞானிகள் மாநாட்டிற்குக் கப்பலில் சென்று கொண்டிருந்தபோது கடல் ஏன் நீலமாக உள்ளது என்பது பற்றிய கேள்வி அவருள் எழுந்தது. இதற்கான காரணத்தையும் வானம் நீலநிறமாகத் தோன்றும் காரணத் தையும் அவர் பின்னர் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பிற்காக 1930-இல் அவர் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். அறிவியலில் இந்த உயரிய விரு தைப் பெற்ற முதல் இந்தியர் மட்டுமல்ல, முதல் ஆசியரும் அவரே.

ராமன் விளைவு

ஒரு பொருள் மீது ஒளி பட்டு அது பல திசைகளிலும் சிதறடிக்கப்படுவது ஒளிச் சிதறல் எனப்படுகிறது. ஒளியின் ஒழுங் கற்ற பிரதிபலிப்பே ஒளிச்சிதறல் ஆகி றது. காற்றில் உள்ள தூசுகள் கூட ஒளிச் சிதறலை நிகழ்த்தக் கூடியவை. இப்படி ஒளிச்சிதறல் ஏற்படுவதால்தான் அப் பொருளை நாம் பார்க்க முடிகிறது. ஒளி ஒரு ஊடகத்தின் வழியாகச் செல்லும் போது அது ஒளிச்சிதறலுக்கு உள்ளாகி றது. அப்படி உள்ளான பிறகு, பெரும்பான் மையான ஒளி அதே அலை நீளத்துடன் இருந்தாலும் மிகச் சிறிய ஒரு பகுதியின் அலைநீளம் சற்று மாறிவிடுகிறது. இதை ராமன் 1928ஆம் ஆண்டில் கண்டுபிடித் தார். இது `ராமன் விளைவு (சுயஅயn நுககநஉவ)’ என்று அழைக்கப்படுகிறது.

வானம் நீலவண்ணமாகத் தோன்றக் காரணம்

வானத்திற்கு நீல வண்ணம் கிடைத் தது எப்படி என்பதைப் பற்றியும், இரவில் வானம் நீலநிறமாகத் தெரியாததற்கான காரணத்தையும் அறிவியல் கதிரில் ஏற் கனவே பார்த்திருக்கிறோம். சுருக்கமாக நினைவுகூர்வோம். வளிமண்டலத்தின் மூலக்கூறுகள் ஒளிச்சித றலை ஏற்படுத்துகின்றன. சூரிய ஒளியில் உள்ள ஏழு வண்ணங்களில் சிவப்பு, மஞ் சள், பச்சை நிறங்கள் நீள அலைநீளம் உடையவையாக இருப்பதால், இவற்றின் ஒளிச்சிதறல் குறைவாக இருக்கும். மீத முள்ள நிறங்களில் ஒளிச்சிதறல் அதிக மாக நடைபெறுகிறது. எந்த நிறம் அதிக மாகப் பிரதிபலிக்கப்படுகிறதோ அந்த நிறமே நம் கண்ணுக்குத் தெரியும். அதிக மாகச் சிதறல் அடையும் நீலநிறம் நமக் குப் பிரகாசமாகத் தெரிகிறது.

ஒலியியல் துறையில்...

ஒளியைப் பற்றி மட்டுன்றி ஒலி மற் றும் அதன் அதிர்வுகள், வயலின், தபலா, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் மற்றும் தாளவாத்தியங்கள் தொடர்பாக வும் ராமன் பல ஆய்வுகளைச் செய்துள் ளார். வயலினிலிருந்து எழும் இனிய இசை பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் புகழ்பெற்றவை. படிகங்கள், வைரங்கள், முத்துக்கள் போன்றவற்றின் கட்டமைப்பு பற்றி ஆய்வுகள் செய்து, இயற்பியலின் பல்வேறு துறைகளில் 475 ஆய்வுக் கட்டு ரைகளை அவர் வெளியிட்டுள்ளார். உலக அளவில் புகழ்பெற்ற இந்த இந்திய விஞ்ஞானி இளம் விஞ்ஞானிகளுக்கு ஒரு ஊக்கசக்தியாகத் திகழ்ந்தார்.

No comments: