மண்ணிலிருந்து நல்ல விளைச்சலைப் பெற வேண்டுமானால், மண் அதிக வளம் கொண்டதாக இருக்க வேண்டும். இது பல விவசாயிகளுக்குத் தெரிவதில்லை. அவர்கள் உரத்திலும் விதைகளிலும் செலுத்தும் கவனத்தைப் பொதுவாக மண்வளத்தைச் சோதித்து அறிந்துகொள்வதில் காட்டுவதில்லை. இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மண்வளத்தைப் பெருக்குவது பயிர்களில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிடும் என்பது மட்டுமல்ல, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் கூட நீக்கிவிடும் என உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன (தி இந்து 22. 10. 2009).
இயற்கை உரங்களின் மகத்துவம்
கால்நடைகள், கோழிக்கழிவு உரங்கள் (உயவவடந யனே யீடிரடவசல அயரேசந), இலைதழைகளை மக்கவைத்துத் தயாரிக்கப்படும் உரங்கள் போன்ற இயற்கை உரங்கள் பௌதிக, இரசாயன, உயிரியல் ரீதியில் மண்ணுக்குப் புத்துயிர் ஊட்டுகின்றன என்பதை நம் விவசாயிகள் பாரம்பரியமாக அறிந்து வைத்துள்ளனர். வளர்ந்த நாடுகளில் உள்ள விவசாயிகள் தற்போது மேலும் மேலும் இயற்கை உரங்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் இரசாயன உர உற்பத்தி 10 சதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் நாமோ இயற்கை உரங்கள் தரும் நன்மைகளைப் புறந்தள்ளிவிட்டு, இரசாயன உரங்களை ஏராளமாக இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.
மாட்டுச் சாணத்தை உரமாகப் பயன்படுத்துவது பற்றி நம் விவசாயிகள் நன்கு அறிந்திருந்தாலும், கோழிக்கழிவு உரத்தைப் பற்றிப் பல விவசாயிகளுக்குத் தெரியவில்லை. காரணம், நவீன கோழிப்பண்ணைகள் இந்தியாவில் தோன்றி 40 ஆண்டுகளே ஆகின்றன. நெல், கரும்பு, தோட்டப்பயிர்கள் அனைத்திற்குமே இயற்கை உரங்கள் மிகவும் ஏற்றவை. ஆனால் பயறு வகைப் பயிர்களுக்கு (டநபரஅinடிரள உசடியீள) இயற்கை உரங்களை அதிகமாகப் பயன்படுத்தாமலிருப்பது நல்லது. காரணம், யூரியாவைப் போல பயறு வகைப் பயிர்களும் கோழிக்கழிவு உரத்திலுள்ள நைட்ரஜனை உள்வாங்கக் கூடியவை. அதனால் இவ்வகைப் பயிர்களுக்கு சிறிதளவு இயற்கை உரமே போதுமானது.
மாத்திரை வடிவத்தில் உரம்
கோழிக்கழிவு உரத்தை உருண்டை வடிவத்தில் மாத்திரைகளைப் போல் மாற்றி 5 கிலோகிராம்-25 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட பைகளில் பாதுகாத்து, வீட்டுத் தோட்டங்களுக்கும் நர்சரிகளுக்கும் பயன்படுத்த முடியும். வளர்ந்த நாடுகளில் இப்படித்தான் செய்கிறார்கள். கோழிக்கழிவு உரம் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் தரக்கூடியது. இயற்கையிலேயே அது உரமாக இருப்பதால் பண்ணையிலிருந்து நேரடியாக அதை வயல்களில் பயன்படுத்த முடியும். இலைதழைகளைப் போல மக்கவைத்துப் பின்னர் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை.
“நன்கு உலரவைக்கப்பட்ட ஒரு டன் கோழிக்கழிவு உரம், 100 கிலோகிராம் யூரியா, 150 கிலோகிராம் சூப்பர் பாஸ்பேட், 50 கிலோகிராம் பொட்டாஷ், 125 கிலோகிராம் கால்சியம் கார்பனேட் போன்ற இரசாயன உரங்களுக்குச் சமமானது. அது மட்டுமல்ல, அவற்றைவிட மலிவானது” என்கிறார் சென்னை கால்நடைகள் மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நரஹரி. இந்தியா தற்போது
8 மில்லியன் டன்கள் கோழிக்கழிவு உரத்தை ஆண்டுதோறும் தயாரிக்கிறது. இதை 3.56 மில்லியன் ஹெக்டேர் நிலத்திற்கு உரமாகப் பயன்படுத்த முடியும். எனவே, இந்த உரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தினால் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்காகச் செலவிடும் கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணியை நாம் தவிர்க்க முடியும்.
நன்றி: தீக்கதிர்
No comments:
Post a Comment