Saturday, June 13, 2009

தொழில் வளர்ச்சியும் சுற்றுச்சூழலும்



உலகம் ஒருபுறம் இன்று பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக் கிறது. இன்னொரு புறம் சுற்றுச்சூழல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகள் பல் லாண்டு காலமாகத் நிலக்கரி, பெட்ரோல் போன்ற தொல் எரிபொருட்களை (கடிளளடை கரநடள) அதிக அளவில் பயன்படுத்தியே தொழில் துறையில் வேகமாக முன்னேறி இன்றைய வளர்ச்சியை எட்டியிருக்கின்றன. தொல்எரிபொருட்களைப் பயன்படுத்தி வந்ததன் காரணமாக காற்று மண்டலத்தில் பசுங்கூட வாயுக்கள் (பசநநnாடிரளந பயளநள) சேர்ந்ததற்கும் சுற்றுச்சூழல் பேராபத்துகள் உலகைத் தாக்கத் தொடங்கியிருப்பதற்கும் அந்த நாடுகளே பெருமளவுக்குக் காரண மாகவும் இருக்கின்றன.

ஆபத்து நெருங்கிவிட்டது !

பூமி சூடேறி வருவதையும் அதன் பாதக மான விளைவுகள் பற்றியும் அறிவியல் கதி ரில் ஏற்கனவே விரிவாகப் பார்த்திருக்கி றோம். பல தீவுகள் கடலுக்கடியில் மூழ்கி விடக் கூடிய ஆபத்து நெருங்கிக் கொண்டி ருக்கிறது. 3 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மாலத் தீவுகள் நாடு மக்களை இடம்பெயரச் செய்து, அவர்களைக் காப்பாற் றுவது பற்றி யோசிக்கத் தொடங்கியிருக் கிறது. உணவு உற்பத்தி மிகவும் தேவைப் படும் வறிய நாடுகளில் உற்பத்தி குறையத் தொடங்கிவிட்டது. 2015ஆம் ஆண்டில் உல கில் சுமார் 40 கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் வறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தாம். 2015 எங்கோ தொலைதூரத்தில் இல்லை. இன்னும் ஆறே ஆண்டுகள்தாம் இருக்கின்றன.

வளர்ந்த நாடுகள் தங்களது பசுங் கூட வாயுக்கள் வெளியீட்டினை 1990ல் இருந்த அளவுக்குக் குறைத் துக் கொள்ள வேண்டுமென சீனாவும், ஜி-77 நாடுகளும் கோரி வருகின்றன. அத்தோடு வளரும் நாடுகள் தங்களது கார்பன் வெளியீட்டைக் குறைத்துக் கொண்டு, தொழில் வளர்ச்சி பாதிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், வளர்ந்த நாடுகள் அதை ஈடுகட்டும் விதத்தில் நிதியுதவி செய்ய வேண்டு மெனவும் அவை கோருகின்றன. மெக்சிகோ நாடு உலக தட்பவெப்ப நிதிக்கு ஒவ்வொரு நாடும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கணக்குப் போட்டுக்கூட வைத்துவிட்டது !

நாட்டின் கணக்கும்

தனிநபர் கணக்கும்

1997-இல் கியோட்டோ மாநாடு விதித்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. ஆனால் இன்று ஒபாமா அதிபராக வந்தபிறகு, கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் எடுக்கப்படும் முயற்சிகளுடன் ஒத்துழைக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அதே சமயம் இந்தியாவும் சீனாவும் தங்க ளது கார்பன் வெளியீட்டைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தம் கொடுத்து வரு கிறது. உலகின் கார்பன் வெளியீட்டில் 16 சதத்திற்கு அமெரிக்காவும் சீனாவும் காரணம். ஆனால் ஒரு நப ருக்கான கணக்கு என்று வரும் போது ஒரு அமெரிக் கர் 20 டன் வெளியீட்டிற் குப் பொறுப்பு எனும்போது, ஒரு சீனப்பிரஜை 4 டன் னுக்கு மட்டுமே பொறுப்பு. ஒரு இந்தியரின் பங்கு 1 டன் மட்டுமே.

ஐரோப்பா காட்டும் வழி

நமக்கு தொழில்வளர்ச்சி வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண் டும். அதே சமயம், நமது சுற்றுச் சூழலையும் பாதுகாத்தாக வேண்டும். ஐரோப்பாவில் சைக்கிள்கள் உபயோகிப்பது, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது, சாலை நெருக்கடி நிறைந்த மாநகரங்களுக்குள் தனியார் வாகனங்கள் நுழைய வரிகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுத்த தன் காரணமாக காற்று சுத்தமடைந்து வரு கிறது. சாலை நெருக்கடி குறைந்து இனி மையான பயணம் கிடைக்கத் தொடங்கி யிருக்கிறது. இந்தியாவில் இத்திசையில் முயற்சிகள் எதுவுமே செய்யப்பட வில்லையே? சூரிய வெப்பம் அபரிமிதமாகக் கிடைக்கும் நம் நாட்டில், அதிலிருந்து நமக்கு வேண்டிய சக்தியைப் பெற நாம் எடுத்துவருகிற முயற் சிகள் நிச்சயம் போதுமானவையல்ல. அதே போல, காற்றிலிருந்தும் கடல் அலைகளிலி ருந்தும் நாம் இன்னும் அதிகமான சக்தி யைப் பெற முடியும். ஆனால் செய்கிறோமா?

பூமி சூடேறுவதைத் தடுக்க உலக அள வில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்து கவனம் செலுத்துவது அவசி யம்தான். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெறும்வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் வறட்சி, வெள்ளம், வேலை யின்மை காரணமாக நகரங்களை நோக்கி இடம் பெயரும் சுற்றுச்சூழல் அகதிகளாகத் தான் இருக்கின்றனர். சுத்தமான காற்று, குடிநீர், பசுமையான சுற்றுப்புறம் ஆகியவற் றைப் பெற நாம் முயற்சி செய்வதோடு இந்த இலக்குகளை நோக்கி அரசை இயங்கவைக்க நிர்ப்பந்தம் செலுத்தவும் வேண்டும்.

No comments: