Tuesday, October 20, 2009

வில்லியம் ஹார்வி நவீன உடற்கூறிலியல்

இரத்தம் மற்றும் இரத்த ஓட் டத்தின் முக்கியத்துவம் ஹிப்போ கிரட்டஸ், அரிஸ்டாட்டில் காலத்தி லிருந்தே அறியப்பட்ட ஒன்றுதான். ஆனால் இரத்த ஓட்டம் பற்றியோ, இதயம் பற்றியோ, முழுமையான தக வல்கள் அவர்களுக்குத் தெரியவில் லை. இதயம்தான் மனித அறி வினைத் தீர்மானிக்கிறது என்று அரிஸ்டாட்டில் தவறாக நினைத் தார். கேலன் (கி.பி. 130-200) என் பவர் நாடித்துடிப்பை நோயின் அறி குறியாக முதன்முதலில் வழக்கத் திற்குக் கொணர்ந்த மிகச் சிறந்த கிரேக்க மருத்துவர். அவரும் கூட எல்லா இரத்தமும் கல்லீரலில் தோன்றுவதாக நினைத்தார். முதன்முதலில் இரத்தம் ஒரு மூடிய வட்டப்பாதை வழியாக உடல் முழுவதும் செலுத்தப்படுகிறது என்று நிரூபித்தவர் வில்லியம் ஹார்வி (1578-1657).

நியூட்டனுக்கு சமமான முக்கியத்துவம் உள்ளவர்

ஹார்வியினுடைய கண்டு பிடிப்பு மருத்துவத்துறையில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது. மிகக் கவனமாக ஆய்வுக் குறிப்புகள் எடுத்து, அவற்றின் அடிப்படையில் முடிவுக்கு வருவது என்ற அவரது புதிய அணுகுமுறை தான் நவீன உடற்கூறியலுக்கான (ஆடினநசn ஞாலளiடிடடிபல) அடிப்படை யை அமைத்துத் தந்தது. சூரியக் குடும்பத்திற்கு நியூட்டனின் ஈர்ப்பு விதி பற்றிய கண்டுபிடிப்பு எந்த ளவு அடிப்படையானதோ, அதே அளவுக்கு உடற்கூறியலுக்கு ஹார் வியின் கண்டுபிடிப்பு அடிப்படை யானது என்கிறது விஞ்ஞானி களின் பட்டியலைத் தொகுத்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அக ராதி. இரண்டாவது மில்லினத்தின் (மில்லினம் என்றால்ஆயிரம் ஆண் டுகள்) 10 மிக முக்கியமான மனிதர் களைப் பட்டியலிட்ட ஆர்தர் ஷ்லெ சிங்கர் என்ற வரலாற்று ஆய்வா ளர் அப்பட்டியலில் ஹார்வியின் பெயரைச் சேர்த்திருக்கிறார்.

கலீலியோ போதித்த பல்கலைக்கழகத்தில்...

இங்கிலாந்தில் 1578ஆம் ஆண்டு பிறந்தவர் ஹார்வி. பல் வேறு விலங்குகளின் இதயங் களைக் கசாப்புக் கடைக்காரர்களி டமிருந்து பெற்று, இதயங்களின் செயல்பாடு பற்றி சிறுவயதிலிருந்தே ஆய்வு செய்யத் தொடங்கினார். மருத்துவப் படிப்பை மேற்கொள்ள அப்போது இத்தாலியில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கிய பாதுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு ஒரு சண்டையில் படுகாய மடைந்த நண்பர் ஒருவரது உடலி லிருந்து இரத்தம் வெளியேறும் போது, தமனி வழியாக விட்டுவிட் டும், சிரை வழியாக ஒரே சீராகவும் வெளியேறியதைக் கவனித்தார். இரத்தம் உடலின் ஏதோ ஒரு பகுதி யிலிருந்து அழுத்தப்பட்டு வெளி யேறுகிறது என்ற முடிவிற்கு ஹார்வி வர இந்நிகழ்ச்சி உதவியது. உட லில் இரத்தம் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் அதற் கான அழுத்தத்தைத் தருவது சுருங்கி விரியும் தன்மை கொண்ட இதயம்தான் என்பதையும் பின்னர் கண்டறிந்தார். “சிரைகளில் உள்ள வால்வுகள் இரத்தம் சிரைகளிலி ருந்து இதயத்திற்குச் செல்லுமாறு செயல்படுகின்றன ; அதே போல, இதயத்தில் உள்ள வால்வுகள் இரத்தம் இதயத்திலிருந்து தமனி களுக்குச் செல்லுமாறு செயல்படு கின்றன” என்று அவர் கண்டு பிடித்தார். இரத்த ஓட்டம் பற்றிய தன் கண்டுபிடிப்பை 1628-இல் 72 பக்கங்கள் கொண்ட சிறிய புத் தகமாக வெளியிட்டார்.

சூரியன் பூமியைச் சுற்றிவர வில்லை, பூமிதான் சூரியனைச் சுற்றிவருகிறது என்று கண்டு பிடித்த நிக்கோலாஸ் கோப்பர்னிக் கஸ் இதே பல்கலைக்கழகத்தில் படித்தவர்தான். ஹார்வி அப்பல் கலைக்கழகத்தில் படிக்கும்போது கலீலியோ அங்கு வானவியல் போதித்துக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

கருவியல் துறையில் ஆய்வுகள்

கருவியல் (நஅசெலடிடடிபல) துறை யிலும் ஹார்வி ஆய்வுகள் மேற் கொண்டார். உயிர் தானாகவே உரு வாகக்கூடியது என்றிருந்த நம்பிக் கையை நிராகரித்து, அனைத்து உயிர்களும் முட்டைக்கருவிலி ருந்தே உருவாகின்றன என்று கூறியவர் ஹார்வி.

நோய்க்கிருமிகள், பாம்பின் விஷம் போன்ற விஷங்கள் உடல் முழுவதும் எப்படி வேகமாய்ப் பரவ முடிகிறது என்ற கேள்விக்கு, ஹார் வியின் இரத்த ஓட்டம் பற்றிய கண்டுபிடிப்புகள் விடை கண்டன. சிரையில் ஒரு மருந்தை ஊசி மூலம் செலுத்தியதும் அது உடல் முழுவதும் ஊடுருவி விடும் என்பதை மருத்துவர்கள் தெரிந்து கொள்ள வும் அவரது கண்டுபிடிப்புகள் உத வின. புது இரத்தத்தைச் செலுத்தி நோயாளியைக் காப்பாற்றும் முறை யை (டெடிடின வசயளேகரளiடிn) அவர்கள் உடனே பரிசோதிக்கத் தொடங்கி னர். ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. காரணம், இரத்தத்தில் பல வகைகள் (டெடிடின பசடிரயீள) என்பது அப்போது தெரி யாது! ஒரே வகையைச் சேர்ந்த இரத்தத்தைத்தான் உடல் ஏற்றுக் கொள்ளும் என்பது பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது.

No comments: