சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளான புதனின் சுற்றுவட்டத்தில் முதன் முதலாக செயற்கைக் கோள் நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய நாசா விஞ்ஞானிகள், மனிதர்கள் நிலவில் கால் பதித்து 40 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது இந்த முன்னேற்றம் கோள்கள் குறித்த ஆய்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்தனர்.
6 வருடங்களுக்கு முன்பாக நாசா அனுப்பிய விண்கலம் 490 கோடி கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, தற்போது சரியாக புதன் கிரகத்தின் சுற்றுவட்டத்தை அடைந்துள்ளது.
இதற்கு முன்பாக மெரினர் என்ற விண்கலம் தனது பயணத்தில் புதன் கிரகத்தின் மேற்பரப்பில் 45 சதவீதத்தை புகைப்படமாக எடுத்திருந்தது. அது நடந்தது 1974-75 ஆண்டுகளிலாகும். ஆனால் தற்போது அனுப்பப்பட்டுள்ள மெசஞ்சர் செயற்கைக் கோள் 90 சதவீத பாகத்தை வண்ணத்தில் படம் எடுக்கும். அத்துடன் சுற்றுவட்டத்திலேயே இயக்கவும் முடியும்.
செயற்கைக் கோளில் அமைந்துள்ள புகைப்பட கருவி மிகத்தெளிவான படங்களை எடுத்து அனுப்பும். மார்ச் 23 ஆம் தேதி தனது வேலையைத் துவக்கவுள்ள இந்த செயற்கைக் கோள், சூரிய ஒளியில் இருந்து தனது சக்தியைத் திரட்டும். ஏப்ரல்4 ஆம் தேதியில் இருந்து புகைப்படங்களைப் பெறத்துவங்கலாம் என்று தெரிகிறது.
“50 ஆண்டுகளுக்கும் மேலாக புரிந்துகொள்ள முடியாத நிலையிலேயே தொடரும் புதன் கிரகத்தை இப்போது நாம் அறிந்துகொள்ளப்போகிறோம். நமது சூரியக் குடும்பத்தின் மிக வெப்பமான கோள், தனது ரகசியத் தகவல்களை வெளிப்படுத்தப் போகிறது. இதன் மூலம் கிரகங்களைப் பற்றிய ஆய்வில் பாய்ச்சல் முன்னேற்றம் ஏற்படும்” என்று விஞ்ஞானிகள் தெரி
விக்கின்றனர்.
No comments:
Post a Comment