Saturday, January 9, 2010

உலகத்தின் நீரிழிவு தலைநகர் இந்தியா!

உலக சுகாதார நிறுவனம், சர்வதேச நீரிழிவு அமைப்பு ஆகியவற்றின் அறிக் கையின்படி நீரிழிவு குறைபாடு உள்ளவர் களின் எண்ணிக்கையில் இந்தியா உல கில் முதலிடத்தை வகிக்கிறது. இது பெரு மைக்குரிய இடமல்ல என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. 2007-ல் 4 கோடியே 10 லட்சமாக இருந்த எண் ணிக்கை 2025-க்குள் 7 கோடியாக உய ரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

நீரிழிவு என்பதே பணக்காரர்களுக் கும் வயதானவர்களுக்கும் உரிய குறை பாடு எனக் கருதப்பட்டு வந்தது. இந்தக் கருத்து சரியானதல்ல என்பது தற்போது தெளிவாகிவிட்டது. 1998-ல் நீரிழிவு பற் றிய ஆய்வினை சென்னை நீரிழிவு சிகிச் சை மையத்தின் தலைவர் டாக்டர் மோக னும் அவரது குழுவினரும் சென்னை யில் உள்ள இரண்டு குடியிருப்புகளில் மேற்கொண்டனர். மத்தியதர வருமானம் உள்ளோரைக் கொண்ட ஒரு குடியிருப் பில் 12.4 சதம் பேருக்கும் மிகக் குறைந்த வருமானம் உடைய மக்கள் உள்ள சேரிப் பகுதியில் 6.5 சதம் பேருக்கும் அப்போது நீரிழிவுக் குறைபாடு இருந்தது. இம்மு டிவை மத்தியதர மக்களிடம் தெரிவித்து, நீரிழிவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றி மருத்துவக் குழுவினர் எடுத்துக் கூறினர். உடனே அக்குடியிருப்பில் இருந் தவர்கள் ஒரு பூங்காவையே உருவாக்கி அங்கு உடற்பயிற்சி (பெரும்பாலும் நடைப்பயிற்சி) செய்யத் தொடங்கினர்.

உடல்நலத்திற்கு விரோதமான வாழ்வியல் முறைகள்

10 ஆண்டுகள் கழித்து அதே இரு குடியிருப்புகளை ஆய்வு செய்ததில் மத் தியதர மக்களிடம் நீரிழிவு பாதிப்பு 15.4 சதம் ஆகியிருந்தது. உடற்பயிற்சி மூலம் நீரிழிவு பாதிப்பு மிக அதிகமாகக் கூடா மல் கட்டுப்படுத்த முடியும் என்பது தெளி வாகியது. ஆச்சரியம் என்னவெனில், குறைந்த வருமானம் உடையோர் உள்ள குடியிருப்பில் இது 15.3 சதம் ஆகியிருந் தது ! இது எப்படி நடந்தது? வருமானம் சற்று கூடியதும் அவர்களிடம் உடல்நலத் திற்கு விரோதமான வாழ்வுமுறைகள் புகுந்திருந்தன. கலோரி, கொழுப்பு, இனிப்பு அதிகம் உள்ள உண வுப் பொருட்களை இடைப்பட்ட காலத் தில் அவர்கள் உட் கொள்ளத் தொடங்கி யிருந்தனர். நடை, சைக்கிளுக்குப் பதி லாக பெட்ரோல் வண் டிகளுக்கு மாறியதில் உடற்பயிற்சி குறைந் திருந்தது. எல்லா மாகச் சேர்ந்து உடற் பருமன், மனஅழுத் தம், இதயக் கோளா றுகள் போன்றவற்றுக்கு ஆளாகி சர்க்கரை அளவும் கூடிவிட்டது.

நம் நாட்டில் பணக்காரர்-ஏழை வேறு பாடுகள், நகர்ப்புற-கிராமப்புற வேறுபாடு கள் வேறு பல விஷயங்களில் உள்ளன. ஆனால் நீரிழிவு இந்த வித்தியாசங்களை யெல்லாம் பார்ப்பதில்லை என்பது சமீபத் திய ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள் ளது. 1970-களில் இந்திய கிராமப்புறங்க ளில் இந்த பாதிப்பு 1 சதமாக மட்டுமே இருந்தது. இன்று 6 சதத்திலிருந்து 16 சதம் வரை உயர்ந்துவிட்டது. அதிலும் தென்னிந்தியாவில் நீரிழிவு பாதிப்பு வேக மாகக் கூடி வருகிறது. இந்தியாவின் 72 சத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் நிலையில், இது மிகவும் கவலைக் குரிய விஷயம்.

ஏழை-எளிய மக்கள் தங்கள் வருமா னத்தில் 20 முதல் 30 சதம் வரை நீரிழிவு சிகிச்சைக்கு செலவிட வேண்டி வருகிற தெனில், அவர்கள் மீதுள்ள சுமையைப் புரிந்துகொள்ள முடியும். இதில் கொடு மை என்னவெனில், கிராமப்புறங்களில் நீரிழிவு சிகிச்சைக்கென சிறப்பு மையங் கள் இல்லை. டாக்டர் மோகனின் குழு இரண்டாண்டுகளுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சூனாம்பேட்டை பகுதியில் 42 கிராமங்களில் 43,158 பேரைச் சோதித்த பிறகு அங்கு ஒரு நீரிழிவு மையத்தை நிறுவியது. இரண்டு ஆண்டு களுக்குள் அப்பகுதி மக்களுடைய இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடிந் திருக்கிறது. இம்மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியாவின் அனைத் துக் கிராமப் பகுதிகளிலும் எடுக்க வேண் டியது அவசியம். (தி இந்து, நவம்பர் 14, 2009)

நீரிழிவு பற்றிய விழிப்புணர்வை மக்க ளிடம் ஏற்படுத்தி, உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சித் தேவை ஆகியவற்றை மக் களுக்கு உணர்த்திவிட்டால் நம் நாடு இந்தப் பாதிப்பிலிருந்து பெருமளவுக்கு மீளமுடியும். சாதாரண மக்களுக்கு பழங் கள், காய்கறிகள் மலிவான விலையில் கிடைத்திடத் தேவையான நடவடிக்கை களை அரசு எடுப்பது மிக மிக அவசிய மானது.

No comments: