Monday, February 2, 2009

ஆப்பிள் சிவப்பாக தோன்றுவது ஏன்?

எல்லாப் பொருட்களின் மீதும் சூரியஒளிதான் விழுகிறது. அப்படி யிருக்க, வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு நிறமுடையவையாக இருப்பது எப்படி? ஆப்பிள், தக்காளி போன்ற பழங்கள் சிவப்பாகவும், புல், மர இலைகள் போன்றவை பச்சையாக வும், பால் வெண்மையாகவும் இருக் கின்றனவே அது எப்படி?

சூரியஒளி வெண்மையாக இருந் தாலும் அது ஊதா, கரும்பச்சை, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உடையது. இந்த ஏழு வண்ணங்களும் ஒன்று சேரும்போது கிடைப்பதுதான் வெண் மை. சூரியஒளி தக்காளி அல்லது ஆப்பிள் மீது விழும்போது, அது சிவப்பு நிறத்தை மட்டும் பிரதிபலித்து விட்டு மற்ற ஆறு நிறங்களையும் உள்வாங்கிக் கொள்கிறது. ஒரு பொருளிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட சிவப்பு நிறம் நம் கண்களை அடையும் போது பொருள் சிவப்பாகத் தோன்று கிறது. புல் மற்றும் மர இலைகள் பச்சை நிறத்தை மட்டும் பிரதிபலித்து விட்டு மற்ற ஆறு நிறங்களையும் உள் வாங்கிக் கொள்கின்றன. பால் எல்லா வண்ணங்களையும் பிரதிபலிப்பதால் அது வெண்மையாகத் தோன்று கிறது. ஒரு கரும்பலகை எல்லா நிறங் களையும் உள்வாங்கிக் கொள்வதால் அது கருப்பாகத் தெரிகிறது.

ஓர் அறையில் சிவப்பு வெளிச்சம் மட்டுமே இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த அறையில் சிவப்பு வண்ணத்தில் உள்ள சட்டை சிவப்பு வண்ணத்துடனேயே காட்சி தரும். காரணம், அதில் படும் சிவப்பு நிறத்தை அது பிரதிபலித்து விடு கிறது. ஒரு வெள்ளைச் சட்டை இருந் தால்...? அதுவும் சிவப்பாகவே காட்சி தரும் ! காரணம், அதன் மீது சிவப்பு வெளிச்சம் மட்டுமே விழுகிறது. அது பிரதிபலிக்கப்படுகிறது. பச்சை நிறத்திலோ, நீல நிறத்திலோ ஒரு சட்டை இருந்தால்..? அது கருப்புச் சட்டையாகத் தோன்றும் ! காரணம், சிவப்பு வெளிச்சம் அதன் மீது விழும் போது அது உள்வாங்கப்பட்டு விடு கிறது. எந்த நிறமும் பிரதிபலிக்கப் படாத போது பொருள் கருப்பாகத் தோன்றும். எனவே, ஒரு பொருளின் வண்ணம் அதன் மீது விழும் வெளிச் சத்தையும் அது பிரதிபலிக்கும் நிறத்தையும் பொறுத்தது.

No comments: