Friday, March 12, 2010

சுப்பிரமணியன் சந்திரசேகர் - வானவியல் இயற்பியலாளர்

சுப்பிரமணியன் சந்திரசேகர் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய வானவியல் இயற் பியலாளர். சர்.சி.வி. இராமனுடைய மருமகன். 1910ஆம் ஆண்டு லாகூரில் (இன்றைய பாகிஸ்தான்) பிறந்தாலும் அவர் குடும்பம் சென்னைக் குக் குடிபெயர்ந்தது. மாநிலக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படிப்பை மேற்கொண்டபோது வெள்ளைக் குட்டி நட்சத்திரங்கள் (றாவைந னறயசகள) பற்றிய ரால்ஃப் ஃபவுலர் என்பவரின் ஆராய்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு தன் 18 வயதிலேயே ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைத் தயாரித்து ஃபவுலருக்கு அனுப்பினார். அது அவரை இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு இட்டுச் சென்றது. இருபது வயதில் ஃபவுலரின் கீழ் ஆராய்ச்சி மாணவராக அங்கு சேர்ந்த சந்திரசேகர் மூன்றே ஆண்டுகளில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். பின்னர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அமெரிக்கா விலும் இங்கிலாந்திலுமாக வாழ்நாள் முழுதும் விண் மீன்களின் கட்டமைப்பு, வெள்ளைக் குட்டி நட்சத்தி ரம், குவாண்டம் இயற்பியல் (ளூரயவேரஅ வாநடிசல) போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவருக்கும் வில்லியம் ஆல்ஃப்ரெட் ஃபவுலர் என்ப வருக்கும் 1983ஆம் ஆண்டு நட்சத்திரங் களின் கட்ட மைப்பு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சந்திரசேகர் வரம்பு

இவரது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக `சந்திரசேகர் வரம்பு’ கருதப்படு கிறது. நட்சத்திரங்கள் அணுச்சேர்க்கை யின் போது கிடைக்கும் வெப்பசக்தியைத் தொடர்ந்து உற்பத்தி செய்தவண்ணம் உள்ளன. சூரியனைப் போல் எட்டு மடங்கு பொருண்மை (அயளள)க்குட்பட்ட நட்சத்திரங்களில் மையத்தின் வெப்ப நிலை அங்குள்ள தனி மங்களுடைய அணுச்சேர்க்கையை ஏற்படுத்துவதற்குப் போதுமானதாக இருக்காது. எனவே அந்த நட்சத்திரங்களின் பொருண்மை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து இறுதியில் வெள்ளைக் குட்டி நட்சத்திர மாகிவிடும். ஒரு வெள்ளைக் குட்டி நட் சத்திரத்தின் அதிகபட்ச பொருண்மை 1.44 சூரியனுடைய பொருண்மை அளவே இருக்கும். சூரிய னைப்போல் குறைந்த பட்சம் எட்டு மடங்கு பொருண்மைக்குட் பட்ட நட்சத்திரங்களில் இது நடக்கிறது என்ற வரம்பைக் கண்டு பிடித்தவர் சந்திர சேகர். இதுவே `சந்திர சேகர் வரம்பு’ என அழைக்கப்படுகிறது. எல்லா நட்சத்திரங் களின் பரிணாம வளர்ச்சியின் கடைசிக் கட்டமே வெள்ளைக் குட்டி நட்சத்திரம் எனக் கருதப்பட்டது. ஆனால் அது சரி யல்ல, சந்திரசேகர் வரம்பிற்குட்பட்ட நட் சத்திரங்களுக்கு மட்டுமே இது பொருந் தும் என நிரூபித்தவர் சந்திரசேகர். சூரி யனைப் போல் எட்டு மடங்கு பொருண் மைக்கு அதிகமாக உள்ள நட்சத்திரங் களில் மையத்திலுள்ள பொருண்மை அதி கரித்துக் கொண்டே வந்து ஒரு கட்டத்தில் நட்சத்திரம் வெடித்து சிதறிவிடும். மீதி இருப்பது நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளை விண்மீன் (டெயஉம ாடிடந) எனப் படுகிறது. அதனுடைய அடர்த்தி மிக அதிகமாக இருக்கும். அதிலிருந்து ஒளி கூட வெளியேற முடியாது.

இறுதி வெற்றி அடைந்த சந்திரசேகர்

ஃபவுலரின் ஆராய்ச்சிக் கட்டுரையு டன் `தனிப்பட்ட ஒப்பீட்டுக் கொள்கை’ பற்றிய தன்னுடைய புரிதலை இணைத்து வெள் ளைக் குட்டி நட்சத்திரங்கள் கொள்கையை சந்திரசேகர் உருவாக்கியிருந்தார். இங்கி லாந்தில் அப்போது புகழ்பெற்ற வானவி யல் இயற்பியலாளர்களாக இருந்த எடிங் டனும் மில்னேயும் இந்தக் கொள்கையை ஏற்கவில்லை. அதனால் இங்கிலாந்தில் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட சந்திரசேகரால் இயலாமல் போனது. எனவே, அவர் தன் கட்டுரையை அமெ ரிக்காவுக்கு அனுப்பினார். அமெரிக்கா வின் வானவியல் இதழில் 1931-ஆம் ஆண்டில் அது பிரசுரிக்கப்பட்டது. எடிங் டன் சந்திரசேகருடைய கூற்றை நிராக ரித்ததற்குக் காரணம் இருந்தது. அவர் தன் வாழ்நாள் முழுதும் செலவழித்து எந்த நட்சத்திரமும் - அதன் பொருண் மை எவ்வளவு இருப்பினும் - நிலையான கட்டமைப்பைக் கொண்டது என்று நிறு வுவதற்குப் பாடுபட்டிருந்தார். கடைசியில் சந்திரசேகரின் கூற்றுதான் சரி, எடிங்ட னுடைய நிலை தவறானது என்று நிரூ பணமாயிற்று.

ஆசிரியர், எழுத்தாளராக...

ஏராளமான அறிவியல் புத்தகங்களை எழுதிக் குவித்தவர் சந்திரசேகர். பல சர் வதேச விருதுகளும் அவரைத் தேடி வந் தன. அவர் ஓர் உற்சாகமான ஆசிரியர். உலகெங்கும் அவரது வகுப்புகளை விரும்பி ஏற்ற மாணவர்கள் இருந்தனர். 1983-ல் அவர் வெளியிட்ட `கருந்துளை விண்மீன்களின் கணிதவியல் கோட்பாடு ’ என்ற நூல் புகழ்பெற்றது. உலக அளவில் முக்கியமான வானவியல் இயற்பியலாளர் களுள் ஒருவராக சந்திரசேகர் மதிக்கப் படுகிறார்.

1 comment:

Thamizhan said...

இந்த விஞ்ஞானி ஒரு பகுத்தறிவாளர்,
கடவுள் மறுப்பாளர் என்பது பலருக்குத் தெரிய வேண்டும்.
நோபெல் பரிசிபெற்ற பல விஞ்ஞானிகள் பகுத்த்றிவாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள்.
அமர்த்தியா சென் உள்பட.
கடவுள் மறுப்பாளர்களைப் பற்றி அவர்கள் அறிவாளிகள் அல்ல, ஒழுக்க சீலர்கள் அல்ல என்ற எண்ணம் தவறானது என்று உலகே அறிந்து வருகிறது.
ஒழுக்கத்திற்கு மதமோ,கடவுளோ தேவையில்லை.