Thursday, March 4, 2010

தேசியநீர்க் கொள்கை

2008-ஆம் ஆண்டில் உலக அளவில் நீர்த்தேவைகள் குறித்து ஆராய, 2030 நீர்வளங்கள் குழுமம் (2030 றுயவநச சுநளடிரசஉநள ழுசடிரயீ) என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 2030-ல் வருடாந்திர தேவை 1500 கியூபிக் கிலோ மீட்டராக உயர்ந்துவிடும் என்றும், கிடைப்பதோ 744 கியூபிக் கிலோ மீட்டராக மட்டுமே இருக்கும் எனவும் அந்த அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அப்படியெ னில் பற்றாக்குறை 50 சதவீதமாக இருக்கும் !

நீர்த்தேவையை இன்னொரு விதமாகவும் அளவிடலாம். இந்தியாவில் பெய்யும் மழையின் சராசரி வருடாந்திர கன அளவு 3840 கியூபிக் கி.மீ. இதில் 15 சதவீதத்தை மக்களின் பயன்பாட்டிற் குத் திருப்பிவிட முடியுமெனில் வருடம் சுமார் 600 கியூபிக் கி.மீ. மட்டுமே கிடைக்கும்.

வருகிறது கடுமையான

நீர் நெருக்கடி

இந்த புள்ளி விவரங்கள் எவ்வளவு கடுமையான நீர் நெருக்கடியை நாம் சந்திக்க இருக்கிறோம் என்பதைக் காட்டு கின்றன. பொருளாதார வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் தேவைகளையும், மக்களின் அடிப்படைத் தேவைகளையும் கிடைக்கும் தண்ணீரை வைத்து சமா ளிப்பது சவால் மிகுந்த ஒரு பிரச்சனை யாக இருக்கப்போகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தண்ணீர் தாராளமாகக் கிடைத்துவரப் போகிறது என்றே அரசு நினைத்தது. அத னால்தான் தண்ணீர் மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட ஒரு பொருளாக்கப் பட்டது. இரு மாநில அரசுகளுக் கிடையே நீர்த்தகராறு ஏற்படும்போது மத்திய அரசு சமரசம் செய்யும் ஒரு பணியை மட்டும் செய்துகொள்ளலாம் என கருதப்பட்டது. இந்திய மக்கள் அனைவருக்குமான வாழ் வியல் ஆதாரமாக நீரைக் கருதி அதன் பயன்பாட்டையும் பகிர்வையும் பற்றி அரசி யல் சட்டம் ஆழமாகப் பரிசீலிக்கவில்லை. சமத்துவ நீதியின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்ள அறிவியல்பூர்வமான ஓர் ஏற்பாட்டை அப்போது உருவாக்காத தால் தேசிய நீர்க் கொள்கை என்பதும் நம் நாட்டிற்கு இல்லாமல் போய்விட்டது.

ரஷ்யா நீங்கலாக உள்ள ஐரோப்பா கண்டத்தின் பரப்பளவும் இந்தியாவின் பரப்பளவும் ஏறத்தாழ ஒன்றுதான். இந் தியாவில் 28 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. ஐரோப்பாவில் 27 சுதந்திர நாடுகள் உள்ளன. 2000-ஆம் ஆண்டில் தொடர்ந்து நீர் கிடைத்து வருவதற்கேற்ற நீர் நிர்வாக லட்சியத்தை அடைவதற்கான ஆணையை ஐரோப்பிய யூனியன் வெளியிட்டது. அதன்படி மக் கள் ஒத்துழைப்புடன் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆற்றுப் படுகைகளுக்குப் பொருந்தும் பொதுவான நீர்க் கொள்கை களின் அடிப்படையில் நீர்ச்சட்டங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும். “மற்ற எந்த பொருளையும் போல தண்ணீர் ஒரு வணிகப் பொருள் அல்ல ; மாறாக, பாது காக்கப்பட வேண்டிய ஒரு பாரம்பரியம் ; அதை அப்படியே கருத வேண்டும்” என அந்த ஆணை முன்னுரையில் குறிப்பிடுகிறது.

இந்தியாவிலும் ஒரு தேசிய நீர்க் கொள்கையை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

நீர்த்தேவையை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று, குடிப்பதற் கும், சமையல், குளியல், தனிப்பட்ட சுகா தாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தேவைப்படு வது ; இரண்டு, விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா, பொதுசுகாதாரம் போன்ற தேவைகள். இதில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட தேவைகள்தான் சமா ளிக்க முடியாத நெருக்கடியை ஏற்படுத்து கின்றன.

எல்லையில்லாமல் கிடைப்பது சாத்தியமல்ல

கடந்த காலத்தில் இத்தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது எப்படி என்ற சிந்தனையே மேலோங்கியிருந்தது. ஆனால் இன்று நீர் எல்லையில்லாமல் கிடைத்துக் கொண்டே இருப்பது சாத்திய மல்ல என்ற புரிதல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, நீர்த்தேவையை எந்தெந்த அள வில் குறைக்கலாம் என்று நாம் சிந்திக்க வேண்டிய கட்டம் வந்திருக்கிறது. தற் போது தமிழ்நாடும், கர்நாடகாவும் கேட் கின்ற நீர்த்தேவையை நிறைவேற்ற இரண்டு காவிரி ஆறுகள் இருந்தாலும் போதாது ; அதே போல, இந்தியா, பாகிஸ் தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடு கள் கோருகின்ற நீர்த்தேவையை நிறை வேற்ற இரண்டு சிந்து நதிகள், இரண்டு கங்கை நதிகள் இருந்தாலும் போதாது. எனவே, நீர்த்தேவை என்பது நமது விருப் பத்திலிருந்து அல்லாமல், இயற்கை, சுற் றுச்சூழல், பூமி ஆகியவற்றின் உள்ளார்ந்த ஆற்றலோடும் அவை விதிக்கின்ற எல் லைகளோடும் பொருந்திவருவதாக இருக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளை நாம் குறைத்துக் கொள்ள முடியாது. அத னால் நீர்நெருக்கடியை சமாளிக்க ஒரே வழி, இரண்டாவது வகை தேவைகளைத் திட்டமிட்டுக் குறைப்பதுதான். இதற்கான ஆழமான ஆய்வில் நாம் இறங்கி ஒரு தீர்வைக் கண்டால்தான் நமது எதிர் காலம் பாதுகாப்பாக இருக்கும்.

(ஆதாரம் : தி இந்து நாளிதழில் டி.என். நரசிம்மன், ராமசாமி ஆர். அய்யர் ஆகிய இருவர் எழுதிய கட்டுரைகள்)

நன்றி: பேராசிரியர் கே.ராஜு

No comments: