Wednesday, December 30, 2009

இந்திய அறிவியல் சந்திக்கும் சவால்கள்

டிசம்பர் 12, 2009 தேதியிட்ட `தி இந்து’ நாளிதழில் இந்தப் பொருள் பற்றி புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசிய நிறுவனத்தின் (சூயவiடியேட ஐnnடிஎயவiடிn குடிரனேயவiடிn) தலைவர் முனைவர் ஆர்.ஏ. மாஷேல்கர் ஆழமான சில விஷயங்களைக் குறிப்பிடுகிறார். அவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

‘அறிவியலில் புதிய கருத்துக்களை எதிர்கொள்வதைவிட ஊறிப்போன பழைய விஷயங்களிலிருந்து மீள்வது சிரமமானது. அறிவியலில் படைப்பாற்றலுடன் முன்னேற ஒரு குறிப்பிட்ட அளவு `மரியாதையின்மை (ஐசசநஎநசநnஉந) தேவைப்படுகிறது” என் கிறார் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரிச்சர்டு ஃபேன்மென். இது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருத்து.

ஐந்து சவால்கள்

`மரியாதையின்மை’ என்றதும் பிறரிடம் அலட்சியமாக நடந்து கொள்வது என்று புரிந்து கொள்ள வேண்டாம். கேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதையே `மரியாதையின்மை’ என்று ஃபேன்மென் குறிப்பிடுகிறார். இந்திய அறிவியலில் முன்னேற முதல் சவாலாக இருப்பது `மரியாதையின்மை’யை எப்படி வளர்த்துக் கொள்வது என்பதுதான் ! அது மட்டுமல்ல, கல்வியமைப்பு நெகிழ்வுத்தன்மையே இல்லாத, கற்பனைத் திறனை ஊக்குவிக்காத பாடத்திட்டங்கள் கொண்டதாக இருக்கக் கூடாது. `மனப்பாடம் செய்து கற்றல்’ என்ற முறையைக் கைவிட்டு `செயல் மூலம் கற்றல்’ என்ற முறைக்கு மாறவேண்டும். ஒரு கேள்விக்கு ஒரு விடைதான் சரியானது எனும் பார்வையுடைய தேர்வு முறைகளை ஒழித்துக்கட்ட வேண்டும்.

நமது அரசியலமைப்பு முறையில் மக்களைவிட, அபாயங்களை எதிர்கொண்டு புதியனவற்றைக் கண்டுபிடிப்பவர் களைவிட அதிகார வர்க்கமே செல்வாக்கு மிகுந்ததாக இருக்கிறது. இந்நிலையை மாற்றி, கேள்வி கேட்கும் மனப்பான்மையும் ஆரோக்கியமான `மரியாதையின்மை’யும் இயல்பாக வளரக்கூடிய, புதிய கண்டுபிடிப்புகளைத் தருபவர் களை ஊக்கப்படுத்தக் கூடிய சூழலை உருவாக்குவதே இந்திய அறிவியலின் இரண்டாவது சவால்.

உண்மையிலேயே புதியனவற்றைக் கண்டறியும் ஆர்வமுடைய விஞ்ஞானிகளை உருவாக்குவதே மூன்றாவது சவால். இப்படிப்பட்டவர்கள் எல்லோரும் பார்க்கக்கூடியவற்றையே பார்த்தாலும், வேறு யாரும் சிந்திக்காத புதிய கோணத்தில் அவற்றைப் பற்றி சிந்திப்பார்கள். 2005-ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற வாரனும் மார்ஷலும் இப்படிப்பட்ட சிந்தனையாளர்கள். வயிற்றுப்புண் மற்றும் வீக்கத்திற்கு உணவிலும் வாழ்வியல் முறையிலும் உள்ள ஒழுங்கின்மையின் விளைவாக அதிகப்படியாகச் சுரக்கும் அமிலமே காரணம் என எல்லோரும் கருதியபோது இவர்கள் மட்டும் ஹீலியோபார்டர் பைலோரி என்ற நுண்ணுயிர்தான் காரணம் என்று கூறினார்கள். இதனால் மற்றவர்களின் கேலிக்கு ஆளானபோதும் இவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. தங்களது கண்டுபிடிப்பில் உறுதியாக நின்றார்கள். இறுதியில் அவர்கள் கூற்றுதான் சரியானது என்பது நிரூபணமானது.

கடுமையான சிக்கல்களுக்கு தீர்வு கண்டுபிடிப்பது மட்டும் போதாது. புதிய கேள்விகளை எழுப்பக்கூடிய திறமை அறிவியலாளருக்கு வேண்டும். இது அறிவியலின் நான்காவது சவால். உதாரணமாக, மரபணுவுடைய மூலக்கூறின் தன்மையைக் கண்டறிய முடியும் என ஜேம்ஸ் வாட்ஸன் உறுதியாக நம்பினார். அதற்காகக் கடுமையாக உழைத்தார். இதற்காக ராக்பெல்லர் ஸ்காலர்ஷிப்பை அவர் இழக்க வேண்டிவந்தது. கடைசியில் ஜெயித்தார். 2020-க்குள் புற்று நோய்க்கு சிகிச்சையைக் கண்டுபிடித்துவிட முடியும் என்பது அவரது அழுத்தமான நம்பிக்கை.

இந்திய அறிவியலில் பாரம்பரிய முறையில் சிந்திப்பதை விடுத்து மாற்று சிந்தனைகளைத் தூண்டிவிடக் கூடிய புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதே ஐந்தாவது சவால்.

இந்திய அறிவியலில்

10 சாதனைகள்

2003-ல் பிரபல விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் இந்திய அறிவியலில் இருபதாம் நூற்றாண்டின் 10 சாதனைகளைப் பட்டியலிட்டார். இவர்களில் 1950-க்கு முன் சாதித்தவர்களாக ராமானுஜம், மெக்னாட் சாஹா, எஸ்.என். போஸ், சி.வி. ராமன், ஜி.என். இராமச்சந்திரன் ஆகிய ஐவரையும் 1950-க்குப் பிந்தைய சாதனைகளாக பசுமைப் புரட்சி, விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி, சூப்பர்கண்டக்டிவிடி, சிஎஸ்ஐஆரின் (இந்திய அறிவியல் மற்றும் தொழில்வளர்ச்சிக் கழகம்) வளர்ச்சி ஆகிய ஐந்தையும் அவர் குறிப்பிடுகிறார். 1950-க்குப் பின் தனிப்பட்ட சாதனையாளர்களை நம்மால் ஏன் உருவாக்க முடியவில்லை? இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே ஆராய்ச்சி செய்து நோபல் பரிசினை நாம் பெறப் போகும் நாள் எது? அறிவியலாளர்களும் ஆட்சியாளர்களும் மக்களும் ஆழமாகச் சிந்தித்து விடைகாண வேண்டிய கேள்விகள் இவை. நம் நாட்டில் தனிப்பட்ட சாதனைகளைப் புரியக்கூடியவர்கள் இல்லாமல் இல்லை. அவர்களைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தக் கூடிய அணுகுமுறைகள்தான் தற்போது தேவை.

நன்றி: தீக்கதிர்

No comments: