Tuesday, February 17, 2009

பரிணாம ஆய்வுகளில் புதிய மைல்கல்!

ஒரே வகையைச் சேர்ந்த பல்வேறு ஈஸ்ட் இனங்களின் மரபணுக்களுக்கு (ஜூன்) இடையே மிகவும் அதிகளவில் வேறுபாடுகள் காணப்படுவதாக அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இம்மாறுபாடுகள், மனிதன் மற்றும் சிம்பன்சி குரங்கின் ஜீன்களுக்கிடையேயான மாறுபாட்டை விட அதிகம் என்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் அறிவியல் இதழான ‘நேச்சரில்’ வெளியிடப்பட்டுள்ளன.

பரிணாம மரபியல் (நஎடிடரவiடியேசல பநநேவiஉள) ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக திகழப்போகும் இந்த ஆய்வை ஸ்வீடனின் கோதென்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். கேம்பிரிட்ஜில் உள்ள சேங்கர் இன்ஸ்டிட்யூட் மற்றும் நாட்டிங்காம் பல்கலைக்கழகம் ஆகியவையும் இந்த ஆய்வில் இணைந்து செயல்பட்டன. சேக்ரோமைசிஸ் செரிவிசியே (ளயஉஉாயசடிஅலஉநள உநசநசஎளையைந), சேக்ரோமைசிஸ் பாராடாக்சஸ் (ளயஉஉாயசடிஅலஉநள யீயசயனடிஒரள) என்ற இரண்டு வகை ஈஸ்ட் இனங்களைச் சேர்ந்த 70 தனி உயிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றின் ஜீன்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. இதில் இரண்டாவதாகக் கூறப்பட்ட ஈஸ்ட் வகை, முதல் வகையிலிருந்து பரிணாம வளர்ச்சி மூலம் மாற்றமடைந்த உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில் பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த தனித்தனி உயிரினங்களின் ஜீன்கள் கூட அதிகளவிலான மாறுபாடுகளைக் கொண்டு விளங்குவதாகவும், இம்மாறுபாடு
களின் அளவு 4 சதவீதம் வரை கூட இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. வெவ்வேறு வகை உயிரினங்களான மனிதனின் ஜீன்களுக்கும், சிம்பன்சி குரங்கின் ஜீன்களுக்கும் இடையிலான வேறுபாடு வெறும் 1 சதவீதம்தான்! இதேபோல் ஒரு தனி உயிரினம் அதன் சக உயிரிகள், பெற்றிராத மரபுப்பொருளை தனித்துவமாகப் பெற்றிருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த சிறப்பு மரபுப் பொருள், குரோமோசோமின் வெளிவட்டப்பகுதியில் இடம்பெற்றிருக்கும். குரோமோசோமின் இப்பகுதியே உயிரிகளின் பரிணாமப்பண்பில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

மரபியல் அண்மைக்காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. பல்வேறு உயிரிகளின் டி.என்.ஏ அல்லது ஜீனோம்கள் பிரிக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டுவிட்டன. பெரும்பாலான பாக்டீரியாக்களின் ஜீனோம்கள், கொசு, உள்ளிட்ட பூச்சிகளின் ஜீனோம்கள் முதலாக 2001ம் ஆண்டில் மனிதனின் ஜீனோமும் பகுப்பாய்வு செய்யப்பட்டாகிவிட்டது.

இந்நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. தங்களின் அடுத்த இலக்கான பரிணாம வளர்ச்சி வரைபடங்களை உருவாக்கும் கனவு நனவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். பரிணாமவியலின் தந்தை சார்லஸ் டார்வினின் இரண்டாவது பிறந்த நாள் நூற்றாண்டில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது சாலப்பொருத்தமானதே!

நன்றி: தீக்கதிர்

No comments: