Sunday, December 28, 2008

கடல் வளம் காப்போம்!

மாலேகாவ் குண்டு வெடிப்பில் ஒரு இந்து மத சன்னியாசினிக்கும், அவர் சார்ந்த அமைப்புக் கும் தொடர்பு இருப்பது சமீபத்தில் அம்பலமா னது.அந்த உண்மையை வெளிக் கொணர்வதில் கார்கரே பெரும்பங்கு வகித்தார். பெண் சன்னியா சினியும் ராணுவ அதிகாரியும் கைது செய்யப்பட் டனர். இந்த சன்னியாசினி பா.ஜ.க. மாணவர் பிரி வோடு தொடர்புகொண்டவர் என்பதும் வெளிச் சத்திற்கு வந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில பயங்கர வாத தடுப்புப் படை தலைவர் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் அந்துலே தெரிவித்த சில கருத்துக்கள் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் கடும் அம ளியை ஏற்படுத்தியது. மதவெறி பா.ஜ.க மற்றும் சிவசேனை கட்சியினர் வழக்கம்போல் இப்பிரச் சனையை பூதாகரமாக்கி தாங்கள்தான் உண் மையான தேசபக்தர்கள் என்பது போல் பெரிய நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் கார்கரேவிஷயத்தில் பா.ஜ.க அடித்த பல்டிகள், ஒன்றல்ல; இரண்டல்ல.

முதல்பல்டி, மாலேகாவ் குண்டுவெடிப்பில் இந்துமத வெறியர்களுக்குத் தொடர்பு என்ற செய்தி வெளியானதும் சன்னியாசினிக்கும் பா.ஜ.க. வுக்கும் சம்பந்தமில்லை என அத்வானி பகிரங்கமாக கை கழுவினார்.

இரண்டாவது பல்டி, சிவசேனா மற்றும் உமா பாரதி கட்சியினர் சன்னியாசினிக்கு ஆதரவாக கார்கரேவை எதிர்த்து ஆவேசமாக அறிக்கை விட்டதை தொடர்ந்து பா.ஜ.க. பல்டி அடித்து; தானும் அதைவிட வேகமாக கார்கரேவை கண் டித்தது; அவதூறு பொழிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக மோடி வசைமாரியே பொழிந்தார்.

மூன்றாவது பல்டி, கார்கரேவை பொறுப்பி லிருந்து நீக்கவேண்டும் என்று பா.ஜ.க. வெறிப் பிரச்சாரத்தில் இறங்கியது. அந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் அத்வானியை அழைத்து உண் மைகளை விளக்கினார். ஆயினும் அத்வானி, கார்கரேவை நீக்க கோரிக்கை விடுத்தார்.

நான்காவது பல்டி, மும்பை குண்டு வெடிப் பில் கார்கரே முதல்பலியானார். அந்த சம்பவம் நடந்த உடனேயே. அங்கு சென்ற மோடி கார்க ரேயைப் புகழ்ந்து அவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை குஜராத் அரசு சார்பில் நிவாரண உதவியாக அறிவித்தார். சுயமரியாதையும் தேச பக்தியும் மனஉறுதியும் கொண்ட கார்கரே குடும்பம் மோடியின் நிதியை ஏற்க மறுத்தது.

ஐந்தாவது பல்டி, முகமூடி கழன்று விழுந்த பா.ஜ.க. மக்களின் மனத்தில் இருக்கிற சந்தே கங்களை அந்துலே எதிரொலித்தபோது அதை பிடித்துக் கொண்டு கார்கரே வை இழிவு படுத்து வதாக கூச்சல்போட்டது. பதிலடி கொடுக்க வேண்டிய காங்கிரஸ் கட்சி ‘மென்மையான இந்துத்துவா’ என்கிற தன்னுடைய வழக்கமான நழுவல் தந்திரத்தில் மூழ்கியது. பா.ஜ.க. வெறிக் கூச்சல் தொடர்ந்தது.

ஆறாவது பல்டி, இறுதியாக இப்போது மத் திய அரசு கார்கரே தொடர்பான எல்லா சந்தேகங் களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

மதவெறி, தீவிரவாதம் இவற்றை பாரபட்சமில் லாமல் பார்க்கிற மனிதநேயம் உள்ள ஒவ்வொரு மனிதரும் பா.ஜ.க. அந்த கோடிக்கும் இந்த கோடிக்கும் மாறிமாறி பல்டி அடிப்பதன் பின் னால் உள்ள இந்துத்துவ மத வெறியை நன்றா கவே உணர்கின்றனர், எதிர்க்கின்றனர். இவர்க ளின் இந்த நாடகத்தை நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலும் நிராகரித்துவிட்டது. நாளை நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் சந்தர்ப்ப வாதத்தை மக்கள் நிச்சயம் முறியடிப்பர்.

----ஊட்டச் சத்தில்லாத உணவு

நம் உடலுக்கு வேண்டிய மாவுச் சத்தை அரிசி, கோதுமை போன்ற தானியங்களிலிருந்து பெறுகிறோம். மாவுச் சத்தை ஆற்றலாக மாற்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் தேவை. இந்த வைட்டமின்களும் மினரல்களும் அரிசி, கோதுமை தானியங்களில் இயற்கையிலேயே இருக்கின்றன. ஆனால் நாம் செய்வது என்னவென்றால் இந்த தானியங்களிலிருந்து உமியை சுத்தமாக நீக்கி, பாலிஷ் செய்து, வைட்டமின்களையும் மினரல்களையும் முடிந்தவரை காலி செய்துவிட்டோமா என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே உட்கொள்கிறோம். இதன் காரணமாக உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகள் கிடைப்பதில்லை. இது கணையத்தின் இன்சுலின் சுரக்கும் தன்மையைப் பாதித்து ரத்தத்தில் சர்க்கரை தேங்குவதற்குக் காரணமாகி விடுகிறது. தென்னிந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் இருப்பதற்குக் காரணம் இதுதான். வட இந்தியாவில் உமி நீக்காமல் கோதுமை மாவைப் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் அங்கு சர்க்கரை நோய் தென்னிந்தியாவைவிடக் குறைவு.

உணவு மட்டுமின்றி, பிஸ்கெட், சாக்லெட், பிற நொறுக்குத் தீனிகள், தோல் நீக்கிய உருளைக் கிழங்கு, பழரசங்கள், மைதா மாவு, சர்க்கரை, மது பானம் போன்றவை அனைத்துமே சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருள் வகையைச் சேர்ந்தவைதான்.

No comments: