காதல் வயப்பட்டு இனச்சேர்க்கைக்குத் தயாராகவுள்ள Aedes aegypti எனப்படும் டெங்கு கொசுக்கள் தங்களின் துணையை இசைமூலம் தேர்ந்தெடுக்கின்றன எனும் செய்தி வியப்பானது. டெங்குவையும், மஞ்சள் நோயையும் பரப்பும் இந்த வகையான ஆண்-பெண் கொசுக்கள் ஒத்திசைமூலம் தங்களுடைய இணையைத் தேர்ந்தெடுக்கின்றன.
இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானி டேனியல் ராபர்ட் உயிரினங்களில் காணப்படாத விந்தை இது என்கிறார்.
இந்த ஆராய்ச்சியின் பயனாக கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான திசையில் ஆராய்ச்சிகளைத் தொடரமுடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
காற்றில் பறக்கும் ஒரு பெண்கொசுவின் இறக்கைகள் சுமார் 400 ஹெர்ட்ஸ் அதிர்வுகளை உண்டாக்குகிறன. ஒர் ஆண் கொசுவின் இறக்கைகள் சுமார் 600 ஹெர்ட்ஸ் அதிர்வுகளை உண்டாக்க வல்லவை.
ஆண், பெண் டெங்கு கொசுக்களை மிக நுணுக்கமான இழைகளால் கட்டி பறக்கச்செய்தனர். அவை நெருங்கி வரும்போது கொசுக்களின் இறக்கைகள் உண்டாக்கிய கீதத்தை பதிவு செய்தனர்.
பெண்கொசுக்கள் எழுப்பிய சுரம் 400...800...1200 என்று அதிகரித்தபோது, ஆண்கொசுக்களின் சுரம் 600...1200 என்று அதிகரித்தது. காதல் வயப்பட்ட கொசுக்கள் எழுப்பிய சுரத்தின் அதிர்வெண் 1200 ஹெர்ட்ஸ்ல் ஒருங்கிணைந்தது.
No comments:
Post a Comment