Wednesday, February 25, 2009

மரபணு மாற்று விதை... மனித குலத்தின் வதை

மரபணு மாற்றுத் தொழில் நுட்ப விதைகளை அமெரிக்கா, சுவிட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் நம் நாட்டில் திணிக்க முயற்சி செய்து வருகின்றன. மரபணு மாற்று விதைகள் உற்பத்தியில், அமெரிக்காவின் மான்சான்டோ கம்பெனி தொண்ணூற்றைந்து விழுக்காடு இடம்பிடித்துள்ளது.

இந்த விதையின் மூலமாக விளையும் உணவுப் பயிர்களால் மனிதகுலத்தின் பாதுகாப்புத் தன்மை குறித்து எந்த நாடும் இதுவரை (குடிடின ளுயகநவல கூசயைட) ஆய்வு செய்யவே இல்லை. ஆனால் மனித மருத்துவம், உயிர் தொழில்நுட்பம், கால் நடை மருத்துவம்.. என்றுதான் ஆய்வுகள் வந்திருக்கின்றன!

அமெரிக்க உயிர் தொழில் நுட்ப விஞ்ஞானி ஜெஃப்ரி எம்.ஸ்மித் எழுதிய ழுநநேவiஉ சுடிரடநவவந (மரபிணி சூதாட்டம்), மரபணு மாற்றம் பற்றிய பித்தலாட்டத்தை அக்குவேறு ஆணிவேறாக அல சுகிறது. இந்தியாவின் முக்கிய மான பத்து நகரங்களில் மட் டுமே இப்புத்தகம் வெளிவந் திருக்கிறது. இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக இந்தப் பித்த லாட்டத்தை மக்கள் முன்பாக தோலுரித்து வருகிறார் ஜெஃப்ரி எம்.ஸ்மித்.

மரபணு மாற்று விதைகளை நன்கு சோதித்த பின்னரே நம் நாட்டுக்குள் அனுமதிக்க வேண் டுமென 1966 சுற்றுச்சூழல் சட் டம் சொல்லுது. அதன் அடிப் படையில் மத்திய அமைச்சர வையால் ‘மரபணு பொறியியல் அனுமதிக்குழு’ 1969ல் அமைக் கப்பட்டது. அந்தக்குழு சரி யாகச் செயல்படவில்லை. பொதுநல வழக்கு உச்சநீதிமன் றத்தில் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கு. அந்த வழக்கு தீர்ப்பு வர்றதுக் குள்ளார, நாட்டுல பரவலா மர பணு விதைகளைப் பயன்ப டுத்தி, மனித சமூகம் மலட்டுத் தன்மை மற்றும் பல நோய் களுக்கு ஆளாகிடக்கூடாது.

சரியான சோதனைகள் செய் யாமலே மான்சான்டோ-மஹிக் கோ கம்பெனியின் பி.டி.பருத்தி விதைகள் இந்தியாவில் பரவ லாக உள்ளே நுழைந்துவிட்டன. ஆந்திராவில் பி.டி. பருத்திக் காட்டில் மேய்ந்த ஆயிரத்தைந் நூறு ஆடுகளும், பன்னிரண்டு எருதுகளும் இறந்து போனதாக புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

உத்தராஞ்சல் மாநிலத்தில் அனுமதியின்றி பயிர் செய்யப் பட்டிருந்த பி.டி. நெற்பயிரை ‘பாரதிய கிசான் சங்க’ உறுப் பினர்கள் தீயிட்டு எரித்துள்ளார் கள். கோவை அருகே ஆலந் துறையில் 2007ல் பி.டி.நெற் பயிரை இருநூறு விவசாயிகள் வயலிலிருந்து பிடுங்கி வீசியுள் ளனர். உத்தராஞ்சல் மாநில முதல்வர், பி.டி. விதைகளை அனுமதிப்பதில்லையென உறு தியளித்துள்ளார். கேரள அரசாங் கம் பி.டி. விதைகளை மாநிலத் துக்குள் நுழைய விடுவதில்லை யென கொள்கை அறிவிப்பே வெளியிட்டுள்ளது. இதர மாநி லங்கள் இன்னமும் இதுகுறித்து ‘வாய்’ திறக்கவே இல்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சி.



ஏன் வேண்டாம் மரபணு விதை?

ஐந்து காரணங்களுக்காக விவசாயிகள் மரபணு மாற்று விதைகளை, அனுமதிக்கவே கூடாது.

* விஷக்கிருமியின் மரபணுவை (ழுநநே), தக்காளி-கத் தரி விதைகளில் ஒட்டுகிறார்கள். இதன் விளைவு உயிர்களில் உள்ள இறுக்கம் குலைந்துவிடுகிறது. தேனெடுக்கச் செல்லும் வண்டுகள், ஈக்கள் மூலமாக, மாற்றியமைக்கப்பட்ட மரபணு மற்ற பயிர்களுக்கும் தொற்றுகிறது. இதனால் உயிரினப் பன்மையம் (னுiஎநசளவைல) அழிகிறது.

* பி.டி. விதைகளுக்கு மான்சான்டோ கம்பெனி காப்பு ரிமை பெற்றுள்ளது. இதனால் உழவுத் தொழில் சார்ந்த விவ சாயிகளின் சர்வசுதந்திரமும் பறிக்கப்படுகிறது.

* நுகர்வோர் உரிமை உணவுவிஷயத்தில் மறுக்கப் படுகிறது. உதாரணமாக நம்நாட்டில் பலவகை கத்தரிக்காய் களை விருப்பம் மற்றும் ருசிகளின் அடிப்படையில் உணவுக்குப் பயன்படுத்தி வருகிறோம் பி.டி. கத்திரி நம் தேசத்தில் புகுத்தப்பட்டால், அனைவரும் ருசித்துச் சுவைத்த எல்லா வகைக் கத்தரி ரகங்களும் அழிந்துபோய்விடும்.

* இந்திய விவசாயிகள் எதைப் பயிர் செய்ய வேண்டும்? இந்தியர்கள் எதை உண்ண வேண்டும் என்பதனை அமெரிக் காவின் மான்சான்டோ கம்பெனி தீர்மானிக்குமானால், இந்தி யாவின் இறையான்மையே கேள்விக்குள்ளாகிவிடும்.

* மரபணு மாற்று விதைகளின் மூலமாக விளைந்த உண வுப் பொருட்களை முதலில் எலிகளுக்கும், முயல்களுக்கும் உணவாகத் தந்து ஆய்வு செய்தபோது, அவற்றின் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பி.டி.மக்காச்சோளம், பி.டி.சோயா மொச்சை உண்ட எலிகள் ஈன்ற குட்டிகள், மூன்று வாரங் களுக்குள் இறந்துபோயின. எலிகளின் உள் உறுப்புகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருந்தன. சிறுநீரக விதைப் பைகள் சுருங்கிப்போய்விட்டன. விதைப்பைகள் விந்து சுரப்பதை நிறுத்திவிடுமென விஞ்ஞானிகள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

நன்றி : இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

1 comment:

Ramjee said...

The tamil word for biodiversity would be உயிரினப் பன்மயம் and not உயிரினப் பன்மையம் as you have used... :)