Thursday, February 25, 2010

நிறம் காண திணறும் மூளை

நீல வானம், பச்சைக் கிளி, எலுமிச்சை மஞ்சள் என்று நாம் பொருள்களை அதனதன் நிறத்தோடுதான் நினைவில் வைத்திருக்கிறோம். இவற்றை மாற்றினால் குழப்பம் ஏற்படும். பறந்து வரும் கால்பந்தைப் பார்க்கும்போது நமக்கு பந்தின் வடிவம், நிறம் மற்றும் அதன் திசை, வேகம் ஆகியவைகளும் சேர்ந்துதான் கவனிக்கிறோம்.

மூளையில் நிறத்தை அறிவதற்குத் தனியாக ஒரு இடமும் அதன் வடிவம் முதலானவற்றை அறிவதற்குத் தனித்தனியாக வேறு இடங்களும் உள்ளன. இருப்பினும் நாம் அவற்றைத் தனித்தனியாக உணராமல் ஒன்றாகத்தான் அறிகிறோம். மூளையின் பகுதிகளை ஒருங்கிணைத்து வழங்கும் பகுதி ஒன்று இருப்பதால் இது சாத்தியமாகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரித்தான நிறம் வடிவம் முதலியன வெவ்வேறு இடங்களில் நினைவுகளாக சேமிக்கப்படுகின்றன. மீண்டும் நினைவு கூறும்போது அவற்றை ஒன்று திரட்டித்தான் நாம் பார்க்கிறோம்.

சிக்காகோ பல்கலைக்கழக நரம்பியல் வல்லுநர்கள் ஒரு காரியம் செய்தார்கள். ஒரு கண் மேல் கீழாக உள்ள சிவப்பு கோடுகளைப் பார்க்கவும், இன்னொரு கண் வழியாக பச்சை நிற குறுக்குக் கோடுகளைப் பார்க்கும்படியாகவும் செய்து, ஒரு கண்ணில் கோடுகளை கவனிக்காதபடி செய்தபோது பார்ப்பவருக்கு ஒரு திசை கோடுகள்தான் தெரிந்தன. ஆனால் இரண்டு நிறங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்தக் கோடுகளுக்கு கலர் கொடுத்தன. மூளை நிறங்களை பொருள்களுக்கு எப்படி தீர்மானிக்கின்றன என்பதை அறிவதற்காக இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். வடிவமில்லாமல் வெறும் கலரை மூளை சேமித்து வைக்கத் திணறுகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.

No comments: