Wednesday, September 2, 2009

பிராய்லர் குட்டிகள் தரும் கூடுதல் வருமானம்

விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற மிருகங்களை கூடுதல் வருமா னத்திற்காக வளர்ப்பது தெரிந் தது தான். பணநெருக்கடி வரும் காலங்களில் அவர்களது `ஏ.டி.எம். கார்டு’களே இந்த மிருகங்கள்தான் ! அவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை உடனே விற்று நிலைமையை அவர்கள் சமாளிப்பார்கள். ஆனால் மேய்ச் சல் நிலம் குறைந்து வருவதால் ஆடு,மாடுகளைப் பராமரிப்பது கடினமாகிக் கொண்டு வரு கிறது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு நமது விஞ்ஞானிகள் பிராய்லர் கன்றுகள் அல்லது ஆட்டுக்குட்டிகள் வளர்க்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். குட்டி களும் கன்றுகளும் கூடுதல் எடையைப் பெற்று வளர்வதற் கும் அதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கும் இந்த தொழில்நுட்பம் உதவும் என்கிறார் கோழிக்கோடு விவ சாய ஆராய்ச்சி மைய இயக்கு நர் டாக்டர் வி.ஏ. பார்த்தசாரதி (தகவல் : தி இந்து).

பெண்கள் ஒரு சுயஉதவிக் குழுவை அமைத்து இப்புதிய முறையை அமல்படுத்திப் பயனடைந்து வருகின்றனர். பிராய்லர் தொழில்நுட்பத்திற் காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்டுக்குட்டிகள் பிறந்து ஒரு மாதம் வரை தாய்ப்பாலைக் குடித்து வளர அனுமதிக்கப் படும். ஒரு மாதம் ஆனதும் குட்டிகளை தாய் ஆடுகளிலி ருந்து பிரித்து காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் நிறைந்த தனிக்கொட்டடிகளில் வைத் துப் பராமரிக்க வேண்டும். அவற்றுக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் பசுந்தழை களுக்குப் பதில் ஊட்டச்சத்து மிகுந்த ஆட்டுத் தீவனம் (உடிnஉநவேசயவந கநநன) கொடுக்க வேண்டும். குட்டி வளர வளர, தீவனத்தின் அளவையும் அதி கரித்துக் கொண்டே வர வேண்டும். இது போக, லிவர் டானிக்கையும் மீன் எண்ணெய் யையும் தீவனத்துடன் கலந்து கொடுத்து வரவேண்டும். பிராய்லராக வளர்க்கத் தொடங்கிய 45வது நாளில் வயிற்றுப் பூச்சிகளை அகற்ற மருந்து (னநறடிசஅiபே) கொடுக்க வேண்டும்.

பசுந்தழைகளைக் கொடுத்து வளர்க்கும் பாரம்பரிய முறை யில் 6 மாதக் குட்டியின் அதிக பட்ச எடை 10 கிலோகிராம் வரைதான் கிடைக்கும். பிராய் லர் குட்டி வளர்ப்பு முறையில் மூன்றே மாதங்களில் குட்டி யின் எடை 24லிருந்து 26 கிலோகிராம் வரை கிடைக் கும். செலவு ரூ. 750 போக ரூ.1650லிருந்து ரூ. 1850 வரை நிகர வருமானம் கிடைக்கிறதாம்.

இது பற்றி மேற்கொண்டு தகவல் வேண்டுவோர் கோழிக் கோடு விவசாய அறிவியல் மையத்திலுள்ள டாக்டர் எஸ். சண்முகவேல் (தொ.பே : 0496-2662372) அவர்களு டன் தொடர்பு கொள்ளலாம்.

No comments: