Tuesday, December 9, 2008

எதையும் செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியம்

எதையும் செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியம்


உலகில் இன்று மனிதகுலம் சந்திக் கின்ற பிரச்சனைகள் ஏராளம். வறுமை, வேலையின்மை, புவி வெப்பமடைதல், சாதி, மதவெறி மோதல்கள், பயங்கரவா தம்... எனப் பட்டியல் மிக நீளமானது. இவையெல்லாம் மனிதகுலத்தை அச்சு றுத்தும் அபாயங்கள் என்றபோதிலும், இந்த ஈனக்குட்டிகளை ஈன்றெடுத்து பேணிப் பாதுகாத்து வளர்க்கின்ற பேரபாயமான தாய் ஏகாதிபத்தியமே என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் அமெ ரிக்காவில் இருக்கின்றது. பெருமுதலாளி களால் தீனிபோட்டு வளர்க்கப்பட்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்டோ பஸ் கரங்கள், இன்றைக்கு ஒவ்வொரு ஏழைநாட்டின், ஒவ்வொரு வளரும் நாட் டின் குரல்வளையைப் பிடித்துக் கொண் டிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நலன்களை வளர்த்துக் கொள்ள எதையும் செய்யும். வளரும் நாடுகள் தங்கள் சொந்த தொழில்துறையை வளப்படுத்த அல்லது பொருளாதாரக் கட்டமைப்பை வலுப் படுத்த ஏதேனும் முயற்சிகள் செய்யுமா யின் அந்த முயற்சிகள் அமெரிக்க ஏகாதி பத்தியக் கழுகின் கூர்மையான விரல் நகங்களால் சிதைக்கப்படும்.

வளரும் நாடுகள் ஒவ்வொன்றிலும் ஏகாதிபத்தியம் என்ற கழுகு தனது மூக் கை நுழைக்கும். உள்நாட்டுக் கலவரங் களை ஏற்படுத்தும். பயங்கரவாதிகளை உருவாக்கி ஊட்டி வளர்க்கும். அதற்கு பிறகு உலகமக்களை ஏமாற்றுவதற்கு ஒரு நாட கம் நடத்தும். அதாவது பயங்கரவாதத்தை ஒழிக்கப் பிறந்த “உலக போலீஸ்காரன்” நான்தான் என தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்டு யுத்தம் நடத்தும். ஏனென் றால், ஏகாதிபத்தியத்திற்கு தேவை ஆயுத விற்பனை. அது யுத்தங்கள் நடந்தால் தானே சாத்தியம். அவ்வாறு நடக்கின்ற யுத்தங்களின் மூலம் நாடுகளின் வளங் கள் மீதும், செல்வாதாரங்கள் மீதும் மேலா திக்கம் செலுத்தும். பொம்மை அரசுகளை நிறுவி தான் “ஜனநாயகவாதி” என்று வேஷமிடும். தான் சேதப்படுத்தியதைப் புனரமைக்க தனது நாட்டு முதலாளி களின் நிறுவனங்களுக்கு வர்த்தக ஒப் பந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்து எண்ணெய் வளங்களை தடையின்றி கடத்திச் செல்லும். குவெய்த்திலும், இராக்கிலும் அதுதானே நடந்தது.

ஏகாதிபத்தியமே பேரழிவு ஆயுதம்

அமெரிக்கா, ஈராக்கில் சதாம் ஹுசைன், “பேரழிவு ஆயுதங்கள்” (றுநயயீடிளே டிக ஆயளள னுநளவசரஉவiடிn) குவித்து வைத்திருப்ப தாகவும், அதன் மூலம் உலகிற்கு ஆபத்து ஏற்படப்போவதாகவும், குற்றம்சாட்டி போர் தொடுத்தது. அந்த நாட்டின் பெண் கள், குழந்தைகள் அனைவரையும் துவம் சம் செய்தது. பதுங்கு குழியில் இருந்த சதாம் ஹுசைனை பிடித்து இழுத்து வந் தது. வாயைத் திறக்கச் சொல்லி உள்ளே டார்ச் அடித்து பேரழிவு ஆயுதமேதும் இருக்கின்றதா எனத் தேடிப்பார்த்தது. நீதி விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தி சதாமை தூக்கிலிட்டுக் கொன்றது. கடைசிவரை இராக்கில் பேரழிவு ஆயுதம் எதையும் அமெரிக்காவால் கண்டுபிடிக்க முடியவில்லை. இராணுவ பலாத்கார முயற்சியில் அம்பலமான புஷ், தனது உள வுப்பிரிவு தவறான தகவல்களைக் கொடுத்துவிட்டது என்று தப்பித்துக் கொண்டார். ஆப்கானிஸ்தானிலும், இராக் கிலும் அமெரிக்கா கொன்று குவித்த மக்களை கணக்கெடுக்க முடியாது.

அமெரிக்க நிதி நெருக்கடி

இன்று அமெரிக்காவில் நிதிநெருக்கடி முற்றியுள்ளதாக செய்திகள் வருகின்றன. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த லேமன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், மோர்கன் ஸ்டான்லி போன்ற வங்கிகள் திவாலாகிவிட்டதாகச் சொல்கின்றனர். பொருளாதார நெருக்கடி என்பதே முதலாளித்துவக் கொள்கை களினால் ஏற்படுவதுதான். உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்று கெடும திக் கொள்கைகளை தங்குதடையின்றி அமுல்படுத்துவதன் விளைவுதான் பொருளாதார நெருக்கடி.

இந்த நிதிநெருக்கடி சீனாவுக்கு ஏன் ஏற்படவில்லை? உள்நாட்டிலும், உலக அளவிலும் மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில், சீனா தனது நிதிக் கண் காணிப்பை ஒழுங்குபடுத்தி, பொருத்த மான முறையில் சோசலிசக் கொள்கை களை அமுல்படுத்துவதால் அங்கு பொரு ளாதார வளர்ச்சி மகத்தான முறையில் வலுவடைந்துள்ளது. ஆனால் அமெரிக்க பாணி கொள்கைகளை அமுல்படுத்தும் நாடுகள் அனைத்திலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சே-குவாராவின் தீர்க்க தரிசனம்

தனது நிதி மூலதனம் பெருக வேண் டும் என்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தி யம் எதையும் செய்யும். தனது நாட்டில் சேமிக்கப்பட்டுள்ள பிறநாட்டு சொத்துக் களைக் கூட கபளீகரம் செய்யத் தயங் காது. இதற்கு கியூபாவில் நடந்த ஒரு நிகழ்வு சரியான உதாரணமாக இருக்கும்.

கியூபாவில் புரட்சி வெற்றிபெற்று ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் அரசு அமைந்த பின்னர், எர்னஸ்டோ சே குவாரா கியூப தேசிய வங்கியின் தலை மைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பணி ஏற்றுக்கொண்டவுடன் சே தனது உதவியாளர்களிடம் கேட்ட முதல் கேள்வி “கியூபாவின் தங்கம் மற்றும் டாலர் சேமிப்புகள் எங்கே வைக்கப்பட்டுள் ளன?” என்ற கேள்விதான். “அவை அமெ ரிக்காவின் நிதிச்சேமிப்பிடமான போர்ட் நாக்ஸ் என்ற இடத்தில் உள்ளன” என்று உதவியாளர்கள் தெரிவித்தனர். சே குவாரா உடனடியாக தங்க சேமிப்பையும், டாலர்களையும் விற்று, வேறு நாணயமாக மாற்றி, அவற்றை கனடா மற்றும் சுவிஸ் நாட்டு வங்கிகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டார். அமெரிக்கா பின்னர் தனது நாட்டில் உள்ள கியூபாவின் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தது.

கியூப சேமிப்புகள் அமெரிக்காவில் இருந்திருந்தால் கியூபா பேராபத்தில் சிக்கி திவாலாகியிருக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் புரிந்து கொண்ட சே குவாராவின் தீர்க்க தரிசன நடவடிக் கையால் கியூப சேமிப்புகள் தப்பின. (ஆதாரம் : “வெற்றி நமதே. சே குவாரா படைப்புகளும், உரைகளும்” ஆசிரியர் : ஜான் கேரஸ்)

நிதிநிறுவனங்களின் கடமை என்ன?

சே குவாராவிற்கு பொருளாதாரம் குறித்தும், நிதிநிறுவனங்களை நடத்துவது குறித்தும், ஆழ்ந்த அறிவு இருந்தது. நாட் டின் அனைத்து அமைப்புகளும் சமுதா யக் குறிக்கோள் நோக்கி வேலை செய்ய வேண்டும் என்பதை சே புரிந்துகொண்டு வலியுறுத்தினார். தேசிய வங்கி கூட வெறும் நிதி வளர்ச்சிக்கான ஒரு கருவி யாக மட்டும் இருக்கக்கூடாது. ஒரு புரட் சிகர நிறுவனம் என்ற முறையில் அது சமுதாயத் தேவைகளுக்காக உழைக்க வேண்டும் என்றார் சே. ஆனால் அமெ ரிக்க பாணி நிதி நிறுவனங்கள் முதலாளி களின் மூலதனத்தை பெருக்குவதற்கு மட்டுமே உழைக்குமே தவிர, சமுதாயத் தேவைகளைப் பற்றி கவலைப்படாது, கணக்கிலும் எடுத்துக் கொள்ளாது. இதை சே புரிந்து கொண்டதால் கியூபா தப்பி யது. அதேபோல மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், மாண்டேக் சிங் அலுவாலி யாவும் புரிந்துகொண்டால்தான் இந்தியா தப்பிப் பிழைக்கும்.

அதே போல, சே ஒரு பொருளின் ‘மதிப்பு’ என்பது குறித்து அசைக்க முடியாத தனிக்கருத்து கொண்டிருந்தது. ‘மதிப்பு’ என்பது ஒரு பொருளின் சந்தை மதிப்பு அல்ல. அது சமுதாய, ஒழுக்க மதிப் பைப் பொருத்து விவரிக்கப்பட வேண்டும் என்றார். ஒரு நிதி நிறுவனத்தின் மதிப்பு என்பது அதனுடைய நிதி வெற்றியைப் பொறுத்ததாக இல்லாமல் அதனுடைய சமுதாயக் கடமையைப் பொறுத்து அமைய வேண்டும் என்று சே குவாரா கூறினார். தேசிய வங்கி, வர்த்தக நிறுவனங்களை அவைவகளின் சமூக மதிப்பை, சமுதா யத்திற்கு செலுத்தியுள்ள பங்களிப்பை வைத்தே மதிப்பிட வேண்டும். சே, கியூப தேசிய வங்கியை அப்படித்தான் நடத்தினார்.

இந்தியாவை ஆளுகின்ற “பொருளா தார மேதைகள்” சென்செக்ஸ் புள்ளிக ளின் வளர்ச்சியை மதிப்பிட்டு நிதி நிறு வனங்களை நடத்தினார்கள். அவை இந் திய மக்களுக்கு, உழைக்கும் வர்க்கத் திற்கு ஆற்றியுள்ள பங்களிப்பை மதிப்பிட வில்லை. பங்குச்சந்தைப் புள்ளிகள் 20,000ஐ தாண்டிய போது வளர்ச்சி என்று புளகாங்கிதம் அடைந்து மக்களை ஏமாற் றினார்கள். இன்று பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியடைந்து 10,000 புள்ளிகளுக்கு கீழே சென்று கொண்டிருக்கிறது. பெற்றுள் ளது ‘வளர்ச்சி’ அல்ல ‘வீக்கம்’ என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

சே குவாராவைப் போல இந்தியாவை ஆள்வோர் ஏகாதிபத்தியத்தைப் புரிந்து கொண்டால் இந்தியாவை அழிவி லிருந்து காப்பாற்ற முடியும்.

No comments: