Wednesday, December 17, 2008

நெருப்பு

நெருப்பும் புகையும்

ஆதிகாலத்தில் திடீர் திடீரெனத் தீப்பிடித்து எரிந்த காடுகளைக் கண்டு மனிதன் பயந்தான். நெருப்பைக் கும்பி டும் பழக்கமும் இந்த பயத்திலிருந்து தோன்றியதுதான். காலப்போக்கில், நெருப்பைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்த மனிதர்கள் கற்றுக் கொண்டனர்.

ஆனாலும் 17ஆம் நூற்றாண்டு வரை ஒரு பொருள் எரி வதற்கான காரணம் தெரியாமல்தான் இருந்தது. 1774ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஆன்டோயின் லவாய்சியர் ஒரு பொருள் எரிவதற்கு ஆக்ஸிஜன் அவசி யம் என்று கண்டுபிடித்தார். போதுமான அளவில் ஆக்ஸி ஜன் இருந்தால்தான் எரிதல் நடைபெறுமென்றும் கார்பன், ஹைட்ரஜன் போன்ற கனிமங்களைக் கொண்டதாக இருந் தால்தான் ஒரு பொருள் எரியுமென்றும் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது. எரியும் பொருள் கூட ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடையும்போதுதான் எரியத் தொடங்கு கிறது. மண்ணெண்ணெய், பெட்ரோல், தாள், இலைச்சருகு போன்ற சில பொருட்கள் எளிதில் தீப்பற்றக் கூடியவை. நிலக்கரி, விறகு போன்ற பொருட்கள் நன்கு சூடுபடுத்திய பிறகே எரியத் தொடங்குகின்றன. பாஸ்ஃபரஸ் சாதாரண வெப்பநிலையிலேயே தீப்பற்றக் கூடியது என்பதால் அதைத் தண்ணீருக்குள் வைத்தால்தான் எரியாமல் பாது காக்க முடிகிறது.

ஒரு பொருள் ஆக்ஸிஜனுடன் சேருவது ஆக்ஸிஜன் மயமாதல் (டிஒனையவiடிn) எனப்படுகிறது. சில பொருட்கள் ஆக் ஸிஜனுடன் சேருவது மிக மெதுவாக நடக்கும். நெருப்பி லிருந்து கிடைப்பது மாதிரி எவ்வித ஒளியும் கிடைக்காது. வெப்பமும் மிக மிகக் குறைவாகவே வெளிப்படும். இரும்பு துடிப்பிடிப்பதை இந்த வகை ஆக்ஸிஜன் மயமாதலுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆக்கமும் நானே, அழிவும் நானே

இன்று நெருப்பு பல வகைகளிலும் நமக்குப் பயன்பட்டு வருகிறது. அன்றாடம் சமையலுக்கு நாம் நெருப்பையே சார்ந்திருக்கிறோம். நெருப்பின் உதவியோடு நீரைக் கொதிக்க வைத்துக் கிடைக்கும் நீராவியின் சக்தியை மனிதன் தெரிந்து கொண்டபோது தொழிற்புரட்சி ஏற்பட் டது. நீராவியின் சக்தி மின்சார உற்பத்திக்கும் வேறு பல இயந்திரங்களை இயக்குவதற்கும் பயன்பட்டு வருகிறது. பூமியிலிருந்து கிடைக்கும் கச்சாப் பொருட்களிலிருந்து உலோகங்களைப் பிரித்து எடுக்க ... கார், படகு, கப்பல், விமானம் போன்ற ஊர்திகளை இயக்க... என வெப்பசக்தி யின் பயன்கள் எண்ணிலடங்கா. அதே சமயம், நெருப்பை அளவோடு கட்டுப்படுத்தத் தவறினால் அது அழிவு சக்தியாகவும் மாறிவிடுகிறது.

புகை தோன்றுவதேன்?

ஒரு எரிபொருள் முழுமையாக எரிய போதுமான அளவில் ஆக்ஸிஜன் தேவை எனப் பார்த்தோம். அப் படிப் போதுமான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பொருட்கள் அரைகுறையாக எரியும்போது புகை தோன் றுகிறது. கார்பன் துகள்கள், கரியமிலவாயு, நீராவி ஆகியவற் றால் ஆனதே புகை. புகை கருப்பாக இருந்தால் அதில் கார்பன் துகள்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று பொருள்.

காற்றை அசுத்தப்படுத்துவதில் புகைக்கே முதலிடம். குறிப்பாக நகரங்களில் வெளியிடப்படும் புகை நமது இதயத்திற்கும் நுரையீரலுக்கும் கெடுதலை ஏற்படுத்தி உடல்நலப் பாதிப்பை உருவாக்குகிறது. காற்று வீசி புகை யை அப்புறப்படுத்தாவிட்டால் பாதிப்பு இன்னும் கூடுத லாக இருக்கும். புகையினால் சில நன்மைகளும் உண்டு. குளிர்ப்பிரதேசங்களில் பழத் தோட்டங்களைக் குளிரிலிருந்து புகை பாதுகாக்கிறது. சிறு துகள்களின் மீது நீர்த்திவலைகள் (றயவநச எயயீடிரச) படிந்து குளிர்வதானாலேயே மழை உண்டாகிறது.

சூரியன் உதிப்பதற்காக தாமரை காத்திருக்கிறதா?

தாமரை மலர்வதற்கு மட்டுமல்ல, அனைத்துவகை தாவரங்கள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூரிய ஒளி அவசி யம். பூமியில் உயிரினம் தோன்றி வளர்வதற்கும் சூரிய ஒளியே ஆதாரமாக இருந்து வருகிறது. மற்றபடி, சூரியன் உதிப்பதற்காக தாமரை காத்திருக்கிறது என்று சொல்வது விஞ்ஞான உண்மையைக் கவித்துவமாகச் சொல்வதுதான்.

No comments: