பறவைகள், பாலூட்டிகள் அனைத்தும் வெப்ப ரத்த பிராணிகள் என, நாம் பள்ளியிலேயே படித்திருக்கிறோம். இது என்ன குளிர் ரத்த பாலூட்டி ஆடு என்று புதுசாக ஒரு கதையை அவுத்து விடுகிறீர்கள் என கிண்டலடிக்கிறீர்களா...? நண்பா இது முற்றிலும் உண்மை. 916- தங்க உண்மையப்பா...! ஆம்... இந்த விலங்கினம் பற்றி இதன் தொல்படிமத்தை இப்போதுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவலை, அறிவியல் அகாடமி இதழ் 18.11.09ல் வெளியிட்டுள்ளது.
பறவைகளும், பாலூட்டிகளும் ஊர்வன வகையிலிருந்து பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை என பரிணாம வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஊர்வன இனங்களிலிருந்து ஒரு பிரிவு பறவை இனங்களாகவும், பாலூட்டிகள் தனியாகவும் பிரிந்தன. அப்படி உருவானபோது.. அவைகளின் துவக்ககால உறுப்பினர்கள், ஊர்வன, பாலூட்டி இரண்டுக்குமான குணங்களைப் பெற்றிருந்தன. அது போன்ற உயிரிகள் எப்போதோ உலகிலிருந்து விடைபெற்று சென்றுவிட்டன. அவைகளில்... பனியூழிக்காலத்தின் இயற்கைப் பேரழிவால், பூமிக்குள்ளும், பனிப்பாறைக்குள்ளும் புகையுண்டவைகளில் ஒரு சிலவற்றை, தற்போது எப்போதாவது கண்டுபிடிக்கின்றனர், அறிவியல் அறிஞர்கள்! அதுபோன்ற ஒன்றுதான் இந்த குளிர் ரத்த பாலூட்டி ஆடு!
இப்போது கண்டுபிடித்துள்ள குளிர் ரத்த பாலூட்டி ஆட்டின் பெயர் ‘மயோடிராகஸ் பாலெயரிகஸ்’ (ஆலடிவசயபரள யெடநயசiஉரள) என்பதாகும். இது மறைந்துபோன பாலூட்டிதான். இருந்தாலும், இது பற்றிய தகவல்கள் படு சுவையாக உள்ளன. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஆடு, குளிர் ரத்த பிராணியாக இருந்திருக்கிறது என்றால் ஆச்சரியமான விஷயம் அல்லவா? இந்த சுவைமிகு தகவல், கண்டுபிடிக்கப்பட்ட ஆட்டின் எலும்பு தடயங்களிலிருந்து, இந்த ஆடு, குளிர் ரத்த பிராணியாக வாழ்ந்திருக்கிறது என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மயோடிராகஸ் பாலெயரிகஸ் என்ற ஆடு, மத்திய தரைக்கடல் தீவுகளில் ஒன்றான, ‘மஜோஸ்கா’ (ஆயதடிளஉய)வில் வாழ்ந்ததாம். மிகமிகக்குறைவான வளங்களுடன், உணவு போதாமல் வாழ்ந்திருக்கிறது. ஆனால் அதன் குணங்கள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் யாவும், ஊர்வன இனங்களையே ஒத்துள்ளன. இதன் வளர்ச்சியும், வளர்சிதை மாற்றமும், ஊர்வன வகைகளையே சார்ந்துள்ளது. அந்த காலத்தில் ஏற்பட்ட மாறும் கால நிலைக்கேற்ப தன் உடல் வெப்பநிலையையும், வளர்சிதை மாற்றத்தையும் அமைத்துக் கொண்டு, சீராக, சிக்கல் மிகுந்த கொடுமையான கால நிலையில், வாழ்நிலையில், உயிரை தக்கவைத்து வாழ்ந்திருக்கிறது. பெரிய பாலூட்டிகள், வாழ முடியாத குறைமிகு வளங்களே அப்போது அங்கு இருந்தன என்பதை, அதன் உடல், எலும்புத் தகவல்களிலிருந்து, நவீன ஆய்வு முறையால் அறிஞர்கள் கணித்துள்ளனர். இதிலிருந்து, ஊர்வன வகைகளிலிருந்துதான், பாலூட்டிகள் உருவாயின என்ற பரிணாம உண்மையை நிரூபிக்கும் நிஜமாக விளங்குகிறது ‘மயோடிராகஸ் பாலெயரிகஸ்’ - பாலூட்டி குளிர்ரத்த ஆடு? இது எப்படி இருக்கு?
நன்றி: பேராசிரியர் சோ.மோகனா
No comments:
Post a Comment