Thursday, August 19, 2010

ஆரம்பகால மனிதர்கள் குளிர் பிரதேசங்களிலும் வாழ்ந்தனர்

ஆரம்பகால மனிதர்கள் ஆப்பிரிக் காவை விட்டு 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உலகின் வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தனர் என்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் முடிவு. குளிர்ப் பிரதேசங்களின் பருவநிலையைத் தாக்குப் பிடிக்கும் தேர்ச்சி கிடைக்கப்பெறாத அம் மனிதர்கள் துருவப் பிரதேசங்களுக்கு முதலில் சென்றிருக்க வாய்ப்பு இல்லை எனக் கருதப்பட்டு வந்தது. 450 அட்ச ரேகைக்குட்பட்ட பூமத்தியரேகையை ஒட்டிய வெப்பப் பிரதேசங்கள் மற்றும் மத்திய தரைக் கடல் பகுதிகளுக்கு சென்றதற்கான சான்றுகளே சமீபகாலம் வரை கிடைத்திருந்தன.

2005-ல் `நேச்சர்’ இதழில் பிரசுரிக்கப் பட்ட ஓர் அறிக்கை ஆரம்பகால மனிதர்கள் 450சூ-த் தாண்டிச் செல்ல 7,00,000 ஆண்டுகளுக்கு முன் துணிந்தனர் என்றும் அவர்கள் இங்கிலாந்து நாட்டு சஃபோக் பகுதியிலுள்ள பாக்ஃபீல்டை (520சூ) அடைந்தனர் என்றும் குறிப்பிட்டது. அதே `நேச் சர்’ இதழில் இந்த ஆண்டு ஜூலை 8 அன்று வெளியான ஓர் அறிக்கையின்படி 7,80,000 ஆண்டுகளுக்கு முன்பே வாடைக்காற்றுப் பிரதேசங்களில் மனிதர்கள் இருந்ததற்கான சான்று கிடைத்திருக்கிறது. அப்பிரதேசங்களில் வருடத்தில் பெரும்பகுதி பனி விழும் குளிர்காலமாகவும் மிகக் குறுகிய காலத்திற்கு கோடைகாலமாகவும் இருக்கும்.

இங்கிலாந்தில் நார்ஃபோக்கிற்கு வட கிழக்குக் கரையில் இருக்கும் ஹாப்பிஸ்பர்கிலிருந்து ஆதிகால மனிதர்கள் பயன் படுத்திய கருவிகள் அல்லது கலைப் பொருட்கள் புதை பொருள் ஆய்வாளர்களால் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. சஃபோக்கைப் போல, ஹாப் பிஸ்பர்கும் 520சூ அட்சரேகையில் உள்ளது. அக்காலத்திய பொருட்கள் மட்டுமல்ல, அங்கு வாழ்ந்த தாவரங்கள், விலங்குகளின் அடையாளங்களும் கிடைத்துள்ளன. மேற்கண்ட ஆய்வுகள் ஆரம்ப கால மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து குளிர்ப்பிரதேசங்களுக்கும் குடிபெயர்ந்தனர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

Courtesy to : Theekathir

No comments: