குளிப்பதற்கு வெந்நீர் போட, மத்தியதர வர்க்கத்தினரின் வீடுகளில் பொதுவாக மின்சார ஹீட்டர் பயன்படுத்தப்படுகிறது. மின்ஹீட்டர் செயல்படும்போது எலெக்ட்ரிக் மீட்டர் ஓடுவதைக் காட்டும் தகட்டினைப் பார்த்தோமானால் பதறிப் போவோம். அவ்வளவு வேகமாகச் சுற்றும். சமீப காலமாக, வீடுகளில் மின்ஹீட்டருக்கு மாற்றாக சூரிய வெப்ப ஹீட்டர் அறிமுகம் ஆகியிருக்கிறது. சூரிய வெப்பம் மிகுந்த நம் நாட்டில் இந்த ஹீட்டர் மேலும் மேலும் பயன்பாட்டுக்கு வருவது மிகவும் பொருத்தமானது. பூமி சூடேறி வருவதால் பருவநிலை மாற்றம் தாறுமாறாக நிகழத் தொடங்கியிருக்கும் இக்காலத்தில் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய சக்தி (Renewable Energy)யினால் இயங்கும் கருவியைப் பயன்படுத்துவது அவசியமும் கூட. சூரிய வெப்ப ஹீட்டர் சுற்றுப்புறத்திற்கு எந்தக் கேட்டி னையும் விளைவிப்பதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
சூரிய வெப்பத்தை உள்வாங்கிக் கொள்ள `கலெக்டர்’ எனப்படும் உலோகத்தகடு பயன்படுத் தப்படுகிறது. இந்தத் தகடுகளை வீட்டின் மேல்தளத்தில் பொருத்திவிடலாம். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம் அவற்றின்மீது சூரிய வெளிச்சம் பட்டாலே ஹீட்டரை பயன்பாட்டு நிலைக்குக் கொண்டு வந்துவிட முடியும். பலமாடிக் கட்டடங்களிலும் சூரிய வெப்ப ஹீட்டரை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுவரை பயன்படுத்தி வந்த வெள்ளீயம் அல்லது துத்தநாகத்தினால் முலாம் பூசப்பட்ட குழாய்களுக்குப் பதிலாக தற்போது குளோரின் ஏற்றப்பட்ட பிவிசி குழாய்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இக்குழாய்களில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி நாம் விரும்பும் அளவில் வைத்துக் கொள்ளும் ஏற்பாடு இருக்கிறது. நம் நாட்டில் வருடத்தில் பெரும்பாலான நாட்களில் வெய்யில் கொளுத்தி எடுப்பதால் சூரிய வெப்பம் கிடைப்பதில் பிரச்சனை ஏதும் இருக்கப் போவதில்லை.
மேல்தளத்தில் தண்ணீர்த் தொட்டி தேவையில்லை
பலமாடிக் கட்டடங்களின் மேல்தளத்தில் முன்போல பெரிய கான்கிரீட் தண்ணீர்த் தொட்டி களைத் தற்போது வைப்பதில்லை. மாறாக, தரைமட்டத்திலிருந்து நீரை அவ்வப்போது இறைத்துக் கொள்ளும் `ஹைட் ரோ-நியூமாட்டிக் பம்ப்’ பல புதிய கட்டடங்களில் நிறுவப்படுகிறது. இதனால் ஒவ்வொரு தளத்தி லும் ஒரே சீரான வேகத்தில் குழாயிலிருந்து தண்ணீர் கிடைக்கும். சூரிய வெப்ப ஹீட்டரை இந்த பம்ப்புடன் இணைத்துவிட முடியும்.
சூரிய வெப்ப ஹீட்டரின் விலை அதிகம்தான். ஆனால் அதன் விலையை இரண்டு மூன்று ஆண்டுகளில் மிச்சமாகும் மின்சார செலவிலிருந்து ஈடுகட்டி விடலாம்.
இன்று பருவநிலை மாற்றம், பூமி சூடேறுதல் எல்லாம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளன. மின் உபயோகத்தைக் குறைத்து சூரிய சக்தியை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே பரவ வேண்டும். பெரு நகரங்களில் கட்டப்படும் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களில் சூரிய வெப்ப ஹீட்டர் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
அரசு கட்டுப்படுத்துவதற்கு முன், நாமாக இப்படிப்பட்ட மாற்றங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளலாமே?
No comments:
Post a Comment