Thursday, September 23, 2010

தேவைக்கதிகமாக சாப்பிடுவதை உடற்பயிற்சி தடுக்கிறது

உடற்பயிற்சியின் காரண மாக கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்க அது உதவுகிறது என்பது நமக்குத் தெரிந்த செய்தி. ஆனால், மூளையில் உள்ள நியூரான்களைச் செயல்பட வைத்து எடையைக் குறைக்க உடற்பயிற்சி துணை செய்கிறது என்ற ஒரு புதிய உண்மை அண்மையில் தெரிய வந் திருக்கிறது. (நியூரான் அல் லது நரம்பு செல் என்பது மின் சக்தியினால் தூண்டப்படக் கூடிய செல். இது செய்திகளை மின்சார அல்லது வேதியியல் தகவல்களாக அனுப்புகிறது. நியூரான்களை நரம்பு மண்டலத்தின் அடிப்படை பாகங்களாகக் கருதலாம்).

நீரிழிவு உட்பட பல நோய்களை உடற்பருமன் வரவழைக்கக்கூடியது என்பதால் இன்று பருமனைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. உலக மக்கள் தொகையில் 40 சதம் பேர் இன்று உடற்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அளவுக்கதிகமான உணவு, உடல் உழைப்பில்லாத வாழ்வியல் முறை ஆகிய இரண்டிற்கும் உடல் பருமனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு உண்டு. நாம் சாப்பிடும்போது மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியில் உள்ள நியூரான்கள் `உண்டது போதும், நிறுத்திக் கொள்’ என்ற உணர்வைத் தரக்கூடியவை. கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை நாம் உட்கொள்ளும்போது நியூரான்களின் இந்த செயல் பாட்டில் சுணக்கம் ஏற்படுகிறது. தேவைக்கு மேல் உண்டு, உடற்பருமனை அதிகரித்துக் கொள்ள இது வழிவகுக்கிறது. நியூரான்களின் செயல்பாட்டினை மீட்டு திருப்தியாகச் சாப்பிட்ட உணர்வை சரியான நேரத்தில் ஏற்படுத்தவும் தேவைக்கதிகமாக சாப்பிடுவதைத் தடுத்து உடற்பருமனைக் கட்டுக்குள் வைக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது என்று பிரேசில் நாட்டு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சாப்பிடுவதற்கு முன் சுமார் அரை லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் என்று மற்று மோர் ஆய்வு தெரிவிக்கிறது.

Courtesy: Theekkathir

No comments: