Friday, July 9, 2010

24 தேமிஸ் சிறுகோள் மேற்பரப்பில் ஐஸ்

24 தேமிஸ் சிறுகோள் மேற்பரப்பில் ஐஸ்

24 தேமிஸ் என்பது செவ்வாய், வியாழன் ஆகிய இரு கிரகங்களுக் கிடையேயுள்ள 200 கி.மீ. அகலமுள்ள சிறுகோள். அமெரிக்கா வின் மேரிலாண்டிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜோஸ் எமெரியும் ஆன்ட்ரூ ரிவ்கினும் அந்தக் கோளின் மேற்பரப்பை அகச் சிவப்புநிறக் கதிர் தொலைநோக்கி வழியே ஆய்வு செய்து வந்தனர்.

பூமிக்கு நீர் கிடைத்தது எப்படி?

சிறுகோளிலிருந்து பிரதிபலிக்கப்ப டும் அகச்சிவப்பு ஒளியின் நிறப்பிரிகையில் உறைநிலையில் உள்ள நீருடன் பொருந்தக்கூடிய ஒளிக்கற்றை இருப்பதைக் கண்ட அவர்கள் 24 தேமி ஸின் மேற்பரப்பு மெல்லிய ஐஸ் திரை யினால் மூடப்பட்டிருக்கிறது என்ற முடி வுக்கு வந்தனர். சிறுகோள்கள் இருண்ட, வறண்டுபோன, உயிரற்ற பாறைகளால் ஆனவை என்று நீண்டகாலமாக விஞ்ஞானிகள் கருதி வந்தனர். தற்போதைய கண்டுபிடிப்பு அது சரியல்ல எனத் தெரிவிக்கிறது. அத்துடன் பூமிக்கு நீரையும் உயிரிப் பொருளையும் கொண்டு வந்தது சிறுகோள்களாகவே இருக்கக் கூடும் எனக் கருத இக்கண்டுபிடிப்பு வழிகோலியிருக்கிறது.

“நாங்கள் கண்டுபிடித்த உயிரிகள் சிக்கலான, நீண்ட சங்கிலிகளால் பிணைக் கப்பட்ட மூலக்கூறுகளே. அவற்றை வறண்ட, உயிரினமற்ற பூமியின்மீது எரிநட்சத்திரங்கள் மழை போல் பொழிந்து பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு உந்துசக்தியாக இருந்தி ருக்கக் கூடும் ... 24 தேமிஸ் மேற்பரப்பில் ஐஸ் இருப்பது ஆச்சரியமானது. ஏனெ னில் அங்கு இருக்கும் வெப்பத்தைப் பார்க்கும்போது ஐஸ் நீண்ட நேரத்திற்கு அதில் ஒட்டிக் கொண்டிருக்க முடியாது. எனவே, மேற்பரப்பில் உள்ள ஐஸ் சூரிய வெப்பத்தினால் ஆவியாகும்போது அதை ஈடுகட்டும் விதத்தில் சிறுகோளின் உட் புறத்தில் அதிக அளவில் ஐஸ் இருக்க வேண்டும். 24 தேமிஸில் ஏராளமான அள வில் ஐஸ் இருப்பதைக் கண்டுபிடித்த தானது, சிறுகோள்கள் இருக்கும் மெயின் பெல்ட் பகுதியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. ” என் கிறார் எமெரி (தகவல் : தி இந்து).

சிறுகோள்கள் பாறைகளால் ஆன வை என்றும் வால் நட்சத்திரங்கள் (உடிஅநவள) ஐஸ் கட்டிகளால் ஆனவை என்றும் நீண்ட காலமாகக் கருதப்பட்டு வந்தது. வால் நட்சத்திரங்கள் பூமிக்குத் தண்ணீரைக் கொண்டு வந்திருக்கக் கூடும் என்று ஒரு கட்டத்தில் நம்பப்பட் டது. தற்போதைய கண்டு பிடிப்பு சிறு கோள்களுக் கும் வால்நட் சத்திரங்க ளுக்கும் உட்கட்டமைப் பில் பெரிய வித்தியாசமில்லை என்பதையும் பூமிக்கு சிறு கோள்களே நீரைக் கொண்டு வந்திருக்கக் கூடும் என்ப தையும் எடுத்துக் காட்டியுள்ளது.

விண்வெளியில் ஒரு வாயு நிலையம்

சிறுகோள்களில் தண் ணீர் கண்டுபிடிக்கப்பட் டது, மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணங்களுக்கு உதவும் வகையில் விண்வெளியி லேயே ஒரு வாயு நிலை யத்தை (பயள ளவயவiடிn) நிறு விக் கொள்ளும் சாத்தியக் கூறு இருப்பதை எடுத்துக் காட்டியுள்ளது. தண்ணீரி லிருந்து மின்னாற்பகுப்பு மூலம் ஹைட்ர ஜன் வாயுவைப் பிரித்து எடுக்க முடியும். அது மட்டுமல்ல, விண்வெளி மனிதர்கள் அந்தத் தண்ணீரைச் சுத்தப் படுத்தித் தங்களுக்குத் தேவையான குடிதண்ணீரைத் தயாரித்துக் கொள்ள முடியும். இப்போது விண்கலங்களில் பூமியிலிருந்து தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், விண்கலத் தின் எடை மிக அதிகமாக உள்ளது. விண்வெளிப் பயணத்தின் போது தண் ணீரைச் சேகரித்துக் கொள்ள முடியுமா னால் இங்கிருந்து நீரைச் சுமந்து செல்ல வேண்டிய தேவை எழாது. விண்கலத் தின் எடையைக் கணிசமாகக் குறைக்க முடியும். எடை குறைந்தால் எடையைச் சுமந்து செல்வதற்கு தற்போது செல வழிக்கப்படும் சக்தியையும் குறைத்துக் கொள்ளலாம்.

பூமியின் ஈர்ப்புவிசையைவிட சிறு கோளின் ஈர்ப்புவிசை மிகமிகக் குறைவா னது. தன்னந்தனியாக இருக்கும் சிறு கோளிலிருந்து தண்ணீரைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்துவதென்பது சவால் மிகுந்த ஒரு பிரச்சனையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கோள்களும் சிறுகோள்களும் ஆரம் பகால சூரியக் குடும்பத்தில் உருவான சமயத்தில், சிறுகோள்கள் இருக்கும் மெயின்பெல்ட் பகுதியில் ஐஸ் பரவியதன் காரணமாக, மற்ற நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள கிரகங்களிலும் முதன்முதலில் நீரும் உயிரிகளும் தோன்றியிருக்கக் கூடும். உயிரினம் அந்த கிரகங்களில் தோன்றியுள்ளதாவென அறிந்துகொள்ள வானவியலாளர்களுக்கு அரிய வாய்ப்பு கிட்டியிருக்கிறது. இந்தக் கண்ணோட்டத் தில் பார்க்கும்போது வரும் ஆண்டுகள் சுவாரசியமானவை என்பதில் சந்தேகம் இல்லை.

Courtesy : Theekkathir

1 comment:

மக்கள் தளபதி said...

வணக்கம்,
"தக்கன வாழும். தகாதன அழியும்" [ "Survival of the fittest"] இதைப் பற்றிய குறிப்புகள்/பாடலகள் தமிழில் இருக்கிறதா என நீங்கள் அறிந்த விடயங்களை இங்கே பகிரவும்.
http://makkalthalapathi.blogspot.com/2010/07/blog-post_09.html