‘டீ’ என்ற ஆங்கில வார்த்தை- ‘டீ’ என்ற சீன வார்த்தையிலிருந்து உருவானது. கொச்சையாக ஆங்கிலத்தில் ‘சாய்’ என்றே சொல்லப்படுகிறது. பானங்களின் மகாராணி தேநீர்தான். உலக மக்கள் தொகையில் பாதிப் பேர், சூடாகவோ/குளிர்ச்சியாகவோ தேநீர் சுவைக்கின்றனர். நீருக்கு அடுத்தபடியாக பெரும்பாலான மக்களால் விரும்பி அருந்தப் படுவதும் தேநீர்தான். அதுமட்டுமல்ல; விலை மலிவான பானமும் தேநீர்தான். வணிக மதிப்பில் இதன் நிலை காபிக்கு அடுத்தபடிதான்; தேயிலை பயிரிடப்படும் நாடுகளாலேயே பெரும்பகுதி பயன்படுத் தப்படுகிறது.
தேநீரின் வரலாறு மனித நாகரிகத்துடன் இணைந்தது. சுமார் 5000 ஆண்டுகால சரித் திரம் உடையது தேநீர். தேநீர் கதை சுவாரசி யமானது; எளிமையானதும் கூட. கி.மு.2737ம் ஆண்டு முதன்முதலில் தேநீர் அருந்தியவர் கள் சீனர்கள்தான். சுமார் 4700 ஆண்டு களுக்கு முன் (அதாங்க கி.மு. 2737ல்) ஷென் நுங் (ளுாநn சூரபே) என்ற சீனப் பேரரசர் வாழ்ந்தார். அவர் தனது வழிப்பயணத்தின்போது களைப்பு மேலிட்டு, ஒரு மரத்தின் கீழ் அமர்ந் தார்; தன் பணியாளை சுடுநீர் கொண்டுவர பணித்தார். பணியாள் சுடுநீர் கொண்டு வந்து பேரரசரிடம் கொடுத்தவுடன், மரத்திலிருந்து ஒரு இலை நீரில் விழுந்தது; விழுந்தவுடன் நீரின் நிறம் மாறியது; அருந்திப்பார்த்தார். இலை விழுந்த நீர் மணத்துடனும் சுவையுட னும் இருந்தது. அதுதான் ‘கேமினெல்லா சைனன்சிஸ் (ஊயஅiநேடடய ளiநேnஉளை)என்ற அறி வியல் பெயரில் அழைக்கப்படும் தேயிலை.
தேயிலை கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 3000 ஆண்டுகள் வரை மருத்துவ பான மாகவே இருந்தது. தேநீரை ஆசியா முழுவ தும் பரப்பிய பெருமை புத்த பிட்சுக்களையே சேரும். கி.பி.300ம் ஆண்டுக்குப் பின்னர் தான், தேநீர் தினமும் பருகும் பானமாக பழக்கமாகியது. கி.பி. 618-907 வரை சீனாவை ஆண்ட ‘டாஸ் வம்சத்தினர்’ தேநீரை, சீனா வின் தேசிய பானமாக அறிவித்தனர். கி.பி.800 களில் தேயிலை ஜப்பானுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் 13ம் நூற்றாண் டில்தான் தேயிலை பயிரிட்டனர். இங்கிலாந் தில், கி.பி. 1657ல் தாமஸ் கார்வே என்ற காபிக்கடைக்காரர்தான் முதன்முதலில் தேநீர் விற்பனை செய்தார். கி.பி.1662ல் இங்கி லாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ், ‘காத ரின்’ என்ற போர்த்துக்கீசியப் பெண்ணை மணந்தார். தேயிலை, காதரினின், வரதட்ச ணைப் பொருட்களில் ஒன்றாக இங்கிலாந்து அரண்மனைக்குள் நுழைந்தது. அவர் மூலம்தான் இங்கிலாந்து வீடுகளில் தேநீர் அருந்தும் பழக்கம் உண்டாயிற்று.
தேயிலைக்கு சுங்கவரி 17ம் நூற்றாண்டில் விதிக்கப்பட்டது. எனவே அது விலை மதிப் புள்ள பொருளாக இருந்ததால், கள்ளச் சந்தை யிலும் உலவியது. கி.பி. 1834ல் சுங்கவரி நீக்கப்பட்டதும், சாதாரண மக்களும் வாங்கும் பானமாக மாறியது. 1904ல் உலக வணிக பொருட்காட்சிக்கு வந்தது தேநீர். அப்போது வெயில் காலமாக இருந்ததால், தேநீரை விற்க முடியவில்லை. ரிச்சர்டு பீளீச்டன் என்ற ஆங்கிலேயர், தேநீரில் ஐஸ்கட்டியைப் போட்டு விற்று ஐஸ் டீயை அறிமுகப்படுத்தினார். கொதிநீரில் அப்படியே போட்டு பருகிய ‘இன்ஸ்டண்ட் டீ’ 1940களில் சந்தைக்கு வந்தது. இந்தியாவில் டீ அறிமுகம் 1940 களில்தான். அப்போது புதிதாக வந்த ‘தேநீ ரை’ யாரும் அருந்துவதில்லை. எனவே, சென்னையில் மாலை நேரத்தின்போது, டீயை இலவசமாக மக்களுக்கு வழங்கி, கூவி, கூவி கொடுத்தனர். முதலில் மக்கள் மறுத்தனர். பருகிப் பழகிய பின், தேநீரின் சுவைக்கும், மணத்துக்கும் அடிமையாயினர். பிறகு தேநீர் விலைக்கு விற்கப்பட் டது.அதெல்லாம் சரிதான் ! தேநீரால் நமக்கு என்ன லாபம் என்கிறீர்களா! இருக்கிறது நண்பா!
நோய் விரட்டும் நண்பன்!
உலகில் பெரும்பாலோர் வாழ்க்கை இளங்காலைப் பொழுதில் சூடான தேநீருடன் தான் துவங்குகிறது. நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்து சோர்வடையும்போது, உங்க ளைத் தட்டி எழுப்பி, சுறுசுறுப்புடன் செயல் பட வைப்பது ஒரு கோப்பை தேநீர்தான்! சமூகப் பரிமாற்றங்களும், அரசியல் பரிணாமங் களும் தேநீருடன்தான் உருவாகின்றன. தேயிலையில் சுமார் 700 வகை வேதிப் பொருட்கள் உள்ளன. தேநீர் பருகுவதன் மூலம் ஏராளமான நன்மைகள் நமக்கு ஏற்படு கின்றன. இதய நோய்களிலிருந்து பாதுகாக் கிறது; புற்று நோய்க்கு சிவப்புக் கொடி காட்டு கிறது; தற்காப்புத்திறனை தாராளமாய் அதி கரிக்கிறது; வீக்கத்தை விரட்டுகிறது; ஒவ்வா மையை ஓரங்கட்டுகிறது; சர்க்கரை நோயைத் தடுக்கிறது; கொழுப்பைக் குறைக்கிறது; அல் சரை அஞ்ச வைக்கிறது; பற்களைப் பாதுகாக் கிறது; இளமையை ஈர்த்து வைக்கிறது; உணவுக் குழலை உற்சாகப்படுத்துகிறது; உடல் பருமனைக் கணிசமாக குறைக்கிறது. கீல்வாதத்தை கட்டுப்படுத்துகிறது. நமக்கு தொல்லை தரும் பாக்டீரியா மற்றும் வைர ஸை விரட்டியடிக்கிறது. ஈரலை நன்கு செயல்பட வைக்கிறது. தேயிலையின் நோய்த் தடுப்புத் தன்மை பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகிறது அனுமார் வால்போல்.
உலகிலேயே தேயிலையை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். கடந்த 10 ஆண்டுகளில் தேநீர் பருகுவோரின் எண்ணிக்கை 10 மடங்காக பெருகிவிட்டது. தேயிலையில் வெள்ளை, பச்சை, ஓலாங் (டிடிடடிபே) கருப்பு என நான்கு வகைகள் உண்டு. ஒரு தேயிலைச் செடியிலிருந்துதான் இந்த நான்கு வகை தேயிலையும் தயாரிக்கப்படு கின்றது. இதனைப் பதப்படுத்தும் முறையால் தான் சுவையும் நிறமும் தேநீருக்குக் கிடைக் கிறது. மேலும் மண்வளம், உயரம், மழையும் கூட தேயிலையின் தரத்தை மாற்றியமைக் கிறது. நாம் இப்போது எல்லோரும் பயன்படுத் துவது கருப்பு தேயிலைதான். ஆனால் அதிக மருத்துவக்குணம் உள்ளது பச்சைத்தேயி லையே! உலகில் 20 சதம் மக்களே பச்சை தேயிலை பானம் அருந்துகின்றனர். பச்சைத் தேயிலையில்தான் அதிகமான வைட்டமின் களும், தாதுப் பொருட்களும் உள்ளன. ஒரு கோப்பை தேநீரில், ஓர் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட அதிகமான வைட்டமின் ‘சி’ உள்ளது. வைட்டமின் ‘சி’ தான் தற்காப்புத் தன்மையின் தலைவன்.
சர்வரோக நிவாரணி!
தேயிலையில் கரோட்டின் என்ற வைட் டமின் ‘ஏ’, பி-காம்ப்ளக்ஸ், சி, ஈ, பச்சையம், அமினோ அமிலங்கள், காபின், பெக்டின், கூட்டு சர்க்கரை, தாதுப்பொருட்கள், சஃபோ னின், ஃப்ளேவினால், பாலிஃப்னாலின் அமி லங்கள், கிளைகோசைடுகள் போன்ற ஏராள மான வேதிப்பொருட்கள் உள்ளன. இதிலுள்ள காட்டகின் (ஊயவநஉாin) இதயநோய், ஸ்ட்ரோக், சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்துகிறது. ஃபேளவினால் புற்றுநோயைத் தடுக்கிறது. கொழுப்பைக் குறைக்கிறது. தேயிலையி லுள்ள எல்-தியோனின் என்ற வேதிப்பொருள் மூளையின் ஆல்பா அலையை ஊக்குவித்து, சுறுசுறுப்பாக்குகிறது; மறதியைத் தடுக்கிறது என சமீபத்திய ஆராய்ச்சிகள் கண்டறிந்துள் ளன. முதுமையை அண்டவிடாமல் ஒதுக்கி விடுகிறது என்று கூறப்படுகிறது.
ஆய்வு முடிவு!
புற்றுநோய் அபாயம் 60 சதவீதம் குறைந் துள்ளது. சீனாவில் செய்த சோதனையில், ஒரு நாளைக்கு குறைந்தது இருமுறை என, 8 வாரம் தொடர்ந்து, பச்சை தேநீர் அருந்தினர், இரு மாதத்தில் 1 கிலோ எடையும், இடுப்புச் சுற்றளவு 1.8 செ.மீ. குறைந்ததாம். நீங்களும் இதைப் பின்பற்றலாமே!
தேநீரில் பால் வேண்டாம்!
தேநீரில் பால் கலந்து சாப்பிடும் மக்கள் 96 சதவீதம். அமெரிக்க மக்களில் 85 சதவீதம் பேர் ஐஸ் டீதான் அருந்துகின்றனர். 30 சதவீதம் பேர் மட்டுமே சர்க்கரை போட்டு குடிக்கின்றனர். பால் கலக்காத ‘கடுஞ் சாயா’தான் அனைத்து மருத்துவ குணங்க ளையும் தருகிறது. பால் கலந்தால்.. போச்சு. இதயத்துக்கு கெடுதல். எந்த வகை டீயும் நல்லதுதான். தைவான் நாட்டில்தான் ஓலாங் டீ அதிகம் அருந்துகின்றனர். வெள்ளை டீதான் விலை அதிகம். இந்தியர்கள், ஒவ் வொருவரும் சராசரியாக 750 கிராம் டீ உட் கொள்கின்றனர்.
நன்றி: பேராசிரியர் சோ.மோகனா
No comments:
Post a Comment