Thursday, September 10, 2009

வானவியலாளர் ஆர்யப்பட்டா

பண்டைக்கால இந்தியர்கள் வேதகாலத்திலேயே வானவியலில் மிகுந்த ஆர்வத்தைக் காட்டியவர்கள். அக்காலத்திய இந்தியாவின் தலை சிறந்த வானவியலாளர் என்று ஆர்ய பட்டாவைத்தான் கூற முடியும். 5வது நூற்றாண்டிற்கு முன்னதாகவே பல வானவியலாளர்கள் தோன்றியிருந் தாலும்கூட, அவர்களில் யாரும் தமது கண்டுபிடிப்பு களைப் பதிவு செய்யவில்லை. வானவியலில் முக்கியத்துவம் மிகுந்த `ஆர்ய பாட்டியா’ என்ற நூலினை எழுதி தன் கண்டு பிடிப்புகளை உல கிற்கு அறிவித் தவர் ஆர்யபட்டா. 10வது நூற்றாண்டில் ஆர்ய பட்டா என்ற பெயரில் இன்னொரு வானவி யலாளர் வாழ்ந்ததால், முந்தையவர் ஆர்யபட்டா 1 என்றும் பிந்தையவர் ஆர்யபட்டா 2 என்றும் அழைக்கப்படு கின்றனர். நாம் இக் கட்டுரையில் குறிப்பிடுவது அனைத்தும் ஆர்ய பட்டா 1 பற்றியதே.

ஆர்யபாட்டியா மொத்தம் 121 சுலோகங்கள் உள்ள நான்கு அத்தி யாயங்களைக் கொண்டது. கிர கணங்கள், நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வு, முக்கோணத்தின் பரப்பளவு, முக்கோணப் பட்டகத்தின் கன அளவு, வட்டத்தின் பரப்பளவு, கோளத்தின் கன அளவு, நாற்கரத்தின் பரப்பளவு, (சூரிய) வருடம், (சந்திர) மாதம் போன்ற பல்வேறு கண்டுபிடிப்புகள் அந்த நூலில் இடம் பெறுகின்றன.

அந்நாளைய வானவியலாளர் களைப் போல பிரபஞ்சத்தின் மையம் பூமிதான் என்றே ஆர்யபட்டாவும் கரு தினார். ஆனால், வானத்தில் நட்சத் திரங்கள் மேற்கு நோக்கி நகர்வது போல் தோன்றுவதற்குக் காரணம், பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதுதான் என்று முதன்முத லில் கூறிய இந்திய வானவியலாளர் ஆர்யபட்டாதான். சூரியனும் சந்திர னும் `உதிப்பதற்கும்’, `மறைவதற்கும்’ இதுதான் காரணம் என்றும் பூமி தன் னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள ஆகும் காலம் ஒரு நாள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். கணிதவியலிலும் வானவியலிலும் பல புதிய கண்டுபிடிப்புகளை ஆர்ய பட்டா வெளியிட்டார். எண்களை வரி சைப்படுத்தல், ஸ்கொயர் மற்றும் கியூப் எண்களின் வேர்கள்(நஒவசயஉவiடிn டிக ளளூரயசநள யனே உரநெ சடிடிவள), கிர கங்களின் சஞ்சாரம், யீ-யின் மதிப்பு 3.1416 போன்ற பல கண்டு பிடிப்பு களை அவர் வெளியிட்டார். சந்தி ரன், பூமியின் நிழல்கள் விழுவதால் தான் கிரகணங்கள் நிகழ்கின்ற னவே தவிர, ராகுவும் கேதுவும் விழுங்குவதால் அல்ல என்று அன்றி ருந்த மதநம்பிக்கைக்கு எதிரான கருத்தைத் துணிச்சலுடன் பதிவு செய்தவர் ஆர்யபட்டா. ஆர்யபட்டா வின் காலத்திய வானவியலாளர் களும் பின்னர் தோன்றிய பிரம்ம குப்தா போன்ற வானவியலாளர் களும் அவர் கூறியதை ஏற்கவில்லை. ஆனால், 30 வயதில் ஏற்காவிட்டா லும் 67 வயதாகும்போது பிரம்மகுப்தா, ஆர்யபட்டாவின் கருத்துக்களை ஏற்றார்.

ஆர்யபட்டா பாடலிபுரத்தை (இன் றைய பாட்னா) சேர்ந்தவர் என முத லில் கருதப்பட்டார். பின்னர் அது சரி யல்ல, அவர் தென்னிந்தியாவை - குறிப்பாக இன்றைய கேரளத்தைச் சேர்ந்தவர் என பாஸ்கரா என்ற வான வியலாளர் எழுதிய நூல் பற்றிய ஆய்விலிருந்து தெரியவருகிறது. பாஸ்கரா (கி.பி. 600) ஆர்யபட்டா வின் கண்டுபிடிப்புகளைப் பிரச்சாரம் செய்தவர். மேலும் செழுமைப்படுத் தியவர். `மஹாபாஸ்கரியா’ என்ற நூலில் கிரகங்களின் அட்சய, தீர்க்க ரேகைகள், கோள முக்கோணவியல் (ளயீாநசiஉயட வசபைடிnடிஅநவசல), சூரிய-சந்திர கிரகணங்கள் பற்றி விரிவாக பாஸ்கரா எழுதியுள்ளார்.

ஆர்யபட்டாவின் கண்டுபிடிப்பு கள், பின்னர் வந்த இந்திய வான வியலாளர்கள் மீது பெரும் தாக்கத் தை ஏற்படுத்தின. அன்றைய சோவி யத் யூனியன் உதவியுடன் 1975 ஏப்ரலில் இந்தியா விண்வெளியில் செலுத்திய முதல் ராக்கெட்டிற்கு ஆர்யபட்டா என்று பெயரிட்டு இந் தியா இப்பெருமைமிகு விஞ்ஞானி யைக் கவுரவப்படுத்தியது.

No comments: