Thursday, October 22, 2009

நோபல் பரிசை வென்ற இந்தியர்

2009ஆம் ஆண்டிற்கான வேதியிய லுக்கான நோபல் பரிசு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம்), தாமஸ் ஸ்டீட்ஸ் (யேல் பல்கலைக் கழகம்), அடா யோனத் ( வீஸ்மான் இன்ஸ்டிட்யூட், இஸ்ரேல்) ஆகிய மூவருக் கும் பகிர்ந்து அளிக்கப்பட்ட செய்தியைப் படித்திருப்பீர்கள்.

இதில் ராமகிருஷ்ணன் அமெரிக்கா வில் வாழ்பவரானாலும் இந்தியாவில் -அதுவும் சிதம்பரத்தில் - பிறந்தவர் என்ப தால் அவரது ஆராய்ச்சி பற்றி தமிழகத் தில் ஆர்வம் எழுந்திருக்கிறது. ராம கிருஷ்ணன் சிறு வயதிலேயே பரோடாவுக் குக் குடிபெயர்ந்து அங்கு படித்து, பின் னர் வெளிநாடு சென்றவர். முதலில் இயற்பியல் படித்தாலும் உடற்கூறியியலில் ஆராய்ச்சிக்கு இருந்த வாய்ப்புகள் கார ணமாக ராமகிருஷ்ணன் அத்துறைக்கு மாறியவர்.

ரைபோசோம் பற்றிய ஆராய்ச்சி

ரைபோசோமின் (சibடிளடிஅந) விவரங் கள் அடங்கிய வரைபடத்தைத் தயாரித்த தற்காக இம்மூவருக்கும் பரிசு வழங்கப்பட் டிருக்கிறது. ரைபோசோம் என்றால் ... ? நம் உடலில் உள்ள செல்களிலுள்ள மர பணு தொடர்பான தகவல்களைச் சேக ரித்து அந்த அடிப்படையில் நம் உடலுக் குத் தேவையான ஆயிரக்கணக்கான வெவ்வேறுவகை புரோட்டீன்களைத் தயா ரிக்கும் மூலக்கூறுகள்தான் ரைபோசோம் கள். இந்த புரோட்டீன்கள்தான் நம் உட லில் நடக்கும் பல்வேறு செயல்பாடு களைக் கட்டுப்படுத்தி நம்மை உயிர்வாழ வைக்கின்றன. புரோட்டீன்களைத் தயா ரிக்கும் ஆலைதான் ரைபோசோம் என் பதை 1958-இல் கண்டுபிடித்த விஞ் ஞானிகள் அத்துகளுக்கு `ரைபோசோம்’ என்று பெயரிட்டனர்.

நுண்ணுயிர்களிலிருந்து மனிதர்கள் வரை உள்ள எல்லா உயிரிகளிலும் உள்ள அனைத்து செல்களிலும் ரைபோசோம் கள் இருக்கின்றன. ரைபோசோம் 25 நானோமீட்டர் அளவே உடையது (ஒரு நானோமீட்டர் என்பது ஒரு மில்லி மீட் டரில் 10 லட்சத்தில் ஒரு பகுதி). ஒவ் வொரு செல்லிலும் ஆயிரக்கணக்கான ரைபோசோம்கள் இருக்கின்றன. ஒவ் வொரு ரைபோசோமிலும் ஆயிரக்கணக் கான அணுக்கள் இருக்கின்றன. தற் போது இந்த அணுக்கள் ஒவ்வொன்றின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ளவும் அதன் மூலம் ரைபோசோம் கள் புரோட்டீன்களைத் தயாரிக்கும் சிக்க லான முறை பற்றி அறிந்து கொள்ளவும் இந்த ஆராய்ச்சி வழிகாட்டியிருக்கிறது.

ஒரு மூலக்கூறின் கட்டமைப்பைப் (ளவசரஉவரசந) பற்றித் தெரிந்து கொள்ளாமல் அது எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது. அதனால் ரைபோசோம்கள் எப்படிப் புரோட்டீன் களைத் தயாரிக்கின்றன என்பதை அறிந்து கொள்ள அவற்றின் கட்டமைப்பைத் தெரிந்து கொள்வது அவசியம். சக்தி வாய்ந்த எக்ஸ் கதிர்களைக் கொண்டு ரைபோசோம்களில் உள்ள அணுக்களின் கட்டமைப்பு பற்றி அறிவது சவாலான பரி சோதனையாக இருந்தது. 1980-லிருந்து இத்திசையில் ஆரம்பக்கட்ட பரிசோத னைகளைத் தொடங்கி 20 ஆண்டுகளில் ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தவர் டாக்டர் யோனத். டாக்டர் ஸ்டீட்ஸூம் டாக்டர் ராமகிருஷ்ணனும் பின்னரே இந்த ஆராய்ச்சியில் இணைந்து கொண்டவர்கள்.

கண்டுபிடிப்பின் மகத்துவம்

எந்த உயிரியும் ரைபோசோம் இன்றி உயிர்வாழ முடியாது என்பதால், உட் கொள்ளப்படும் எந்த மருந்திற்கும் இலக்கு ரைபோசோம்கள்தான். இன்று பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட பல ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் காலப்போக்கில் மருந்துகளை எதிர்க்கும் சக்தியை நோயை ஏற்படுத்தும் கிருமிகள் பெற்றுவிடுவதால், மருந்துகள் செய லிழந்து விடுகின்றன. இது மருத்துவ உலகம் இன்று சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை. நோய்க்கிருமிகளைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடும் வகையில் புதிய ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தயாரிக் கப்பட இந்தக் கண்டுபிடிப்பு உதவியிருக் கிறது. எனவே, இந்த ஆராய்ச்சியின் மூலம் மனிதகுலத்திற்கு மிகப் பெரிய நன்மை கிடைக்க இருக்கிறது.

நோபல் பரிசை வென்றதற்காக ராம கிருஷ்ணனைப் பாராட்டினால் “நோபல் பரிசை வைத்து அறிவியலை எடை போடு வது தவறு. அடிப்படை அறிவியலுக்கும் அறி வுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் வகை யில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கி வளர்த்து இளைஞர்களுக்கு அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே அரசின் கடமை” என்று அவர் அறிவுறுத்துகிறார்.

இன்று மேற்படிப்பு என்றாலே பொறி யியலும் மருத்துவமும்தான் என்று பலரும் கருதும் சூழ்நிலையில், டாக்டர் ராமகிருஷ் ணனின் அறிவுறுத்தல் அரசின் காதுக ளில் மட்டும் விழுந்தால் போதாது. மாண வர்கள், பெற்றோர்களின் சிந்தனையி லும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

நன்றி: தீக்கதிர்

No comments: