Monday, September 20, 2010

எண்ணெய் கசிவுகளின் பின்உள்ள அரசியல்

உலகம் முழுவதும் ஏப்ரல் 22 பூமி நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில் இந்த ஆண்டு மெக்ஸிகோ வளை குடாவில் ஆழ்குழாய்க் கிணறு தோண்டு கையில் அது வெடித்து வரலாற்றின் மிக மோசமானதொரு எண்ணெய்க் கசிவு நிகழ்ந்தது ஒரு விநோதமான ஒற்று மையே. 11 தொழிலாளர்கள் அன்று பலியா கினர். நீண்ட காலத்திற்கு கடல்வாழ் உயி ரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை எண்ணெய்க் கசிவுகள் ஏற் படுத்தவல்லவை. பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் லூஸியானா கடற்கரைப் பகுதியில் எண்ணெய்க் கிணறு தோண் டும் காண்ட்ராக்டை எடுத்திருக்கிறது. ஒவ்வொரு மூன்றிலிருந்து ஐந்து தினங் களுக்கொரு முறை ஐந்திலிருந்து ஒன் பது மில்லியன் பீப்பாய்கள் வரை எண் ணெய்க் கசிவு இருந்தது ! அந்த அள வுக்கு கசிவுகள் பொதுவாக ஏற்படுவதில் லை. முதல் இராக் போரின்போது பாரசீக வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவைத் தவிர இதுவரை நடந்த மற்ற எண்ணெய்க் கசிவுகள் எல்லாமே தற்போது நிகழ்ந்ததைவிட சிறியவையே.

நைஜீரியாவிலிருந்து ஈக்வடார் வரை எண்ணெய்க் கசிவுகள் சர்வசாதாரண மாக நிகழ்ந்து வருபவைதான். ஆனால் அவையெல்லாம் மக்கள் கவனத்திற்கு வருவதேயில்லை. இந்த முறை மெக் சிகோ எண்ணெய்க் கசிவு இந்த அளவு ஊடகங்களில் இடம் பிடித்ததற்குக் காரணம் அது வழக்கம்போல் மூன்றாம் உலக நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத் தாமல் சற்று வித்தியாசமாக அமெரிக்க மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகை யில் நடந்துவிட்டதுதான் !

இம்மாதிரி பெரிய நிறுவனங்கள் சேதாரங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததல்ல. மக்களையும் பாதுகாப்பை யும்விட கொள்ளை லாபத்தை அவை மேலாக நினைப்பதுதான் இப்படிப்பட்ட `விபத்து’களுக்குக் காரணம். மெக்ஸிகோ வளைகுடாவில் கிணறு தோண்டுவதற்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஒரு நாளைக்கு 5 லட்சம் டாலர் செலவழிக்க வேண்டிய நிலையில் இந்தத் தொகையை மிச்சப் படுத்தி வேறொரு இடத்திற்குச் செல்ல அந்தக் கம்பெனி அவசரப்பட்டது. கம் பெனியுடைய பொறியாளர்களும் காண்ட் ராக்டர்களுமே பாதுகாப்புக் காரணங் களுக்காக அந்த முடிவுக்கெதிராக எச் சரிக்கை செய்தனர். ஆனால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 6.1 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) கொள்ளை லாபம் ஈட்டிய அக்கம்பெனி பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல், செலவை மிச்சப்படுத்துவதிலேயே குறி யாக இருந்தது.

எண்ணெய்க் கசிவுகள் ஏற்படுத்தக் கூடிய பலத்த சேதங்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அமெரிக்கா போன்ற நாடுகள் எண்ணெய்க் கம்பெனிகள் மீது எந்தக் கட்டுப்பாடினையும் விதிப்பதில்லை. இதனால் குழாய் தோண்டும் இயந்திரத் தைப் பராமரித்து விபத்துத் தடுப்பு நட வடிக்கைகளை எடுப்பதில் அவை முனைப்பு காட்டுவதில்லை. விபத்து நடந் தால் கம்பெனி தரவேண்டிய அதிகபட்ச இழப்பீட்டினை புஷ் நிர்வாகம் 75 மில்லி யன் டாலராக மட்டுமே நிர்ணயித்திருந் தது. பெரிய கம்பெனிகள் 25 பில்லியன் டாலர்களுக்கு மேல் லாபம் ஈட்டுகின்றன என்பதைக் கணக்கில் கொண்டு இந்த இழப்பீட்டினைப் பார்க்க வேண்டும்.

லாபம் தனியாருக்கு, விபத்தின் விலை மக்களுக்கு

அதிக அளவில் லாபம் வந்தால் அது தனியாருக்கு... விபத்து நேர்ந்தால் அதைத் தங்கள் உயிரையும் வாழ்க்கை யையும் இழந்து விலைகொடுக்க வேண் டிய பொறுப்பு மக்களுக்கு - இதுதான் முதலாளித்துவம் நமக்குச் சொல்லும் தத்துவம். இதில், அரசுகள் -பெரியவை, சிறியவை என்ற பேதம் இன்றி - தனியார் மூலதனத்துடன் கைகோர்த்துக் கொள் ளும் கொடுமையையும் பார்த்து வருகிறோம்.

பூமியைத் தோண்டியதுமே எண் ணெய் கிடைத்த காலம் மலையேறி விட்டது. இன்று பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், டெக்ஸாகோ, ஆரம்கோ போன்ற பெரிய கம்பெனிகள் தண்ணீருக்கடியில் இரண்டு கிலோ மீட்டர் வரையிலும் அதற் குக் கீழ் கடல் தரையின் சேறு, வண்ட லுக்கடியில் 10 கிலோ மீட்டர் வரையிலும் தோண்ட வேண்டிய சவால் மிக்க பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 10 கிலோ மீட்டர் நீளம் உள்ள தண்ணீர் மற்றும் வண்டல் தரும் அழுத்தம் எஃகு தகடுகளைக்கூட உடைத்து நொறுக்கி விடக் கூடியவை. கடல் நீரின் அடியில் வெப்பநிலை தண்ணீர் உறைநிலைக் கரு கிலும் கடல் தரைக்குக் கீழே போகும்போது 250 டிகிரி சென்டிகிரேட் வரையிலும் இருக்கும். இவ்வளவு வேறுபாடுள்ள வெப்பநிலையைக் கையாளும்போது சிக் கலான தொழில்நுட்பப் பிரச்சனைகளை கம்பெனிகள் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த சூழ்நிலையில் தகுந்த கட்டுப்பாடு கள் இல்லையெனில் அவை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் தப்பிக்க முயல்கின்றன. உரிய பாதுகாப்பு எற்பாடு கள் செய்யப்பட்டுள்ளனவா என்று கண் காணிக்கும் மிகப் பெரிய பொறுப்பு மக் கள் இயக்கங்களுக்கே வந்து சேருகிறது. இதில் அரசாங்கங்களை நம்பி நாம் ஏமாந்துவிடக் கூடாது.

No comments: