Monday, February 2, 2009

பைசா கோபுரம் கீழே விழாமல் இருப்பது எப்படி?

ஒவ்வொரு வருடமும் ஆயி ரக்கணக்கான மக்கள் இத்தாலியின் பைசா நகரத்து சாயும் கோபுரத் தைப் பார்த்து அந்த அதிசயத்தைக் கண்டு களித்து வருகின்றனர். அந்த கோபுரம் சாய்ந்து நிற்கிறது. ஆனால் கீழே விழவில்லை. அது எப்படி?

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு புவிஈர்ப்பு மையம் (உநவேசந டிக பசயஎவைல) உண்டு. அதை அந்தப் பொருளின் மொத்த எடையும் குவிந்திருக்கும் புள்ளியாகக் கருதலாம். ஒரு பொருள் கீழே விழாமல் இருக்க வேண்டு மானால், அதன் புவிஈர்ப்பு மையத் திலிருந்து வரையப்படும் செங்குத் துக் கோடு அதன் அடிமட்டப் பரப் பிற்குள் விழ வேண்டும். பைசா கோபுரம் இந்த நிபந்தனையை நிறைவேற்றுவதால் அது கீழே விழாமல் நிற்கிறது.

இந்தக் கோபுரத்தின் வரலாற் றைச் சற்று பார்ப்போமே? இது பைசா நகரத்து சர்ச்சின் மணிக் கூண்டு இருக்கும் கோபுரமாக சர்ச்சின் பின்புறம் கட்டப்பட்டது. இதன் உயரம் 56 மீட்டர். அடிமட் டத்தில் உள்ள சுவரின் அகலம் 4 மீட்டர். எட்டு மாடிகள் உள்ள இந்த வெள்ளைச் சலவைக்கற்களாலான கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல 300 படிகள் ஏற வேண்டும். அங்கி ருந்து பைசா நகரத்தின் அழகையும் பத்து கி.மீ. தூரத்திலுள்ள கடலையும் பார்த்து ரசிக்கலாம்.

கோபுரத்தைக் கட்டத் தொடங் கிய ஆண்டு கி.பி. 1173. மூன்றாவது மாடியைக் கட்டும்போது கோபுரம் பலவீனமான மணல் அடித்தளத் தின் காரணமாக, சாயத் தொடங் கியது. அண்டை நாடுகளுடன் சண்டை காரணமாக ஒரு நூற் றாண்டு காலம் கட்டுமானம் நிறுத் தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் மணல் அடித்தளம் கெட்டிப் பட்டது. 1272-ல் கட்டடப் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. சாய் மானத்தைச் சரிசெய்ய மூன்றாவது மாடிக்கு மேல் ஒரு பக்கம் எதிர்ப் பக்கத்தைவிட உயரமாக இருக்கும் படிக் கட்டப்பட்டது. இதனால் முதலில் தென்கிழக்கில் சாய்ந்த கோபுரம் பின்னர் தென்மேற்கில் சாய்ந்தது. பின்னர் அப்படியே விடப்பட்டது. 1350-ல் கட்டி முடிக் கப்பட்டது. கட்டத் தொடங்கியதி லிருந்து கணக்கிட்டால் கட்டி முடிக்க 177 ஆண்டுகள் ஆகி விட்டது !

1990-களில் கோபுரத்தின் சாய் மானம் அதிகரித்ததால் அதைச் சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டன. அடித்தளம் கெட்டிப்படுத்தப்பட் டது. கடல் அரிப்பின் காரணமாக சேதாரமடைந்திருந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டன.

மீண்டும் மக்களை வரவேற்கப் பைசா கோபுரம் தயாராகிவிட்டது !

நன்றி: பேராசிரியர் கே. ராஜு

No comments: