உலகின் பல பகுதிகளில் இன்று தண்ணீர் அரிதான பொருளாகி விட்டது. தண் ணீர் சந்திரனில் கிடைக்குமா, செவ்வாயில் கிடைக்குமா என்று விஞ்ஞானிகள் தேடத் தொடங் கிவிட்டார்கள். மனிதன் சந்தி ரனில் கால் பதித்து 40 ஆண் டுகளுக்குப் பிறகு அமெரிக்கா இரண்டு ஆளில்லா விண்கலங் களை சந்திரனுக்கு அனுப்பி யிருக்கிறது. தண்ணீர் வேட் டைதான் இதன் நோக்கம். எல்.ஆர். ஓ., எல்.சி.ஓ.எஸ்.எஸ். என்ற அவ்விரு விண்கலங்களுக்கு நம்முடைய சந்திரயான்-1 தேடலும் துணை நிற்கும் என்று கருதப்பட்டது. ஆனால் நமது தற்போதைய சந்திர யான் முயற்சி ஒரு பின்னடை வைச் சந்தித்திருக்கிறது. சந் திரனில் நீரைக் கண்டுபிடிப் பது ஒரு தங்கச்சுரங்கத்தைக் கண்டு பிடிப்பதைப் போன்றது என்கிறது அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி மையமான நாசா. இங்கிருந்து ஒரு பாட் டில் நீரை சந்திரனுக்குக் கொண்டுசெல்ல 24 லட்ச ரூபாய் செலவாகுமாம். எனவே, சந்திரனில் மனிதர்களைக் குடியேற்ற வேண்டு மென்றால் தண்ணீரை அங்கேயேதான் தேடியாக வேண்டும். சந்திர னுடைய துருவங்களில் உள்ள பள்ளத்தாக்குகளின் அடியில் ஐஸாக உறைந்த நிலையில் தண்ணீர் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக் கிறார்கள். 1998இல் நாசா வின் ஒரு விண்கலம் சந்திர னிலிருந்து வெளிவரும் நியூட் ரான்களின் வேகத்தை அளந்து, சந்திர துருவங்களில் ஹைட்ர ஜன் இருப்பதற்கான சாத்தி யக்கூறு உண்டு எனக் கண்டு பிடித்தது. தற்போது அந்த ஹைட்ரஜன் சந்திரனுடைய பள்ளத்தாக்குகளின் அடியில் உள்ள தண்ணீரின் ஒரு பகுதி யாக இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இது மட் டும் உண்மை என நிரூபிக்கப் பட்டால், சந்திரனில் ஏராள மான அளவில் தண்ணீர் இருப் பதையும் உறுதி செய்துவிட முடியும்.
தற்போது இந்த விண்க லங்கள் கண்டறியப்போகும் உண்மை என்ன என்பது அறி வியல் உலகின் முக்கியமான எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.
No comments:
Post a Comment