பூமியைவிட... கொதிக்கும் வெள்ளிகோள்...!
சூரிய குடும்பத்தின் முதல் பிள்ளை புதன், இரண்டாவது குழந்தை வெள்ளி, மூன்றாவது மகன்தான் பூமி. புதன் சூரிய மையத்திலிருந்து 5.7கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. வெள்ளி 10.8 கோடிகி.மீ தூரத்தில் உள்ளது. பூமி சுமார் 15 கோடி கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால் வெள்ளியின் வளிமண்டல வெப்பம், புதனைவிட அதிகம் ஆம் புதனின் மேற்பரப்பு வெப்பம் 350சி வெள்ளியின் வெளிப்பரப்பு வளிமண்டல வெப்பம் 480சி பூமியின் சராசரி வெப்பம் 15சி மட்டும்தான். பூமி வெள்ளியைவிட 5கோடி கி.மீ தூரத்தில் இருப்பது என்ற காரணம் மட்டுமல்ல. முக்கியமாக வெள்ளியின் வளிமண்டலம் முழுவதும் கரியுமிலவாயுவின் புகைமண்டலமாக உள்ளது. வெப்பத்தின் மைய காரணி இதுவே. எனவேதான் வெள்ளிக்கோள், சூரியனுக்கு அருகில் இருக்கும் புதனைவிட வெப்பமாக உள்ளது. பூமியில் பெரும்பகுதி கார்பன்கள் நிலத்துக்கீழே ஹைட்ரோகார்பன் களாக பலவகை புதைபடிமங்களாக சேமிக்கப்பட்டிருக்கின்றன. இன்று அவற்றை எடுத்து எரிபொருளாக்கி கரியை வான்வெளியில் கச்கி, பூவியை சூடாக்கிறோம்.
மின்சக்தி உருவாக்க கார்பன் வெளியீடு....!
உலக வெப்பநிலை உயர்வுக்கு அதிக பொறுப்பு ஏற்கவேண்டியவர்கள் வளர்ந்த நாடுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளான ஸ்வீடன், நார்வே, பின்லாந்து போன்றவையும், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவும்தான். வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா போன்றவையும்கூட பங்காளிகளாகின்றன. இவர்களின் வாழ்நிலைக்காக கூடுதலான மின்சக்தி, கட்டுமானப் பொருட்களான சிமெண்ட் தயாரிப்பு மற்றும் நெகிழி பயன்பாட்டால் வெப்பம் உயருகிறது. மின்உற்பத்தி என்பது பெரும்பாலும் கரியை எரித்தே வெப்பஉலை மூலமே உற்பத்தி ஆகிறது. வீடுகள், தொழிற்சாலைகள் உருவாக்க சிமெண்ட் தேவைப்படுகிறது. வெப்பம் உயருகிறது.
அதிக மின்பயன்பாடு உள்ள பணக்கார நாடுகள்!
உலகில் அதிக மின்சக்தியை விழுங்கி ஏப்பம் விடுவதில் ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து, கத்தார், கனடா, மற்றும் குவைத் போன்றவை முன்னிலை வகிக்கின்றன. இதில் அமெரிக்கா 9வது இடத்திலும், இந்தியா 160வது இடத்திலும் உள்ளன. மோட்டார் வாகன பயன்பாடு என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, கனடா, ஜப்பான், ஸ்வீடன் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் உலகளவில் அதிகம் உள்ளன. மின்உற்பத்தி என்பது கரிப்பொருள்களை எரித்தே உருவாக்கப்படுகின்றது.
மழைக்காடுகள் உயிரின் நுரையீரல்கள்.... !
காடுகள் அழிக்கப்படுவது உலக வெப்பமயமாதலின் முக்கிய காரணிகளுல் ஒன்றாகும். உலகில் வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களில் 20% என்பது வெப்பமண்டல காடுகள் அழிக்கப்படுவதால் உண்டாகிறது. வெப்ப மண்டல மழைக்காடுகளில் மரங்களும், தாவரங்களும், வளிமண்டலத்தின் கரியுமிலவாயுவை உட்கொண்டு, ஒளிச்சேர்க்கை மூலம் 25% ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. எனவே, அமேசான் மழைக்காடுகள் உலகின் நுரையீரல்கள் என அழைக்கப்படுகின்றன.
உயிர்வளம் மிக்க மழைக்காடுகள்.... !
முன்பு உலகின் பரப்பில் 14% நிலப்பகுதி மழைக்காடுகளாக இருந்தது. இன்று மழைக்காடுகளின் அளவு 6%ஆக உள்ளது. மழைக்காடுகள் பிரேசில், வெனிசுலா, கொலம்பியா, கிழக்கு ஆன்டிஸ், ஈக்குவடார் மற்றும் பெரு போன்ற நாடுகளில் உள்ளன. அதன் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில், 750வகை தாவரங்கள் வாழ்கின்றன. உலகின் உணவு வகையில் 80% உணவுப் பொருட்கள் வெப்பமண்டல காடுகளில் விளைகின்றன. குறைந்தபட்சம் 3000 வகை பழங்கள் வெப்பமண்டல மழைக்காடுகள் மூலம் கிடைக்கின்றன. 125 வகை மருந்துகள் மழைக்காடுகளின் தாவரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. 3000வகை தாவரங்களில் புற்றுநோய்க்கான மருந்துகள் இருப்பதாக ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகளில் 70% மழைக்காடுகளில் உள்ளன. குழந்தைகளின் இரத்தப்புற்று நோய்க்கான சிறந்த நிவாரணியான நித்திய கல்யாணி யின் தாயகமும் அமேசான் காடுகளே!
மழைக்காடு அழிவு.. வெப்பமயமாதல் உயிரின அழிவு...!
மழைக்காடுகள் 5கோடி மக்களின் தாயகமாக உள்ளது. உலகின் 80% ஏழைமக்களின் வாழ்க்கை மழைக்காடுகளைச் சார்ந்தே உள்ளது.வெப்ப மண்டல மழைக்காடுகளின் அழிப்பே,காலநிலை மாற்றத்திற்கும் ,புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணியாகும் மழைக்காடுகள் அழிக்கப்படுவாதல் வருடந்தேரும் 50,000 உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன ஒவ்வொரு வினாடியும் ஒரு ஏக்கர்பரப்புள்ள மழைக்காடுகள் தாவரங்கள் விலங்குகள் மற்றும் பூச்சிகள் அழிந்து கொண்டிருக்கின்றன 90 ஆதிவாசி இனங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
காடுஅழிவின்....வெப்பமயமாதலின் காரணி...
அமேசான் மழைக்காடுகள் 9000 கோடி டன் கரியமில வாயுவை எடுத்துக்கொள்கின்றன.ஆனால் ஒரு வருடத்தில் 3.4கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன.ஒருமரம் 1 டன் கரியுமில வாயுவை உட்கொள்ளும் தன்மையுடயது.ஒவ்வொருமரம் வெட்டும் போது 1டன் கரியமிலவாயு புவியின் வளிமண்டலத்தில் கலக்கிறது வானில் பறக்கும் விமானங்களும் வளிமண்டலத்தில் கரியைக் கக்கி வெப்பத்தை அதிகப்படுத்துகின்றன.விமானம் லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானம் ஒருமுறை பறந்தாலே சுமார் 300 டன் கரியுமிலவாயு வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது.பெரிய கார்கள், ஒர்ஆண்டில் 100 டன் கரியமில வாயவை வெளிவிடுகின்றன. கார்களையும் விமாணங்களையும் அதிகமின்சக்தியையும் கட்டிடங்களையும் யார் நண்கு பயன்படுத்துகின்றனர்.உலகின் 10 சதவிதம் பணக்கார சீமான்கள் மட்டுமே வானமே கூரையாய் படுத்திருக்கும் ஏழை விவசாயா,தொழியாளியா உழைப்பாளியா.. சுமைதூக்கும்... கூலித் தொழிலாளியா யார்... யார்... யார் காரணம்.. உலகம் சூடாகி கொதிப்பதற்கு....
நன்றி: பேரா.சோ.மோகனா
No comments:
Post a Comment