உயிர்த்தெழும் செடி
"உயிர்த்தெழும் செடி" என்று ஒரு தாவரம் இருக்கிறது. ஸீரோஃபைட்டா விஸ்கோசா (Xerophyta viscosa) என்பது அதன் அறிவியல் பெயர். இது 95 சதவீதம் காய்ந்துபோன பிறகும்கூட கொஞ்சம் தண்ணீர் விட்டால் மறுபடியும் பிழைத்துக் கொள்ளும். காய்ந்து போனாலும் உயிரைத் தாக்குபிடிக்கும். இதன் ஜீன் எது என்பதை கண்டுபிடித்து அதை நெல்லுக்கும் இதர பயிர்களுக்கும் வழங்கினால் நன்செய் பயிர்களை புன்செய் பயிர்களாக வறண்ட பூமியில் வளரச் செய்யலாம்.
ஆனால் ஜீன் மாற்று ஆய்வுகளில் பெரும்பகுதி தனியார் ஆய்வுக்கூடங்களின் அறிவுசார் சொத்தாக இருப்பதால் உண்மையான பசுமைப் புரட்சியைத் தருமா அல்லது இன்னுமொரு ஏழை பணக்கார போராட்டத்தைத் தருமா என்பது கேள்விக்குறி.
No comments:
Post a Comment