இரத்த சேமிப்பு வங்கி களைப் பற்றி நமக்குத் தெரியும். இதே போல் தொப்புள் கொடி இரத்த ஸ்டெம் செல்களைச் சேகரிக்கவும் ஒரு வங்கி இருக் கிறது.
ஸ்டெம் செல்களைத் தாய் செல்கள் எனலாம். அவற்றிலி ருந்துதான் இரத்த செல்கள், மூளை செல்கள், இதயத் தசை செல்கள், எலும்பு செல்கள் போன்ற தனிப்பட்ட செயல் பாட்டினைக் கொண்ட பல் வேறு செல்கள் உற்பத்தி செய் யப்படுகின்றன. ஸ்டெம் செல் களால் மட்டுமே தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள் ளவோ அல்லது வேறுவகை செல்களாக மாறவோ இயலும்.
ஸ்டெம் செல்கள் தாலஸ் ஸெமியா, இரத்தப் புற்று நோய், நீரிழிவு, இதயக் கோளா றுகள் போன்ற சில வகை மர பியல் நோய்களைக் குணப்படுத் தப் பயன்படுகின்றன.
சென்னையில் ஜீவன் ஸ்டெம் செல் வங்கி என்ற அமைப்பு தொப்புள் கொடிகளைச் சேக ரிக்க அனுமதிக்கப்பட்டிருக் கிறது. ஐந்தாண்டுகளில் 35,000 தொப்புள் கொடிகளைச் சேக ரிக்கத் திட்டமிட்டிருப்பதாக அதன் இயக்குநர் டாக்டர் பி. சீனிவாசன் ‘இந்து’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித் துள்ளார்.
தொப்புள் கொடி சேகரிக் கும் `பொது வங்கி’ எனில், அதைத் தேவைப்படும் யாருக் கும் பயன்படுத்த முடியும். இதி லும் தனியார் வங்கி இருக் கிறது! தங்கள் குடும்பத்தில் யாருக்கும் தேவையெனில் பயன்படுத்திக் கொள்ள உதவும் வங்கியே தனியார் குடும்ப வங்கி. ஜீவன் ஸ்டெம் செல் வங்கி தன்னுடைய சேமிப்பில் 70 சதத்தை பொதுவங்கிக்கு ஒதுக்கியிருக்கிறது. ஒரு தொப் புள் கொடியைச் சேகரித்து, பரிசோதித்து, வங்கியில் பராம ரிக்க ரூ. 40,000 வரை செலவா கும் என்கிறார் சீனிவாசன். நன் கொடைகளை வசூலித்தும் குடும்ப வங்கிக்கு ரூ.70,000 கட் டணம் வசூலித்தும் நிதிச்சுமை யைச் சமாளிப்பதென ஜீவன் வங்கி முடிவு செய்திருக்கிற தாம்.
தொப்புள் கொடி ஸ்டெம் செல்களைப் பயன்படுத்திக் குணப்படுத்தக் கூடிய நோய்கள் அதிகரித்து வருவதால், இந்த வங்கியைப் பயன்படுத்த வேண் டிய தேவையும் அதிகரித்து வரு கிறது. குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை அறுத்து அதை வீணே குப்பைத் தொட்டி யில் போடும் வழக்கமே இது வரை இருந்து வருகிறது. அதை வங்கியில் சேர்த்தால் பிறருக்குப் பயன்படும் என்பதோடு, ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கும் பயன்படும். இதுவும் ஒரு வகை கண்தானம், உடல் தானம் போன்றதுதான்.
நவீன மருத்துவம் நமது பாரம்பரியமான பழக்க வழக் கங்களையும், சிந்தனைகளையும் எவ்வளவு வேகமாக மாற்றி வருகிறது !
நன்றி: -பேராசிரியர் கே. ராஜு
No comments:
Post a Comment