ஜியார்ஜ் வான் பியூர்பாக் (Georg von Peuerbach) ஒரு கணிதவியலாளர், வானவியலாளர் மற்றும் கருவிகள் உருவாக்குபவர் (Austrianastronomer, mathematician and instrument maker.) ஜியார்ஜ் 1423ல், ஏப்ரல் 30ம் நாள் (born May 30, 1423 in Peuerbach near Linz – April 8, 1461 in Vienna) ஆஸ்திரியாவின் லின்ஸ் (Linz) நகருக்கு அருகிலுள்ள பியூர்பாக் என்ற நகரில் பிறந்தார். இவரது குடும்பப் பெயர் தெரியவில்லை. அதனால் பெயருடன் இவரது பிறந்த ஊரை இணைத்தே அழைக்கின்றனர். பொதுவாக இவர் பியூர்பாக் என்றே சொல்லப்படுகிறார். பிறந்து சரியாக 17 ஆண்டுகள் கழித்து, 1440ல் வியன்னா பல்கலையில் தத்துவத்திலும், கலையிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். இவரது கணித ஆசான் ஜோகன் வான் க்முண்டேன் (Johann von Gmunden) ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின்னர் ஜியவான்னி பியான்சினியும், ரோம் நகர பாதிரியும் இந்த இளைஞனை ஃபெர்ரார பல்கலையில் (University of Ferrara) வானவியல் போதிக்க வலியுறுத்தினர். பிலோக்னா மற்றும் படுவா வில் தனக்கு வந்த பேராசிரியர் பணியை ஜியார்ஜ் மறுத்தார். பின் மீண்டும் வியன்னா சென்று, 1450 வரை கல்வி போதித்தார். அத்துடன் தத்துவம் மற்றும் இலக்கியமும் கற்றுத் தந்தார். பின்னர் 1453-54 வரை ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி சென்று வானவியல் உரைகள் நிகழ்த்தினார். 1454ல் ஹங்கேரி நாட்டின் மன்னர் லாடிஸ்லாஸ் (King Ladislas of Hungary) தந்த வானவியலாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஜொஹான்ஸ் முல்லர் இவரது மாணவராவார். ஜியார்ஜ் உலகின் மேற்குப் பகுதியின் கணிதம் மற்றும் வான் நோக்கும் வானவியலின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
பியூர்பாக், இப்போது ஹாலி வால்மீன் என்று அழைக்கப்படும் விண்மீனை வானில் கண்டார்; அதன் வரவைப் பதிவும் செய்தார். ஆனால் அது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என்பதை அறியவில்லை. அதன் பின்னர் அவரும் அவரது மாணவரான ரேஜியோமொண்டனசும் சேர்ந்து வினாவுக்கு அருகில், 1457ம் ஆண்டு செப்டம்பர் 3ம் நாள் வருகை புரிந்த சந்திர கிரகணத்தைப் பார்த்ததுடன், அதன் நிலைகளைப் பதிவும் செய்துள்ளார்கள். அவரது துவக்க கால வானவியல் பணிகள், கிரகணங்கள் பற்றிய கணக்கீடுகளும், கணிதக் குறிப்புகளும் நிறைந்த அட்டவணைகளாக, கிரகணங்களின் அட்டவணைகள் (Tabulae ecclipsium) என்று எழுதி வைத்துள்ளார். பின்னர் பியூர்பாக் இன்னும் அதிக வானவியல் அட்டவணைகளையும், விண்மீன் கோளம் (large star globe) வானவியல் கருவிகளையும் தயாரித்தார். வானத்தை அளக்க ஜகோப்ஸ் ஸ்டாப் (Jacob's staff) என்ற ஒரு அளவுமானியையும் கண்டுபிடித்தார். பூமியின் நடுப்பகுதியை அறிந்தார்.
ஜியார்ஜ் வான் பியூர்பாக், தாலமியின் புத்தகங்களைப் படித்து அதிலுள்ள சைனை (Sines), அராபிய கணிதத்திலிருந்து மாற்றினார். சிங்களின் தொகுப்பை (omputation of sines and chords in Tractatus super propositiones Ptolemaei de sinubus et chordis) புத்தகமாக வெளியிட்டார். ஒவ்வொரு நிமிடத்தின் வளைவும், 600,000 அலகுகள் உடைய ஆரம் என்றும் கணக்கிட்டார். இதுதான் உலகின் முதல் தசம எண் கணித மாற்று. தனது எளிமையான கருவிகள் மூலம் இதனை நிரூபித்தார். சாதாரண அளக்கும் கருவி கொண்டு விண்மீன்களின் கோணங்களை அறிந்தார். ரோம் சென்று, கிரேக்கத்திலுள்ள தாலமியின் சூரிய மையக்கொள்கை பற்றிய பணிகளை தன் மாணவர் முல்லர் மற்றும் ரேஜியோமொண்டனஸ் உதவியுடன் துவங்கினார். ஆனால் அதற்குள் வாழ்வின் இறுதியை எட்டிவிட்டதால், மாணவர்களே அவரது பணியை அல்மஜெச்ட்டின் தொகுப்பு என்ற பெயருள்ள இரண்டு தொகுப்பாக, (The two collaborated on Epitoma in Al-magestum Ptolemaei (A Summary of Ptolemy’s 'Almagest')) 1496ல் முடித்தனர்.
பியூர்பாக் ஏராளமான அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்தார். வாரடினத்தில் உள்ள வான் நோக்கத்தில் பியூர்பாக் பணிபுரிந்தார். உதாரணமாக ரெகுலா (regula) என்ற வடிவியல் சதுரம் இவரது கண்டுபிடிப்பே. பியூர்பாக்-கின் புத்தகமான அல்காரிதம் (Algorismus) என்பது பகுபடா முழு எண்கள் மற்றும் பின்னங்களைக் கொண்டு, செய்முறைக் கணக்குகளின் அடிப்படையிலான ஓர் அடிப்படை பாடப் புத்தகம். பியூர்பாக்கின் ஆராய்ச்சியில் அமைந்த திரிகோணமிதி மாறும் சைன்களின் அட்டவணையை அவரது மாணவரான ரேஜியோமொண்டனஸ் தான் தொகுத்து வெளியிட்டார். கோள்களைப் பற்றிய புதிய கொள்கைகள் என்ற புத்தகத்தின் ஆசிரியரும் பியூர்பாக் தான். பியூர்பாக்க்கின் இறப்புக்குப் பிறகே, ரேஜியோமொண்டனஸ் எபிடோம் (epitome) என்ற தொகுப்பையும் 1474ல் வெளியிட்டார். இதுவே நீண்ட காலம் வரை வானவியலின் குறிப்பேடு என்று போற்றப்பட்டது. இவரது கண்டுபிடிப்புகளுக்கும், ஜியார்ஜூக்கும் பெருமை சேர்க்கும் விதமாக, நிலவின் பள்ளம் ஒன்றுக்கு இவரது பெயரான பியூர்பாக் சூட்டப்பட்டுள்ளது.
நன்றி: பேரா.சோ.மோகனா
No comments:
Post a Comment