Thursday, June 18, 2009

ஜூலை 22- காணத் தவறாதீர்கள் !



2009 ஜூலை 22 அன்று இயற்கை நமக்கு ஓர் அருமையான காட்சியைத் தர இருக்கிறது. அன்று சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்துவிடும். அதாவது, அன்று நிகழ இருப்பது முழு சூரிய கிர கணம் ! பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சூரிய கிரகணம் நடப்பது 360 ஆண்டு களுக்கொரு முறைதான். பெரும்பாலான மக்களுக்குத் தங்கள் வாழ்நாளில் காணக் கிடைக்காத அரிய காட்சி அது. எனவே, காணத் தவறாதீர்கள் என்று சினிமா விளம்பரம் போல கூவி மக்களை அழைக்க வேண்டிய தருணம் இது.

இவ்வளவு அரிதாக நிகழும் சூரிய கிர கணம் மக்கள் வசிக்க முடியாத பூமியின் எங்காவது ஒரு மூலைக்குத் தரிசனம் கொடுத்துவிட்டு மறைந்துவிடுவது உண்டு. ஆனால் இந்த முறை சூரிய கிரகணத்தின் பாதை மக்கள் திரள் அதிகம் உள்ள பல் வேறு பெருநகரங்களின் வழியாகச் செல்ல இருக்கிறது. அது மட்டுமல்ல, மிக அதிக நேரம் நிகழக் கூடிய சூரிய கிரகணமாக வும் அது இருக்கப் போகிறது. நாம் எந்த இடத்திலிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அது 6 மணி 39 விநாடிகளிலி ருந்து 7 மணி 30 விநாடிகள் வரை நீடிக்கும் (னுசநயஅ 2047 அறிவியல் இதழ்).

கிரகணம் எப்படி நிகழ்கிறது?

சூரிய கிரகணம் எப்படி நிகழ்கிறது என் பதைப் பற்றி அறிவியல் கதிரில் முன்னரே பார்த்திருக்கிறோம். சூரியனுக்கும் பூமிக் கும் இடையில் சந்திரன் வரும்போது சந்திர னின் நிழல் பூமியில் படுவதால் அது ஏற்படு கிறது. சந்திரனின் நிழல் இரு பகுதிகளை உடையது. சூரிய வெளிச்சம் முற்றிலும் விழாத `அம்ப்ரா’ (ரஅசெய) எனும் இடத்தில் உள்ள ஒருவருக்கு சூரியன் சுத்தமாகத் தெரி யாது. அதுவே முழு சூரிய கிரகணம். `பெனம்ப்ரா’ (யீநரேஅசெய) என்ற இடத்தில் இருக்கும் ஒருவருக்கு சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கப்படும். இந்த இடத் தில் உள்ளவர்களுக்கு பகுதி சூரிய கிரக ணம் நிகழ்கிறது.

சூரிய கிரகணம் நடக்க 20 நிமிடங்கள் இருக்கும்போது சூரிய வெளிச்சம் கணிச மாகக் குறையத் தொடங்கிவிடும். மூன்று நிமிடங்களுக்கு முன்னதாக சூரியனின் சிறு பிறை மட்டுமே கண்ணுக்குத் தெரி யும். சந்திரனின் பள்ளத் தாக்குகள் வழியாக சூரிய வெளிச்சம் மின்னும்போது வைரமோ திரம் போல அது பளிச்சிடுகிறது. சீக்கிரமா கவே அது மறைந்து இருள் சூழ்கிறது. பல லட்சம் கி.மீ. தூரத்திற்கு விரிந்து பரவும் வெப்பம் மிகுந்த வாயுக்கள் நிறைந்த சூரியனின் வெளிமண்டலம் `கரோனா’ (உடிசடியே) வெண்முத்துப் போல பிரகாசிக் கும். பறவைகள் குழப்பமடைகின்றன. ஆந் தைகளும் வெளவால்களும் இரவு வந்து விட்டதென்று வெளியே வருகின்றன. சேவல் பொழுது விடியப் போவதாக நினைத்து கூவத் தொடங்கலாம் !

சூரியனுடைய விட்டம் சந்திரனுடைய விட்டத்தைப்போல் சுமார் 400 மடங்காக உள்ளது. அதே சமயம், பூமியிலிருந்து சூரியன் இருக்கும் தூரமும் சந்திரன் இருக்கும் தூரத்தைப்போல் 400 மடங்காக இருக்கிறது. இது இயற்கையில் அமைந்துவிட்ட அற்புத மான ஒற்றுமை. இதன் காரணமாக பூமியி லிருந்து பார்க்கும்போது சூரியன், சந்திரன் இரண்டினுடைய `கோண தூரம் (யபேரடயச னளை வயnஉந)’ ஒன்றுதான். அதாவது பூமியிலிருந்து பார்க்கும்போது இரண்டும் ஒரே அளவுள்ள வட்டத்தட்டுகளாகத்தான் தெரியும். இம் மாதிரி அமைந்திருக்கவில்லையெனில் கிர கணத்தின்போது சந்திரனால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடிந்திருக்காது. முழு சூரிய கிரகணம் நிகழவும் வாய்ப்பு இருந்திருக்காது.

சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலோடு விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள். கார ணம் நமக்கு மிக அருகாமையில் உள்ள நட் சத்திரமான சூரியனின் `கரோனா’வை மிக நுணுக்கமாக ஆராய ஒரு வாய்ப்பு அப் போதுதான் கிடைக்கும். சூரியனைப் போன்ற மற்ற நட்சத்திரங்களை ஆராய்வதற்கும் கிர கணம் ஒரு நல்ல வாய்ப்பினை அளிக்கிறது.

ஒரு முக்கியமான எச்சரிக்கை

கிரகணத்தின்போதும் மற்ற நேரங்களி லும் சரி, சூரியனை நேரடியாக வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. பார்வையை அது நிரந்தரமாகப் பாதித்துவிடும் ஆபத்து இருக்கிறது. நன்கு பரிசோதிக்கப்பட்ட சூரிய ஃபில்டர் கண்ணாடிகளைக் கொண்டே பார்க்க வேண்டும். இந்திய அறிவியல் இயக்கம் (ஏபைலயn ஞசயளயச) இப்படிப் பட்ட கண்ணாடிகளைத் தர ஏற்பாடு செய் திருக்கிறது. சிறிய டெலஸ்கோப் மூலம் சூரியனின் பிம்பத்தை ஒரு சுவரில் அல்லது வெண் திரையில் பிரதிபலித்து கிரகணத் தைப் பார்க்க முடியும். சூரிய வெளிச்சத்தை ஒரு குண்டூசி துவாரம் வழியாக இருட்டு அறையில் உள்ள ஒரு சுவரில் விழவைத் துப் பார்ப்பது பாதுகாப்பானது.

இந்திய அறிவியல் இயக்கம் ஜூலை 22 அன்று நிகழ இருக்கும் அற்புதத்தை மக் கள் திரள் பார்ப்பதற்கான விரிவான ஏற் பாடுகளைச் செய்து வருகிறது. ரேடியோ, டிவி நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளது.

உங்கள் ஊரில் உள்ள அறிவியல் இயக்க ஆர்வலர்களைச் சந்தித்து மேற்கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

No comments: