Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Tuesday, July 27, 2010

செவி பாதுகாப்பிற்கு ஒரு புதிய கருவி

மனிதருடைய செவி வெளிச்செவி, நடுச்செவி, உட்செவி என மூன்று பாகங்களைக் கொண்டிருக்கிறது. வெளிச்செவி கண்ணால் காணக்கூடியது. வெளிச்செவியில் காணப்படும் துளை நடுச்செவிவரையில் நீண்டிருக்கும். நடுச்செவி ஒருபுறம் அடைபட்டுள்ள காற்று நிரம்பிய அறையாகும். நடுச்செவியையும், வெளிச்செவியையும் செவிப்பறை பிரிக்கிறது. வெளிச்செவிக்கும் நடுச்செவிக்கும் இடையே Eustachian எனும் குழாய் காற்றோட்டம் ஏற்படுத்துகிறது. புறச்செவியின் உள்ளே இருக்கும் காற்றழுத்தைவிட நடுச்செவியில் காற்றழுத்தம் அதிகரிக்கவோ, குறைவுபடவோ செய்யும்போது காதுகேளாமை, காதுவலி, சீழ் உருவாதல் ஆகிய நோய்கள் தோன்றுகின்றன. உட்காதில் காணப்படும் நுண்ணிய ஒலிஉணர் நரம்புத்தொகுதிகள் அதிர்வுகளை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. ஒலிஅதிர்வுகளை மூளை ஒலியாக உணர்ந்து கொள்ளும்.

நடுக்காதில் நீண்டகால நோய்த்தொற்று ஏற்படும்போது சீழ் உருவாகி விடுகிறது. மழைக்காலங்களில் நோய்க்கிருமிகள் எளிதில் பல்கிப் பெருகுகின்றன. இதனால் 75 சதவீத குழந்தைகள் காது நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். எதிர் உயிரிகளைக் கொண்ட மருந்துகளால் இந்த சீழ்வடியும் நோய் குணமாக்கப்பட முடியாமல் போகும்போது அறுவை சிகிச்சை நிபுணரால் மயக்கமருந்தின் உதவியால் காற்றோட்டக்குழாய்கள் நடுக்காதுக்குள் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ஏழு லட்சம் குழந்தைகள் இந்தவகையான நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு செருகி வைக்கப்படும் குழாய்கள் நான்கு முதல் ஏழு மாதங்களுக்குள் கழன்று விழுந்துவிடுவதால் சீழ்வடியும் நோய் மீண்டும் உருவாகிவிடுகிறது.

காதில் வலி ஏற்படுதல், சீழ்வடிதல் போன்ற நோய்கள் சாதாரணமாக எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடியவை. இந்நோய்களை விரைவாக குணப்படுத்த துருப்பிடிக்காத எஃகினாலான ஒரு சாதனத்தை காதுநோய் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு அளவில் சிறியது; உள்ளீடற்ற ஒரு உலோகத்தண்டினால் ஆனது. இதன் ஒரு முனை அகலமாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. உலோகத்தண்டின் ஒரு முனையை அறுவை சிகிச்சை நிபுணர் காதுக்குள் செலுத்தி நடுக்காதில் தேங்கியுள்ள சீழ்போன்ற திரவங்களை உறிஞ்சி எடுத்துவிடுவார்.

வழக்கமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையில் மூன்று சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மூன்று தனித்தனி சாதனங்களை ஒருங்கிணைப்பதும், செயல்பாடு வெற்றிகரமாக இருப்பதும் இந்த புதிய சாதனத்தின் சிறப்புகள் ஆகும்.

ஒரே ஒரு முறை அறுவை சிகிச்சை நிபுணர் நடுச்செவிக்குள் இந்த சாதனத்தை நுழைப்பதால் நோயாளியின் மயக்கநிலை நேரம் குறைகிறது. செவிக்குள் அதிக எண்ணிக்கையிலான கருவிகளை பலமுறை செலுத்தும்போது உட்செவியின் மெல்லிய தோல் சுவர்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. சில சமயங்கள் இந்த சேதத்தின் விளைவாக இரத்தம் கசியவும் வாய்ப்பு உள்ளது. இரத்தக்கசிவை பார்க்கும் வாய்ப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை மேலும் சிக்கலாகிவிடுகிறது.

ஆதாரம்: http://english.farsnews.com/newstext.php?nn=8901070101

தகவல்: மு.குருமூர்த்தி

Wednesday, March 31, 2010

நானோ தொழில் நுட்பத்திற்கு வயது 25

1965-ல் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ரிச்சர்டு பி. ஃபேன்மென் (1918-1988) 50 ஆண்டுகளுக்கு முன் (1959 டிசம்பர் 29 அன்று) பொருட்களை அணுஅணுவாகச் சேர்க்கும் நானோ தொழில்நுட்பத்தைப் பற்றி அறிமுகம் செய்து உரையாற்றினார். பேராசிரியர் நோரியோ தானிகுச்சி 1974-ல் அத் தொழில்நுட்பத்தை நடைமுறைக்குக் கொணர்ந்தார். “என்சைக்ளோபீடியா பிரிட்டானியா போன்ற தகவல் களஞ் சியத்தை ஒரு ஊசி முனையில் எழுதிவிட லாம் ; இரத்த நாளங்களுக்குள் சிறிய மோட்டார்கள் பயணித்து அறுவைச் சிகிச்சை செய்துவிட முடியும்...இது போன்ற அறிவியல் அற்புதங்கள் நானோ தொழில்நுட்பத்தினால் சாத்தியமாகும்” என்று ஃபேன்மென் அன்றே அறிவித் தார். இன்று மிகப் பெரிய அளவுக்கு அவ ரது `ஆரூடங்கள்’ பலிக்கத் தொடங்கி யிருக்கின்றன.

விஞ்ஞான அற்புதங்கள்

நோயைக் கண்டுபிடித்து குணப்படுத் தக் கூடிய சிறிய பொருட்களை இன்று உடலுக்குள் செலுத்த முடியும் ; குறிப் பிட்ட செல்களுக்குள் கூட அவற்றைச் செலுத்த முடியும் ; மூலக்கூறுகளில் தகவல்களைச் சேகரித்து வைக்க முடியும் ; நூலகங்களில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் கையடக்கமான கருவிக ளில் சேமித்து வைக்க முடியும். ஒரு தனிப் பட்ட னுசூஹ இழையின் மின்சாரம் கடத் தும் தன்மை அல்லது வேதியியல் கட்டு களின் (உாநஅiஉயட bடினேள) பலம் ஆகி யவை பற்றி ஆய்வு செய்ய முடியும். பொருட்களைத் துல்லியமாக ஆய்வு செய்யும்போது, பல புதிய நிகழ்வுகளைக் கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக, நீலத்திலிருந்து சிவப்பு வரை உள்ள எல்லா வண்ணங்களையும் வெளியிடக் கூடியதாக தங்கத்தை மாற்ற முடியும் ! இயற்கை விஞ்ஞானங்களை, ஆர்வத்தைத் தூண்டும் அற்புதங்களாக புதிய நிகழ்வு கள் மாற்றிவிட்டன.

நானோ தொழில்நுட்பத்தில் இது வரை 4,00,000 ஆய்வுக் கட்டுரை கள் வெளிவந்தி ருக்கின்றன.

1,00,000 உரிமங் கள் பெறப்பட் டுள்ளன. 2009ம் ஆண்டில் சுமார் 59,000 ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட் டன. இது 2000ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை களைப் போல ஐந்து மடங்கு அதிகம் !

உலகத்திற்கு இந்த தொழில்நுட்பத் தால் என்ன நன்மை என்ற கேள்வி எழலாம். ஒரு பொருளின் அணுக்களை நம் விருப்பப்படி கையாள முடிந்துவிட் டால், எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்த முடியும். தனிப்பட்ட ஒரு செல் லுக்கு மருத்துவ சிகிச்சையளிப்பது அறி வியல் புனைகதை போலத் தோன்றலாம். ஆனால் வாழ்வின் மூலக்கூறு எந்தி ரத்தை பழுது பார்த்து பராமரிப்பதன் மூலம் உடலியல் செயல்பாடுகளைக் கட் டுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இயலும் என்பதை நானோ தொழில்நுட்பம் சாத் தியமாக்கிக் கொண்டு வருகிறது. மூலப் பொருட்களை மிகக் கடினமாக ஆக்க முடியும். மிகவும் லேசானதாகவும் ஆக்க முடியும்.

நானோ தொழில்நுட்பத்தின் ஆற்றல் திறன்

இயற்கையில் தாவரங்கள் கரியமில வாயுவையும் தண்ணீரையும் உட்கொண்டு சூரிய வெப்பத்தைப் பயன்படுத்திச் செய்துவரும் ஒளிச்சேர்க்கை அணு அணுவாகச் செயல்படும் தன்மையுடை யதுதான். நாம் உணவை உட்கொண்டு அது சக்தியாக மாறி, வேலை செய் வதற்கான ஆற்றலைப் பெறுவதில் வீணா கும் ஆற்றல் மிகக் குறைவு. மின்சார மோட்டார்களில் ஏற்படுவது போன்ற சக்திவிரயம் உடற்கூறியலில் அமைந் திருந்தால், உலகின் உணவு உற்பத்தி மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதி யினருக்கு உணவளிக்கக்கூடப் போது மானதாக இருந்திருக்காது. உடற்கூறியல் என்பதே நானோ தொழில்நுட்பம் மிகச் சிறப்பாகச் செயல்படும் ஒரு துறைதான். சூரியனிலிருந்து ஆற்றலைப் பெறுவதில் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத் தும் முறை வந்துவிட்டால், இந்த பூமிக் குத் தேவையான அனைத்து ஆற்றல் களையும் எவ்வித சுற்றுச்சூழல் பிரச் சனையுமின்றி பெறமுடியும் !

Wednesday, February 24, 2010

பசி பட்டினிக்கெதிராகப் போராடியவர்

விவசாயத்திற்கென உள்ள நோபல் பரிசைப் பெற்ற ஒரே வேளாண் விஞ்ஞானி நார்மன் போர்லோ தனது 95-வது வயதில் சென்ற ஆண்டு காலமானார். 1970-ல் அவ ருக்கு இந்த பரிசு சமாதானத்திற் காகவும் சேர்த்து வழங்கப்பட்டது.

தாவரவியல் சம்பந்தமான விஷயங்களில் தணியாத தாகத்துட னும், அறிவியல் கூர்மையுடனும் 1950-களில் அவர் மெக்ஸிகோ வில் பணிபுரிந்து வந்தார். கோது மையின் கலப்பின வகை ஒன்றி னை உருவாக்கி, இரசாயன உரங் களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தினால் அமோக விளைச்சலைப் பெற முடியும் என அவர் நிரூபித்தார். 1956-ல் இந்த வகை கோதுமை மெக்ஸிகோவில் வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தப் பட்டது. இதனால் 1944-ல் கிடைத்த அறுவடையை விட ஆறு மடங்கு அறுவடையை 1963-ல் மெக்ஸிகோ பெறமுடிந்தது.

பசுமைப் புரட்சி

1960-களில் மக்கள் தொகை பெருக்கம், விவசாய உற்பத்தியில் தேக்கம், அடிக்கடி தவறும் பருவ மழை போன்ற காரணங்களால் பெரும் பஞ்சத்தையும் பட்டினியை யும் தெற்காசிய நாடுகள் எதிர் நோக்க வேண்டியிருந்தது. அப் போது இந்திய அரசின் உணவு அமைச்சராக இருந்த சி. சுப்பிர மணியம், கலப்பின கோதுமை விதைகளை இறக்குமதி செய்வ தற்கு நாடாளுமன்றத்தின் ஒப்பு தலைப் பெற்றார். 1974-ல் இந்தியா தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது. பாகிஸ் தானிலும் இப் பரிசோதனை வெற்றிகரமாக நடந் தேறியது. இது `பசுமைப் புரட்சி’ என பலராலும் பாராட்டப்பட்டது. பின்னர் மண்வளம் பாழானதற்கு அதுவே காரணம் என்ற கடுமை யான விமர்சனத்திற்கும் ஆளா னது.

உலகம் விவசாயத்துறையில் வெற்றிபெற அமைதியும் சமாதான மும் நிலவினால்தான் இயலும் என் பது டாக்டர் நார்மன் போர்லோவின் கருத்து. பாரம்பரியமான முறைக ளுக்கு மாற்றாக மரபணு ஆராய்ச்சி களை அவர் பரிந்துரைத்தார். இதன் காரணமாக அவர் கடுமை யான விமர்சனங்களுக்கும் ஆளா னார். 50 ஆண்டுகள் தொடர்ச்சி யாக பசியையும் பட்டினியையும் பார்த்து நொந்துபோன தனக்கு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு உணவளித்திட வேண் டும் என்ற சிந்தனையே மேலோங்கி நின்றது என்று அவர் கூறுவ துண்டு. அதே சமயம் புதிய விவ சாய முறைகளினால் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி எழுந்த கவலைகளும் நியாயமானவைதான் என அவர் ஏற்றுக் கொண்டார்.

உலகம் முழுவதும் உள்ள 100 கோடி மக்கள் இன்று போதிய உணவின்றி வாடுவதாக ஐ.நா. மதிப்பிடுகிறது. இந்தியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், 1975-ல் உட்கொண்ட உணவில் மூன்றில் ஒரு பகுதி குறைவாக உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பசிக்கெதிராக இதுவரை போரா டியவர்களில் டாக்டர் போர்லோ முதன்மையானவர் என்பது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் கருத்து.

இரண்டாவது பசுமைப் புரட்சியும் புதிய சவால்களும்

இன்று, இரண்டாவது பசுமைப் புரட்சியைப் பற்றிய விவாதம் எழுந்திருக்கிறது. ஆனால் அது விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக் கோடு நின்றுவிட முடியாது. மண் வளப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பு, நீர் நிர்வாகம், சரியான விதைகளைத் தேர்ந்தெடுத்தல், நவீன உற்பத்தி முறைகள், இயற் கை வேளாண்மை, விளைபொருட் களைப் பாதுகாத்து நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் தொழில்நுட் பங்கள், உணவு பதப்படுத்தல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக் கியதாக இருக்க வேண்டும்.

விவசாயத்துறையில் புதிய சவால்கள் எழுந்திருக்கின்றன. அவற்றைச் சந்திக்க புதிய வழி முறைகளைக் கண்டறிய வேண்டிய கடமை இன்றைய சமூகத்தின் முன் நிற்கிறது. புதிய பரிசோதனை களை மேற்கொள்வதற்கு முன் அவை மக்களுக்கும் சுற்றுச்சூழ லுக்கும் பெருமளவுக்குப் பாதிப் பின்றி, கூடுதலான நல்விளைவு களைத் தரக்கூடியவையா என்று கண்காணிக்கும் சமூகப் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. புதிய மரபணு விதைகள் பற்றி வர்த்தக நோக்கம் மட்டுமே கொண்ட பன் னாட்டுக் கம்பெனிகள் சொல்வதை நம்பி நாம் ஏற்க முடியாது. அவற் றை நமது நாட்டு விஞ்ஞானி களைக் கொண்டு சுயமாக ஆராய்ச்சி செய்து, அவை மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதவை என் பதை நன்கு உறுதி செய்த பிறகே ஏற்க வேண்டும்.

பசிக்கெதிரான போர் இன்றும் தொடர்கிறது. சர்ச்சைகளும் தொடர்கின்றன. சர்ச்சைகள் புதிய வெளிச்சத்தைத் தரட்டும்.

Sunday, February 14, 2010

ஏறு பூட்டாமல் சோறு சாப்பிடலாம்

பூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டியவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரி ல் 70 சதவீதமும் எரிபொருளில் 20 சதவீதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டிட விவசாயம்தான் ஒரே பதில்.

நிலத்தை உழுது, பாசனம் செய்து, உரமிட்டதால் பூமி நொந்துபோய் மலட்டுத் தன்மைத்தை அடைந்துவிட்டாள். வேண்டிய அளவுக்குக் காடுகளையும் வெட்டி நாசம் செய்து அவற்றை விவசாய நிலங்களாக்கி விட்டோம். அதன் காரணமாக புவியின் சூடும் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் எதையாவது புதிதாகச் செய்தால்தான் இந்தச் சிக்கலிலிருந்து விடுபடமுடியும்.

முப்பது அடுக்குகள் ஒவ்வொன்றிலும் பல வித முறைகளில் பயிர்கள் வளர்க்கப்படும். முனிசிபல் கழிவு நீரே சுத்தம் செய்யப்பட்ட பிறகு பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறப்படும். செயற்கை ஒளி தரும் குழல்விளக்குகள் பயிர்களை வளர்க்கும். குப்பைகள் வெளியேற தனியாக செங்குத்து சாக்கடைகள் இருக்கும். கழிவுகளிலிருந்து வெப்பம் கிடைக்கும். அங்கேயே காய்கறி கடையும் இருக்கும்.

மண் படாத வேர்கள்

முப்பது மாடிக் கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் மண்ணைப் பயன்படுத்தாமல், பயிர்களை வளர்க்கும் உள்ளரங்க பயிரியல் முறைதான் கட்டிட வேளாண்மை.

வில்லியம் எஃப் பெரிக் என்பவர் 1929 இல் மண்ணில்லாமல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, அதில் ஊட்டச்சத்து உப்புகளைக் கரைத்து, செடிகளை வளர்த்துக் காட்டினார். ஹைட்ரோ போனிக்ஸ் என்பது இந்த முறையின் பெயர் (Hydroponics). இரண்டாம் உலகப்போரின் போது 8 மில்லியன் கிலோ காய்கறிகளை பசுபிப் தீவுகளில், நாட்டோ நாடுகளின் சார்பில் நிலமில்லாமல் நேரடியாக நீர்த் தொட்டிகளில் வளர்த்துப் பெறப்பட்டது.

வேர்கள் கெட்டியாக மண்ணைப் பிடித்துக் கொண்டுதான் வளரும் என்று பலகாலம் நாம் நம்பிவந்திருக்கிறோம். உண்மையில் மண்ணிலுள்ள தாதுக்கள்தான் அவற்றிற்குத் தேவை. தண்ணிர்த் தொட்டியில் செடியினால் நிற்க இயலாது என்று கருதினால் வெரிமிகுலைட் என்ற ஜடப்பொருளை, (தக்கைபோல இருக்கும்) துருவி தூளாக்கிப் போட்டு பல ஆண்டுகளுக்கு மண்போலவே திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம். இது பயிரின் வேர்களுக்குத ் தேவையான பிடிமானத்தை மட்டும் வழங்கும்; மற்றபடி இதற்கு வேறு வேலை ஏதும் கிடையாது.

ஏரோபோனிக்ஸ் என்கிற இன்னொரு முறையில் செடிகள் நூலில் கட்டப்பட்டு காற்றில் தொங்கியபடி வளரும். காற்றில் குறைவில்லாத ஈரம் நிரம்பியிருந்தால் போதும். மார்கழிப் பனிபோல அறை முழுவதும் நீர்த் திவளைகளால் நிரப்பி அதில் ஊட்டத் தாதுக்களையும் கரைத்து கலந்துவிட்டால் செடிகள் ஜோராக வளரும்.

யூரோஃபிரெஷ் எனும் காய்கறி நிறுவனம் அரிசோனா பாலைவனத்தில் 318 ஏக்கர் நிலபரப்புக்குச் சமமான விவசாயத்தை அடுக்கு மாடி கட்டிடத்தில் செய்துகொண்டு வருகிறது. தக்காளி, வெள்ளிரிக்காய், மிளகு ஆகியவற்றை ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பயிர்செய்தது.

செங்குத்து வேளாண்மை

செங்குத்து வேளாண்மை கட்டிடங்களின் ஒவ்வொரு தளத்திலும் பயிர்கள் இப்படித்தான் வளர்க்கப்படும். ஒரு முனையில் நாற்றுகள் உருவாக்கப்படும்; கன்வேயர் பெல்ட் நகர்ந்தபடியே இருக்கும், மறுமுனைக்கு வரும்போது அவை கனிந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். தளத்தின் ஒளி அளவு, ஈரப்பதன் ஆகியவை கட்டுப்படுத்தப்படும்.


அடுக்குமாடி கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் பல அடுக்குகளில் வரிசையாக தொட்டிகளை நிறுத்தி அவற்றில் பயிர் செய்வது செங்குத்து வேளாண்மை. செங்குத்து வேளாண்மைக்கு பல ஏக்கர் நிலம் வேண்டியதில்லை. எங்கெல்லாம் காய்கறிகள் வேண்டுமோ அங்காங்கே பயிர் செய்து கொள்ளலாம். கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில், விமான தளத்திற்கு பக்கத்தில், என நகரங்களின் நட்ட நடுவே வேளாண்மை செய்யலாம். காடு, கழனிகள் ஓரிடத்திலும், விற்பனை சந்தைகள் ஓரிடத்திலும் இருந்த காலம் போய்விடும். அறுவடையான அரிசியையும் கரும்பையும் ஊர் ஊராக அனுப்பிக்கொண்டு தேவையில்லாமல் போக்குவரத்து செலவிட வேண்டியதில்லை. விளைபொருள்களை பதனிட்டு பாதுகாக்கவும் தேவையில்லை. அவரவர்களுக்கு வேண்டியவற்றை அவர்களிடத்திலேயே விளைவித்து, பறித்த காய்கறிகளைத் தரலாம்.

மூடிய கட்டிடத்தில் சுத்தமான முறையில் பயிர் செய்வதால் காய்கறிகளில் பூச்சி அண்டாது, மண் மூலமாக பயிர்களில் பரவும் கிருமிகளும் இருக்காது. இதனால் பூச்சிக்கொல்லி மருந்து, நோய்க்கிருமிகள் இல்லாத காய்கறி, தானியங்கள் கிடைக்கும்.

பருவகாலம், மழைபொழிவு, புயல், வெள்ளம் என்ற பிரச்சனைகள் ஏதுமில்லாமல் ஆண்டு முழுவதும் பயிர் செய்து கொண்டேயிருக்கலாம். தேவையான மின்சக்தியை பயிர்களின் காய்ந்த குப்பைக் கூளங்களை எரித்து அனல் சக்தியாக்கிப் பெறலாம். சூரிய ஒளிப் பலகைகளிலிருந்தும் காற்றாடிகளிலிருந்தும் பெறலாம்.

நகரத்துக்குள்ளேயே அடுக்குமாடிகளில் பயிரிடுவதால், உள்ளூர் இளைஞர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மண்ணில் இறங்கி வேலை செய்வதை கேவலமாக நினைத்து பட்டனத்துக்கு வரும் பட்டிக்காட்டு இளைஞர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். படிப்படியாக மண்ணுக்கு ஓய்வு கிடைக்கும். மீண்டும் அவை பழைய இயல்புநிலையை அடையும். விரும்பினால் அவற்றை அப்படியே விட்டுவிடலாம். இதன் மூலம் இழந்த காடுகளைத் திரும்பப் பெறலாம். அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற வங்காரி மாத்தய் (2004) சொன்னாது போல் நிலங்களை சும்மாவிட்டு விட்டால் போதும் குளோபல் வாமிங் தானாக சரியாகிவிடும். சோற்றுக்கு என்ன செய்வது என்றால், அதற்குத்தான் செங்குத்து வேளாண்மை இருக்கிறதே

சமன்பாடுகள்

கடந்த 10 ஆண்டுகளாக, யூரோ ஃப்ரெஷ் என்ற கம்பெனி (அரிசோனா, வில்காக்ஸ்) 318 ஏக்கர் பரப்பில் தக்காளி மற்றும் மிளகாய்களை உள் அரங்கத்திலேயே நீர்த்தொட்டிகளில் பெருமளவில் வளர்த்துவருகிறது. இது ஹைட்ரோபோனிக்ஸ் வேளாண்மையின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு.

முப்பது அடுக்கு மாடியில் செய்யப்படும் மொத்த விளைச்சலானது, 150 ஏக்கர் நிலப்பரப்பில் செய்யப்படும் வேளாண்மைக்குச் சமம். குட்டை ரக பயிர்களாக இருந்தால், ஒரே தளத்தில் மூன்று, நான்கு அடுக்குளாக அவற்றைப் பயிர் செய்து, 2400 ஏக்கர் நிலத்திற்குச் சமமான விளைச்சலைப் பெறலாம். கிராமப் புரங்களில் நிலங்களை விட்டுவிட்டு புறநகர் பகுதியிலேயே கட்டிடங்கள் கட்டி அவற்றில் அதற்குச் சமமான விளைச்சலை பெறமுடியும். பள்ளிக்கூடங்கள், பெரிய ஆஸ்பத்திரிகளின் மேல்தளங்கள் போன்றவற்றில்கூட கூண்டு கட்டி அவற்றில் அவசியமான அளவுக்குக் காய்கறி பயிர் செய்யலாம். நான்கைந்து வாரங்களில் கீரை கிடைத்துவிடும்; கம்பு, சோளம் போன்ற தானியங்களின் 4 மாதங்களில் கிடைக்கும். முயன்றால் எல்லா பயிர்களையும் கட்டிடத்திற்குள்ளேயே வளர்த்துக் கொள்ளலாம்.

முப்பது அடுக்குகள் ஒவ்வொன்றிலும் பல வித முறைகளில் பயிர்கள் வளர்க்கப்படும். முனிசிபல் கழிவு நீரே சுத்தம் செய்யப்பட்ட பிறகு பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறப்படும். செயற்கை ஒளி தரும் குழல்விளக்குகள் பயிர்களை வளர்க்கும். குப்பைகள் வெளியேற தனியாக செங்குத்து சாக்கடைகள் இருக்கும். கழிவுகளிலிருந்து வெப்பம் கிடைக்கும். அங்கேயே காய்கறி கடையும் இருக்கும்.

செங்குத்து வேளாண்மை கட்டிடங்களின் ஒவ்வொரு தளத்திலும் பயிர்கள் இப்படித்தான் வளர்க்கப்படும். ஒரு முனையில் நாற்றுகள் உருவாக்கப்படும்; கன்வேயர் பெல்ட் நகர்ந்தபடியே இருக்கும், மறுமுனைக்கு வரும்போது அவை கனிந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். தளத்தின் ஒளி அளவு, ஈரப்பதன் ஆகியவை கட்டுப்படுத்தப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக, யூரோ ஃப்ரெஷ் என்ற கம்பெனி (அரிசோனா, வில்காக்ஸ்) 318 ஏக்கர் பரப்பில் தக்காளி மற்றும் மிளகாய்களை உள் அரங்கத்திலேயே நீர்த்தொட்டிகளில் பெருமளவில் வளர்த்துவருகிறது. இது ஹைட்ரோபோனிக்ஸ் வேளாண்மையின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நன்றி: முனைவர் க.மணி

Friday, February 12, 2010

நின்றொளிரும் விந்தை

நின்றொளிரும் வீட்டு உபயோகப்பொருட்கள் இன்று அதிகமாக புழங்கத் தொடங்கியிருக்கின்றன. பொம்மைகள், செல்பேசிகள், கைக்கடிகாரங்கள் என்றெல்லாம் நின்றொளிரும் பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே போய் இப்போது ‘நின்றொளிரும் பைஜாமா’ கூட கிடைக்கிறதாம். இருட்டில் தேடி அணிந்துகொள்ள அடுத்தவரை தொந்தரவு செய்யவேண்டாம் இல்லையா!

‘ஒளிர்தல்’ என்பது இயற்கையாகவே ஒளிவிடும் தன்மை ஆகும். ஒளிரும் ஆற்றல் கதிரவனுக்கும் விண்மீன்களுக்கும் உண்டு என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். ஒரு பைஜாமாவிற்கு இயற்கையாக ஒளிரும் ஆற்றல் இல்லை. அது வேறு ஒரு ஒளிமூலத்தில் இருந்து ஆற்றலைப் பெற்று தேக்கிவைத்துக் கொள்கிறது. அவ்வாறு தேக்கி வைத்துக்கொண்ட ஒளிஆற்றலை சிறிது நேரத்திற்கு வெளிவிடும் தன்மையை நாம் நின்றொளிர்தல் என்கிறோம்.

சில வேதிப்பொருட்கள் நின்றொளிரும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. தாமிரத்தினால் முடுக்கம் பெற்ற துத்தநாக சல்ஃபைடு, வெள்ளியினால் முடுக்கம் பெற்ற துத்தநாக சல்ஃபைடு போன்ற வேதிப்பொருட்கள் நின்றொளிரும் தன்மை உடையவை. நின்றொளிர்தல் சில நேரங்களில் மணிக்கணக்காகக்கூட நிகழக்கூடும். நின்றொளிரும் பொருட்கள் பெரும்பாலும் மென்மையான பசுமை நிற ஒளியை வெளிவிடும். ஒளியின் அடர்த்தியும் மிகக்குறைவாக இருக்கும்.
தொலைக்காட்சிப் பெட்டியின் திரை, கம்ப்யூட்டர் திரை ஆகியவை நின்றொளிரும் வேதிப்பொருட்கள் பூசப்பட்டவை ஆகும். இந்த வகையான சாதனங்களில் ஒரு எலெக்ட்ரான் கற்றை மூலம் நின்றொளிரும் வேதிப்பொருட்களுக்கு ஆற்றல் அளிக்கப்படுகிறது. ஆனால், ஒரு குழல் விளக்கு நின்றொளிர்வதற்குத் தேவையான ஆற்றலை புற ஊதாக்கதிர்கள் அளிக்கின்றன. நின்றொளிரும் வேதிப்பொருட்கள் மூன்று முக்கிய பண்புகளை உள்ளடக்கியவை. முதலாவதாக நின்றொளிரச் செய்வதற்கு தேவைப்படும் ஆற்றல் வகை. இரண்டாவதாக நின்றொளிர்தலில் வெளிப்படும் நிறங்கள். மூன்றாவதாக, ஆற்றலைப் பெற்றவுடன் நின்றொளிரும் நேரம்.

ஒரு பொம்மை இருட்டில் நின்றொளிர வேண்டுமெனில், சாதாரண ஒளியில் இருந்து ஆற்றலை பெற்று நீண்ட நேரம் நின்றொளிரும் வேதிப்பொருள் தேவை. துத்தநாக சல்பைடு, ஸ்ட்ரான்ஷியம் அலுமினேட் ஆகிய வேதிப்பொருட்களுக்கு இத்தகைய ஆற்றல் உள்ளது. நின்றொளிரும் வேதிப்பொருள் பிளாஸ்டிக்குடன் கலந்து உருக்கி வார்த்தெடுக்கப்படுகிறது. சில விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் எந்தவொரு ஒளிமூலத்தின் துணையுமின்றி ஒளிரும் தன்மையுடையதாக இருக்கும். இந்த கைக்கடிகாரங்களில் நின்றொளிரும் பொருளுடன் கதிரியக்கத்தனிமங்கள் சேர்க்கப்படுகின்றன. கதிரியக்கத்தனிமங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றலைப் பெற்று நின்றொளிரும் தனிமங்கள் ஒளியை உமிழ்கின்றன. ஒரு காலத்தில் ரேடியம் என்னும் கதிரியக்கத்தனிமம் இதுபோன்ற கைக்கடிகாரங்களில் பயன்பட்டுவந்தது. இப்போதெல்லாம், ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கையாக உருவாக்கப்பட்ட புரோமிதியம் போன்ற கதிரியக்கத்தனிமம் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

நின்றொளிரும் விந்தை

நின்றொளிரும் வீட்டு உபயோகப்பொருட்கள் இன்று அதிகமாக புழங்கத் தொடங்கியிருக்கின்றன. பொம்மைகள், செல்பேசிகள், கைக்கடிகாரங்கள் என்றெல்லாம் நின்றொளிரும் பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே போய் இப்போது ‘நின்றொளிரும் பைஜாமா’ கூட கிடைக்கிறதாம். இருட்டில் தேடி அணிந்துகொள்ள அடுத்தவரை தொந்தரவு செய்யவேண்டாம் இல்லையா!

‘ஒளிர்தல்’ என்பது இயற்கையாகவே ஒளிவிடும் தன்மை ஆகும். ஒளிரும் ஆற்றல் கதிரவனுக்கும் விண்மீன்களுக்கும் உண்டு என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். ஒரு பைஜாமாவிற்கு இயற்கையாக ஒளிரும் ஆற்றல் இல்லை. அது வேறு ஒரு ஒளிமூலத்தில் இருந்து ஆற்றலைப் பெற்று தேக்கிவைத்துக் கொள்கிறது. அவ்வாறு தேக்கி வைத்துக்கொண்ட ஒளிஆற்றலை சிறிது நேரத்திற்கு வெளிவிடும் தன்மையை நாம் நின்றொளிர்தல் என்கிறோம்.

சில வேதிப்பொருட்கள் நின்றொளிரும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. தாமிரத்தினால் முடுக்கம் பெற்ற துத்தநாக சல்ஃபைடு, வெள்ளியினால் முடுக்கம் பெற்ற துத்தநாக சல்ஃபைடு போன்ற வேதிப்பொருட்கள் நின்றொளிரும் தன்மை உடையவை. நின்றொளிர்தல் சில நேரங்களில் மணிக்கணக்காகக்கூட நிகழக்கூடும். நின்றொளிரும் பொருட்கள் பெரும்பாலும் மென்மையான பசுமை நிற ஒளியை வெளிவிடும். ஒளியின் அடர்த்தியும் மிகக்குறைவாக இருக்கும்.
தொலைக்காட்சிப் பெட்டியின் திரை, கம்ப்யூட்டர் திரை ஆகியவை நின்றொளிரும் வேதிப்பொருட்கள் பூசப்பட்டவை ஆகும். இந்த வகையான சாதனங்களில் ஒரு எலெக்ட்ரான் கற்றை மூலம் நின்றொளிரும் வேதிப்பொருட்களுக்கு ஆற்றல் அளிக்கப்படுகிறது. ஆனால், ஒரு குழல் விளக்கு நின்றொளிர்வதற்குத் தேவையான ஆற்றலை புற ஊதாக்கதிர்கள் அளிக்கின்றன. நின்றொளிரும் வேதிப்பொருட்கள் மூன்று முக்கிய பண்புகளை உள்ளடக்கியவை. முதலாவதாக நின்றொளிரச் செய்வதற்கு தேவைப்படும் ஆற்றல் வகை. இரண்டாவதாக நின்றொளிர்தலில் வெளிப்படும் நிறங்கள். மூன்றாவதாக, ஆற்றலைப் பெற்றவுடன் நின்றொளிரும் நேரம்.

ஒரு பொம்மை இருட்டில் நின்றொளிர வேண்டுமெனில், சாதாரண ஒளியில் இருந்து ஆற்றலை பெற்று நீண்ட நேரம் நின்றொளிரும் வேதிப்பொருள் தேவை. துத்தநாக சல்பைடு, ஸ்ட்ரான்ஷியம் அலுமினேட் ஆகிய வேதிப்பொருட்களுக்கு இத்தகைய ஆற்றல் உள்ளது. நின்றொளிரும் வேதிப்பொருள் பிளாஸ்டிக்குடன் கலந்து உருக்கி வார்த்தெடுக்கப்படுகிறது. சில விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் எந்தவொரு ஒளிமூலத்தின் துணையுமின்றி ஒளிரும் தன்மையுடையதாக இருக்கும். இந்த கைக்கடிகாரங்களில் நின்றொளிரும் பொருளுடன் கதிரியக்கத்தனிமங்கள் சேர்க்கப்படுகின்றன. கதிரியக்கத்தனிமங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றலைப் பெற்று நின்றொளிரும் தனிமங்கள் ஒளியை உமிழ்கின்றன. ஒரு காலத்தில் ரேடியம் என்னும் கதிரியக்கத்தனிமம் இதுபோன்ற கைக்கடிகாரங்களில் பயன்பட்டுவந்தது. இப்போதெல்லாம், ஹைட்ரஜனின் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கையாக உருவாக்கப்பட்ட புரோமிதியம் போன்ற கதிரியக்கத்தனிமம் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

Thursday, August 20, 2009

கடல் நீரைக் குடிநீராக்குதல்

உலகில் கிடைக்கும் மொத்த நீரில் 97.5 சதவீதம் கடல் நீர்தான். மீதி உள்ள 2.5 சதவீதம் நீரிலும் 70 சதவீதம் வட-தென் துருவங்களில் உறை நிலையில் உள்ளது. 30 சத வீதம் மட்டுமே உலகெங்கும் உள்ள மக்களுக்குப் பயன்படும் வகையில் நீர்நிலைகளிலும் நிலத்தடி நீராகவும் உள்ளது. இந்த அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பது நமது உடனடி கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கியமான அம்சம்.

உலகை மிரட்டும் குடிநீர்ப் பற்றாக்குறை

பல்வேறு பகுதிகளில் தொடரும் வறட்சிகள், மக்கள் பெருநகரங் களுக்குக் குடிபெயர்தல், தொழில் வளர்ச்சி ஆகிய காரணங்களால் நீரின் தேவை அதிகரித்து வருகிறது. உலகத் தண்ணீர்த் தேவை ஒவ் வொரு 20 ஆண்டுகளிலும் இரண்டு மடங்காகிக் கொண்டு வருகிறது. மக்கள் தொகை வளரும் வேகத் தைப் போல் இது இரு மடங்கு. 2025-இல் குடிநீர்த் தேவை, கிடைக் கும் அளவைவிட 56 சதவீதம் கூடுத லாக இருக்கும் என மதிப்பிடப்பட்டி ருக்கிறது. குடிநீர்த் தட்டுப்பாடு மக் களை மேலும் மேலும் சிரமத்துக்குள் ளாக்கி வரும் இச்சூழலில் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. குடிநீர்ப் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சியைப் பாதிக் கிறது. வாழ்க்கைத் தரத்தை மோச மாக்குகிறது. எனவே இந்த விலை மதிப்பற்ற இயற்கை வளத்தைப் பெருக்குவதைப் பற்றியும் திறமை யாக நிர்வகிப்பதைப் பற்றியும் நாம் விழிப்புணர்வு பெற வேண்டியிருக்கிறது.

கடல் நீரைக் குடிநீராக்குதல்

கடல் நீரைக் குடிநீராக்குவதென் பது இப்பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய பங்கினை ஆற்ற முடி யும். சென்னை மாநகர மக்களின் குடிநீர்த்தேவையை ஓரளவுக்கு நிறைவேற்ற மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை செயல்படத் தயாராகி விட்டது. இதன் மூலம் மாந கர மக்களுக்கு தினசரி 100 மில் லியன் லிட்டர் நல்ல தண்ணீர் கிடைக்குமென்று தலைமைச் செய லாளர் அறிவித்துள்ளார். இதே போன்ற இன்னோர் ஆலையை நெம்மேலியில் நிறுவ ஏற்பாடு நடந்து வருகிறது.

காய்ச்சி குளிர்வித்தல்

கடல் நீரைக் குடிநீராக்க இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று, காய்ச்சி குளிர்வித்தல்(னளைவடைடயவiடிn). நீரை ஆவியாக்கி பின்னர் குளிர்விப் பதுதான் `காய்ச்சி குளிர்வித்தல்’ எனப்படுகிறது. நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் சூரியவெப்பத்தி னால் ஆவியாகி பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழிவதை காய்ச்சி குளிர்விக்கும் முறைக்கு உதாரண மாகக் கொள்ளலாம். தண்ணீரைச் சூடுபடுத்தும்போது கொதிநிலை வரும்வரை வெப்பநிலை உயர்ந்து கொண்டே வரும். கொதிநிலையை அடைந்தபிறகு நீரை ஆவியாக்கவும் வெப்பம் தேவை. கொதிநிலையில் உள்ள நீரை ஆவியாக்கத் தேவைப் படும் வெப்பம் `உள்ளுறை வெப்பம்’ எனப்படுகிறது. நீரை ஆவியாக்க, உறைநிலையிலிருந்து கொதிநிலை வரை நீரைக் கொதிக்க வைக்கத் தேவைப்படும் வெப்பத்தைப் போல ஐந்து மடங்கு வெப்பம் தேவை. ஆவியாக்கலையும் குளிர்வித்தலை யும் தனித்தனியாகச் செய்தால் செலவு கூடுதலாக ஆகும். எனவே, நீராவியைக் குளிர்விக்கும்போது கிடைக்கும் வெப்பத்தில் ஒரு பகுதி யை, கடல் நீரை ஆவியாக்கத் தேவைப்படும் வெப்பமாகப் பயன் படுத்தி செலவைக் குறைக்கிறார்கள்.

ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்

இரண்டாவது முறை, எதிர்திசை சவ்வூடுபரவல்- `ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ எனப் படுகிறது. அடர்த்தி குறை வான கரைசல் ஒருவழிப் பாதையாகச் செயல்படும் ஒரு சவ்வில் (ளநஅi-யீநசஅநயடெந அநஅசெயநே) உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக அடர்த்தி அதிகமாக உள்ள கரைசலை அடைவதற்கு (சவ்வூடுபரவல்) `ஆஸ்மாசிஸ்’ என்று பெயர். மண்ணிலிருந்து நீரையும் தாதுப் பொருட் களையும் செடிகொடி கள் உள் வாங்கிக் கொள்வது, நம் உட லில் உள்ள இரத்தத்தி லிருந்து ஊட்டச்சத்துக்கள் செல்களுக் குச் செல்வது எல்லாமே ஆஸ் மாசிஸ் முறையில்தான். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறை யில் ஒருவழிப்பாதை சவ்வு சுத்தமான நீரை அனுமதிக் கிறது. ஆனால் அசுத்தமான பொருட்களை சவ்வு அனும திக்காது. சவ்வை நோக்கி நீரைத் தள்ள ஒரு விசை தேவைப்படும். இந்த முறையில் சவ்வின் மறுபுறத்தில் சுத்தமான நீர் கிடைக்கும். சவ்வின் இந்தப் பக்கத்தில் உள்ள அசுத் தமான பொருட் களும் உப்புக் களும் வெளியேற்றப்படும். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறை யில் பாக்டீரியா, வைரஸ்களை அகற்றிவிட இயலும். வேறு உயிரியல் அசுத்தங்களை (biடிடடிபiஉயட உடிவேயஅiயேவேள) புற ஊதாக் கதிர்கள் மூலம் சுத்தப் படுத்திவிடலாம்.

நன்றி: பேராசிரியர் கே. ராஜு

Thursday, August 6, 2009

பளபளக்கும் நிக்கல்-டங்ஸ்டன்

குரோமியப்பூச்சு பூசப்பட்ட பளபளப்பான வாகனபாகங்களும் குளியலறை சாதனங்களும் மனதை மயக்குபவை. உலோகங்களை பளபளப்பாக்குவதற்கு மட்டுமன்றி, அரிமானத்திலிருந்து பாதுகாப்பளிப்பதற்காகவும் குரோமியப்பூச்சு பூசப்படுவது வழக்கம். உலோகங்களுக்கு குரோமியப்பூச்சு கொடுக்கும் வழக்கம் 1940களில் தொடங்கியது. குரோமியப்பூச்சு மலிவானது; உபயோகிப்பவர்களுக்கு தீமை தராதது. ஆனால் குரோமியப்பூச்சு பூசும் தொழில் ஆபத்தானது; தொழிலாளர்களுக்கு தீமை தரக்கூடியது; சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடியது.

Nickel குரோமியப்பூச்சுக்கு மாற்றுப்பொருள் கண்டுபிடிக்கும் முயற்சி நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது. குரோமியப்பூச்சுக்கு மாற்றாக உள்ள பொருள் உறுதித்தன்மையுடையதாகவும், அரிமானத்தை தடுப்பதாகவும், நீண்டகாலம் பளபளப்புத்தன்மையுடையதாகவும் இருத்தல் வேண்டும் என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் நோக்கம். அண்மையில் ஆராய்ச்சியாளர்களின் கனவு நனவாகி உள்ளது. குரோமியப்பூச்சுக்கு மாற்றாக நிக்கல்-டங்ஸ்டன் உலோகக்கலவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கலவை குரோமியப்பூச்சில் உள்ள தீமைகள் இல்லாததாகவும், நீண்ட காலம் பளபளப்புத்தன்மையை பாதுகாப்பதாகவும் உள்ளது.

குரோமியஅயனிகள் நிறைந்த ஒரு தொட்டியில் மின்சாரத்தை செலுத்தி உலோகங்களின் மீது மெல்லிய படலத்தை படியவைப்பதன்மூலம் குரோமியப்பூச்சு செய்யப்படுகிறது. குரோமியத்தின் இணைதிறன் ஆறு என்பதால் குரோமியஅயனிகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தக்கூடியது; மேலும் நச்சுத்தன்மையுடையது. எனவே இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் போதுமான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. குரோமியம் எஃகைக்காட்டிலும் உறுதியானது. குரோமியத்தின் உறுதித்தன்மைக்கு அதனுடைய நானோபடிக வடிவம்தான் காரணம்.

குரோமியப்பூச்சுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள நிக்கல்-டங்ஸ்டன்கலவையை மின்முலாம் பூசுவது எளிதாகவும் சிக்கனமாகவும் உள்ளது. ஒரே சமயத்தில் பல அடுக்குகளாக மின்முலாம் பூசமுடியும் என்பது கூடுதல் சிறப்பு. மின்னியல் துறையில் இணைப்புகள் ஏற்படும் இடங்களில் அரிமானத்தைத் தடுப்பதற்காக தங்கமுலாம் பூசுவதுண்டு. நிக்கல்-டங்ஸ்டன் பூச்சுக்கு மேலாக தங்க முலாம் பூசும்போது தங்கத்தின் உபயோகத்தை குறைக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/05/090520181103.htm

நன்றி : மு.குருமூர்த்தி

Wednesday, August 5, 2009

அணுசக்தி தொழில்நுட்பங்கள்

அண்மையில் இத்தாலியில் நடந்த ஜி-8 உச்சி மாநாடு அணுசக்தி தொடர் பான தொழில்நுட்பங்களை அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத் திடாத எந்த நாட்டிற்கும் தரக்கூடாது என்று தடை விதித்துள்ளது. கையெழுத்திடாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பாகிஸ் தான், இஸ்ரேல், வடகொரியா ஆகியவை அதில் கையெழுத் திடாத மற்ற மூன்று நாடுகள். நமக்கு மேற் படி தொழில் நுட்பங்கள் கிடையாது என்று பணக்கார நாடுகள் கைவிரித்து விட்டன.

அதென்ன அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்கள்?

அணு எரிபொருள் செறிவூட்டல் (நசேiஉாஅநவே) ஒன்று, எரி பொருளை மறு சுழற்சி செய்வது (சநயீசடிஉநளளiபே) மற்றொன்று. இங்கே எரிபொருள் என்பது அணு உலைகளில் பயன்படுத்தப்படும் யுரே னியம், தோரியம், புளூட்டோனியம் போன்ற பொருட்களில் ஒன்றைக் குறிக்கிறது. யுரேனியத்தில் ரு-235, ரு-238 என இருவகை அணுக்கள் உள்ளன. இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் ரு-235 அணு 0.7 ரூ அளவே உள்ளது. மீதி 99ரூ-க்கு மேல் ரு-238 உள்ளது. இதில் ரு-235 மட்டுமே அணுப்பிளவின் காரணமாக சக்தியை வெளிப்படுத்தக் கூடியது. அதனால் இயற்கையில் கிடைக் கும் யுரேனியத்திலிருந்து ரு-238-ஐ பிரித்து அகற்றிக் கொண்டே வந்தால் மீதி இருக்கும் பொருளில் ரு-235இன் சதவிகிதம் கூடிக்கொண்டே வரும் அல் லவா? இந்த நடைமுறைதான் செறி வூட்டல். 2ரூ அல்லது 3ரூ செறிவூட்டி னாலே அது மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் சிவில் அணு உலைக்குப் போதுமானது. அணு ஆயுதம் தயாரிக்க வேண்டுமெனில், 90ரூ-க்கு மேல் செறிவூட்ட வேண்டும். எனவே, ஒரு அணு உலை மின்சாரம் தயாரிக்கப் பயன் படுகிறதா, அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுகிறதா என்பது யுரேனியம் எந்த அளவுக்கு செறிவூட்டப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தது.

மறுசுழற்சி செய்வது

அணு உலைகளில் யுரேனியத்தைப் பயன்படுத்தும்போது அதனுடைய தன் மை மாறுகிறது. ரு-235 என்ற அணு வின் மீது ஒரு நியூட்ரான் மோதும்போது யுரேனியம் அணு இரு துகள்களாகப் பிரி கிறது. அப்படி பிளவுபடும்போது ஏராள மான வெப்பசக்தி வெளிப்படுகிறது. இந்த வெப்பசக்தியைக் கொண்டு நீரைக் கொதிக்க வைத்து நீராவியின் சக்தியைப் பயன்படுத்தி டர்பைன்களைச் சுழலவிட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. யுரே னியப் பிளவின்போது பல மூலகங்களும் கிடைக்கின்றன. அப்படி கிடைக்கும் மூல கங்களில் புளூட்டோனியமும் ஒன்று. அணு உலையில் யுரேனியம் எரிபொரு ளாகப் பயன்படுத்தப்பட்ட பிறகு மீதியிருக் கும் எரிபொருளில் இன்னமும் பயன் படுத்தப்படாத யுரேனியம் (96ரூ), புளூட் டோனியம் (1ரூ), கழிவுப் பொருள் (3ரூ) ஆகி யவை இருக்கும். இந்தக் கலவையி லிருந்து யுரேனியத்தையும் புளூட்டோனி யத்தையும் மீட்டு மறுபடியும் அணுஉலை யில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு மறுசுழற்சி செய்வது என்று பெயர்.

இப்படி மறுசுழற்சி செய்வதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. பயன்படுத்தப் பட்ட எரிபொருளை வீணாக்கி விடாமல் அதிலிருந்து புதிய எரிபொருளை உரு வாக்கி மீண்டும் பயன்படுத்தி மேலும் சக் தியைப் பெறுவது என்பது ஒரு நன்மை. அழிக்கப்பட வேண்டிய கழிவுப் பொருளின் அளவைக் குறைப்பதென்பது இரண் டாவது நன்மை.

நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரி பொருட்களுக்கு இல்லாத ஒரு விசே ஷத்தன்மை அணு உலைகளுக்கு உண்டு. இங்கு கழிவுப்பொருளை அழிப்பது எளி தல்ல. கழிவுப் பொருளும் கதிர்வீச்சினைக் கொடுக்கக்கூடியது என்பதால் ஆபத்தா னது. அதை பொருத்தமான கண்டெயி னர்களில் பூமிக்கடியில் வைத்து நீண்ட காலம் பாதுகாத்து வீரியத்தை இழக்கச் செய்து, பின்னரே அழிக்க முடியும். அத னால் ஒரு நாட்டில் அணு உலையும் யுரே னியமும் மட்டும் இருந்தால் போதாது. செறிவூட்டுவது, மறுசுழற்சி செய்வது, கழிவுப் பொருளை அழிப்பது ஆகியவற் றுக்கான தொழில்நுட்பங்கள் வேண்டும்.

மாற்றுவழிகள் உண்டு

அணுஉலைகளைப் பயன்படுத்து வதில் ஆபத்துகள் அதிகம் என்பதால் பல நாடுகள் அவற்றைத் தவிர்த்து விடுகின் றன. இந்தியாவுக்கு அணுசக்தியை விட் டால் வேறுவழியில்லை என்று நமக்கு நாமே போட்டுக் கொண்ட கைவிலங்கி லிருந்து நாம் விடுபட முடியும். மின்சக்தி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வேறு மாற்று முறைகள் (சூரியன், காற்று, கடல் அலைகள், உயிரியல் எரிபொருட்கள், குப் பைக் கழிவுகள் போன்றவற்றிலிருந்து மின்சாரம்) பற்றிய ஆராய்ச்சிகள் விரி வாக நடைபெறுவதும் ஈரானிலிருந்து எரி வாயு, நேபாளத்திலிருந்து நீர்மின்சாரம் போன்ற மாற்றுவழிகளைப் பரிசீலிப்பதும் அவசியம்.

நன்றி: பேராசிரியர் கே. ராஜு

Saturday, July 11, 2009

வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி

ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு.

Virus Detector ஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்பி உட்பூச்சாக பூசப்பட்டிருக்கும். இப்போது பீதியைக்கிளப்பி வரும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிர் உயிரி கண்டுபிடிக்கப்பட்டவுடன் ஒரு சில நிமிடங்களில் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை இந்தக்கருவியைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம். பயங்கரமான வைரஸ்நோய்கள் வேகமாகப்பரவுவதை தடுப்பதற்காக இதுபோன்ற விரைவான சோதனைக்கருவிகள் அவசியம் இல்லையா?

வைரஸ்கள் இருப்பதைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி, பாக்டீரியா, புரதங்கள் மற்றும் டி என் ஏ மூலக்கூறுகள் இவற்றையும் இந்தக் கருவியைக்கொண்டு கண்டுபிடிக்க இயலும். இக்கருவியை பயன்படுத்துவோருக்கு சிறப்புப்பயிற்சிகள் ஏதும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.

இந்தக்கருவியில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதி ஒரு சின்னஞ்சிறிய ஆய்வகத்தை உள்ளடக்கிய ஒளிஉணரும் ‘சில்லு’ (chip) ஆகும். இரண்டாவது பகுதி எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு (portable detector) ஏற்பியாகும். ‘சில்’லில் உள்ள பல்வேறு துளைகள் வழியாக சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் இரத்தம் அல்லது எச்சில் மாதிரி உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த துளைகளின் உட்புறம் நுண் உயிரிகளுடன் வினைபுரியும் ஏற்பிகள் உட்பூச்சாக பூசப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அதிர்வெண்கொண்ட லேசர் ஒளிக்கற்றையும் இந்த நுண் உயிரிகளுடன் அனுப்பப்படுகிறது. ஏற்பிகளாகிய எதிர் உயிரிகளுடன் வைரஸ்கள் வினைபுரியும்போது லேசர் ஒளிக்கற்றையின் அதிர்வெண் மாறுபடுகிறது. இக்கருவியில் பெறப்படும் அளவீடுகள் மிகநுண்ணியதாக இருப்பதால் குறிப்பிட்ட வைரஸை இனங்காணுவது மிக எளிதான காரியம். மேலும் ஒவ்வொரு வைரஸிற்கும் வெவ்வேறு அளவில் இந்த அதிர்வெண் மாற்றம் இருக்கும்.

நன்றி : மு.குருமூர்த்தி

Friday, March 20, 2009

பயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள்

துடைக்கவேண்டாம்

Biomimetic அடுக்குமாடி கட்டிடங்கள் உப்பு பூத்திருப்பதுபோல் கொத்துக்கொத்தாக நிலத்தில் முளைத்திருக்கின்றன. சுவர்களே தெரியாமல் முழுவதும் கருப்புக் கண்ணாடி சன்னல்கள். இப்பொழுதான் துடைத்து விட்டதுபோல பளிச்சென்று இருக்கின்றன. அத்தனை கண்ணாடிகளையும் மனிதனால் தொங்கு சாரம் கட்டி துடைப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. ஆனால் துடைத்துவிட்ட புண்ணியம் சற்று முன் பெய்த சின்ன மழைக்குச் சாரும்.

மழைக்கு முன் சேரிப் பையனின் அழுக்கு முகம்போல தூசிபடிந்திருந்தது. சோப்பு துணி எதுவுமே இல்லாமல் மனிதக் கரங்கள் படாமல் பெய்த மழையில் நனைந்து அத்தனைக் கண்ணாடிகளும் முகம் துடைத்துக்கொண்டன. இதன் இரகசியத்தை தாமரையிலைகளிடம்தான் கேட்கவேண்டும். தாமரையிலையிலிருந்து இந்தத் தந்திரத்தை விஞ்ஞானம் காப்பி அடித்துக் கொண்டது. இயற்கையை காப்பியடித்து அதைத் தொழில்நுட்பத்தில் புகுத்தும் புதிய கலையை பயோ மிமடிக்ஸ் என்கிறார்கள். நேனோ டெக்னாலஜிக்கு போட்டியாக முளைத்திருக்கும் கல்வியாக இது வளரும் போலிருக்கிறது.

கழுவவேண்டாம்

சப்பானில், ஐந்து நட்சத்திர ஓட்டலில் கழிவறைகளை தினமும் சுத்தம் செய்வதில்லை. குளிக்கும் போது வெளியேறும் தண்ணீர் குளியலறையையும் கழுவிவிடுகிறது. கழிவறையிலும் அதேதான். தரையிலும் கோப்பைகளிலும் அழுக்கே ஒட்டுவதில்லை. கிருமிகளும் வளருவதில்லை. துர்நாற்றமும் உடனுக்குடன் மறைந்துவிடுகிறது. நம்மூர் பொதுக் கழிப்பறைகளை நினைத்துப் பார்க்கும்போது இந்தத் தொழிற்நுட்பம் சப்பானைவிட நம் நாட்டுக்குத்தான் மிகவும் அவசியம் என்பது தெரியும்.

நீக்கவேண்டாம்

குளிர்ச்சியான மலைச்சாலைகளில் கார் ஓடிக்கொண்டிருக்கும்போது ஓட்டுனரின் கண்ணாடிமீது மூச்சுக்காற்றின் ஆவிபடிந்து மங்கலாகிவிடுகிறது. சாலை மசமசவென்று தெளிவில்லாமல் இருக்கிறது. ஓட்டுநர் அடிக்கடி கைத்துண்டால் கண்ணாடியைத் துடைத்து விட்டுக்கொள்கிறார் இது பழையகதை!. இனிவரப்போகும் வாகனக் கண்ணாடிகளில் ஈரமோ நீராவியோ ஒட்டவே ஒட்டாது.

துவைக்கவேண்டாம்

கோப்பையிலிருந்து காப்பி சிதறி சட்டைமுழுவதும் கொட்டிவிடுகிறது. "அச்சோ காப்பிக்கறை போகாதே" என்று பதறுகிறார். அது பயோமிமடிக்ஸ் சட்டை. கழற்றி உதறினால் போதும்; ஒரு சொட்டு காப்பிக்கறைகூட இல்லாமல் சட்டை பழையபடி புத்தம் புதிதாகிவிடுகிறது. "இந்தச் சட்டையைத் துவைத்து 6 மாதம் ஆகிறது, அழுக்காகவே இல்லை" என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.

"பயோமிமெடிக்ஸ்" என்பது பயலாஜி + தொழில் நுட்பக் கலவையால் உருவானது. பயோமிமெட்டிக்ஸ் (Biomimetics) என்றால் "உயிரினங்களிலிருந்து தந்திரங்களைக் கற்றுக்கொள்ளுதல் என்று அர்த்தம்.

தாமரையிலைத் தத்துவம்

வில்லெம் பர்த்லாட் (Willam Barthlott, University of Bonn. Germany) என்பவருக்கு தாமரை மலரையும், அதன் இலைகளையும் பார்க்கும் போதெல்லாம் வியப்பு ஏற்படும். சேற்றிலிருந்து தாமரை வெளிப்பட்டாலும் அதன் மீது துளி அழுக்குகூட இல்லாமல் எந்நேரமும் புத்தம் புதிதாக இருப்பதன் மர்மம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பார். எலெக்ட்ரான் மைக்ரோ நோக்கிக் கருவி மூலம் (Electron Microscope) செடியின் இலைமேற்பரப்பை பார்க்க வேண்டுமானால் முதலில் அதன் மேற்பரப்பை சுத்தமாகக் கழுவவேண்டும். இல்லாவிட்டால் அதிலுள்ள தூசிகளெல்லாம் பெரிய பெரிய பாறாங்கற்கள் போலத் தெரியும். ஆனால் தாமரை இலையை அவர் கழுவவே இல்லை. இருப்பினும் தூசி ஒன்று கூட அதில் காணப்படவில்லை. தெருவில் அத்தனைப் புழுதியிருந்தாலும் எப்படி தாமரை இலை அத்தனை தூய்மையாக இருக்கிறது.

பயிரியல் படிப்பவர்களுக்குத் தெரியும், இலைகளின் மேலே இருக்கும் மெழுகுப்படலம் தண்ணீரை இலைமேல் ஒட்டாமல் உருட்டி விட்டுவிடும் என்று. உண்மையில் தூசி இல்லாமலிருப்பதற்கு மெழுகுப்படலம் மட்டும் காரணமல்ல என்று பார்த்லாட்டுக்கு எலெக்ட்ரான் மைக்ரோ நோக்கி மூலம் பார்த்த பிறகு தெரிந்தது. மெழுகுப்படலம் வார்னிசு பூசியது போலில்லாமல் வரிசையாக குன்றுகள் இரணுவ அணிவகுப்புபோல அங்கே காணப்பட்டது. இந்த அமைப்புதான் தண்ணீரை உருண்டோடி கூடவே தூசிகளையும் அடித்துச் செல்வதற்கும் காரணம் என்பதும் தெரிந்தது.

தண்ணீருக்கும் எண்ணெய்க்கும் பகை என்பது தெரிந்ததே. எண்ணெய்ப் பதார்த்தங்களை நீர்ப்பகைப் பொருள் (Hydrophobic) என்பார்கள். சக்கரையும் உப்பும் நீரில் கரையக்கூடியன எனவே அவற்றை நீர் நட்புப் பொருள்கள் (Hydrophilic) என்பார்கள். நீர் நட்புடைய பரப்பின் மீது ஒரு சொட்டு நீர்த் திவளையை விட்டால் அது விரிந்த தட்டையாக கிடக்கும். திவளையின் விளிம்புக்கும் அது நிற்கும் பரப்புக்கும் உள்ள கோணம் 30 டிகிரியாக இருக்கும். மாறாக கொழுப்புப் பசையுடைய நீர்ப்பகைப் பரப்பின்மீது தண்ணீர் சொட்டு நிற்கும்போது முத்து போல உருண்டையாகத் திரண்டு இருக்கும். அப்போது அதன் விளிம்பு கோணம் 900 டிகிரியாகயிருக்கும்.

பார்த்லாட், தாமரை இலைத் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு கண்ணாடிப் பரப்பைத் தயாரித்தார். அது நீருக்குப் பெரும் பகை கொண்டதாக இருந்தது. நீர்த்திவளையானது அந்தப் பரப்பின் நின்றபோது அதன் விளிம்புக்கோணம் 150 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. பார்த்லாட் பூசிய பொருளானது மைக்ரோ நோக்கியளவுள்ள சிறு குன்றுகளை வரிசையாகக் கொண்டிருந்ததால் அதன் மீது நீர்த்திவளையானது உடல் குறுகி ஒன்று திரண்டு நின்றது. பார்த்லாட் இந்த தொழில்நுட்பத்தைப் காப்புரிமை செய்தார். யாரும் அவர் கண்டுபிடிப்பை முதலில் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை. அதே தத்துவத்தைப் பயன்படுத்தி சிலிக்கான் பூச்சு (தாமரையிலை தத்துவ அடிப்படையில்) பூசிய தேக்கரண்டி ஒன்றைத் தயாரித்தார். அதில் தேனை எடுத்து ஊற்றிக் காட்டினார். தேன் ஒரு சொட்டுகூட கரண்டியில் ஒட்டாமல் வழிந்தது. அதன் பின்னர்தான் உலகம் அவரை நம்பியது.

இதே தத்துவத்தில் நேனோகேர் என்ற நிறுவனம் நீர்ப்பகை நூலிழைகளையும் அதன் உதவியால் துணிகளையும் உருவாக்கியிருக்கிறது. நேனோடெக்ஸ் என்று அத்துணிக்கு பேர் வைத்திருக்கிறார்கள். அத்துகிலின் இழைகளில் நேனோ அளவுள்ள தாமரை இலைப் பரப்பு உருவாக்கப்பட்டது. அதில் தண்ணீர் மட்டுமல்லாமல் டீ, காப்பி கறைகள்கூட ஒட்டுவதில்லை. மனத் திருப்திக்காக ஒரு முறை தண்ணீரில் அமிழ்த்தி உதறினால்போதும். நாள் முழுவதும் சீருடையில் இருக்கும் போலீஸ், ராணுவ வீரர்களுக்கு துவைக்கவே தேவையில்லாத உடைகள் தேவைதான். மருத்துவத் துறையிலும் இதற்கு ஏராளமான வரவேற்பு இருக்கிறது.

உச்ச ஈரத்தன்மை

தாமரையிலையின் நீர்ப்பகை குணம் நம்மை ஒருபுறம் திகைக்க வைத்துக் கொண்டிருக்கும்போது, ரோசாப்பூ இதழின் நீர் நட்புத்தன்மை வியக்க வைக்கிறது. சில பொருட்களுக்கு நீரின் மீது அளவற்ற வாஞ்சை காணப்படுகிறது. டைட்டேனியம் என்ற உலோகத்திற்கு வினோதமான பல குணங்கள் ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் அதன் நீர்நட்புக்குணம் குறிப்பிடத்தகுந்தது. டைட்டேனியம் டை ஆக்ஸைடின் மென்படிவத்தை டைட்டேனியா (Titania) என்று அழைப்பார்கள். உருகிய கண்ணாடிக்குழம்பை டின் தகடின் மீது சுடச்சுட வார்க்கும்போது சன்னல் கண்ணாடிகள் உருவாகிறது. அது 5000 டிகிரி செல்சியசுக்குக் குளிர்ந்து கெட்டியாகும் தருணத்தில் டைட்டேனியம் ஆக்ஸைடு கலந்த தண்ணீர்க் கரைசலை அதன் மீது ஊற்றினால் உடனே அது நேனோ படலமாக படிந்து ஒட்டிக்கொள்கிறது. இனி இந்தக் கண்ணாடி மீது நீராவி படியாது; குளிர்காலத்தில் கார்க் கதவை மூடிவிட்டுக்கொண்டு ஓட்டினாலும் டிரைவரின் கண்ணாடிமீது பனிபடராது. அத்தனை ஈரத்தையும் அது உள்வாங்கிக் கொண்டு கண்ணாடியைத் துடைத்த விட்டதுபோல வைத்திருக்கும்.

டைட்டேனியா படிவம் மீது சூரிய ஒளியிலுள்ள புறஊதாக்கதிர்கள் பட்டால்போதும் படிந்துள்ள நீர் ஆக்ஸிஜனாகவும், ஹைட்ராக்ஸில் மூலக்கூறாகவும் சிதைந்துவிடும். ஆக்ஸிஜன் நமக்கு பயனுள்ள வளி என்பது மட்டுமல்லாமல், கூடவே விளையும் ஹைட்ராக்சில் அயனியும் சக்திவாய்ந்த கிருமி நாசினியாகவும் கண்ணாடியில் உள்ள அழுக்குகளை ஆக்ஸீகரணம் செய்து அது அழிக்கும் பொருளாகவும் இருக்கிறது.

சப்பான் நிறுவனமொன்று குளியலறை, பீங்கான்தரை ஓடுகளின் மேலே டைட்டேனியப் படலத்தை பூசி விற்பனை செய்கிறது. டைம்டேனிய குளியலறை டைல்கள் கெட்ட நாற்றமுடைய பொருள்களை உடனுக்குடன் சிதைத்து சுத்தம் செய்துவிடுகிறது. மருத்துவமனை மட்டுமல்ல தூய்மையாக இருக்கவேண்டிய எல்லா அறைகளுக்கும் தானே சுத்தம் செய்து கொள்ளும் டைட்டேனியா டைல்களை தாரளமாகப் பயன்படுத்தலாம்.

பகையும் நட்பும் ஒரேயிடத்தில்

தென் ஆப்பிக்காவில் உள்ள (Namib) நபிப் பாலைவனத்தில் பகலில் வெயில் 50 செ. வரை செல்லும். சாலையில் அப்பளம் பொரிந்துவிடும். அங்கே சொட்டுத் தண்ணீர் கிடைப்பது அரிது. அப்படிப்பட்ட இடத்திலும் கவலையில்லாமல் சில உயிரினங்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றன. ஸ்டெனேகேரா (Stenocara) என்றழைக்கப்படும் ஒரு வண்டு வெப்பம் தாளது செத்து விழும் பிள்ளைப்பூச்சிகளை சாப்பிட்டு பிழைக்கிறது. பிள்ளைப்பூச்சிகள் அங்கே வெப்பம்தாளாமல் சாகும்போது இதனால் மட்டும் எப்படி வெயிலை சமாளிக்க முடிகிறது என்று ஆண்ட்ரியூ பர்க்கா (Andrew R. Parka, University of Oxford 2001) என்பவர் ஆராய்ந்தார். வண்டின் மேல் ஓடுக்கு வெப்பக் கதிர்களை பிரதிபலித்து நீக்கிவிடும் ஆற்றல் இருக்குமோ என்று அவர் சந்தேகப்பட்டார்.

ஸ்டெனோகேரா வண்டின் முதுகு ஓட்டை எலெக்ட்ரான் மைக்ரோநோக்கியில் பார்த்தபோது நுட்பமான நேனோ அளவுள்ள மேடுகள் வரிசையாத் தென்ப்பட்டன. அம் மேடுகளின் உச்சிப்பகுதி மிகுதியான நீர்நட்புக் குணமுடையதாகவும் அடிப்பகுதியானது நேர்மாறாக நீர்ப்பகை குணமுடையதாகவும் இருந்தது. ஏன் இப்படி இரண்டு எதிரும்புதிருமான குணங்கள் ஒரே இடத்தில் காணப்படுகிறது என்று அவர் யோசித்தார்.

இதன் நடவடிக்கையைக் கூர்ந்து பார்த்த பின்னர்தான் சந்தேகம் தெளிவானது. பாலைவனமேயானலும், அங்கேயும் அதிகாலை நேரத்தில் கொஞ்சம் பனிமூட்டம் காற்றில் காணப்படும். இந்த மூடுபனியானது வண்டின் முதுகில் உள்ள நீர்க்கவர்ச்சியுடைய முகடுகளில் படர்ந்து தேங்குகிறது. அதே சமயம் மேடுகளின் கீழேயுள்ள நீர்ப்பகைப்பகுதி நீரை உருட்டிக் கீழே தள்ளமுயலுகிறது. ஸ்டெனோகேரா வண்டு இசுலாமியர்கள் நமாஸ் செய்வதுபோல மணற்பரப்பில் தலையைக் கீழாகவும் உடலை மேலாகவும் வைத்துக் கொண்டு யோகாசனம் பண்ணுகிறது. முதுகில் திரளும் நீரானது முத்தாகத் திரண்டு தலையை நோக்கி உருண்டு நேராக வாய்க்குள் புகுகிறது. முதுகையே நீர் சேகரிக்கும் வாளிபோல மாற்றி வேண்டுமட்டும் நீரைப்பருகி பாலைவன வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறது.

கிட்டதட்ட இதே அடிப்படையில் ஒரு சிலிக்கா படலத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். மேடு பள்ளங்களுக்கு பதிலாக கெமிக்கல் பூச்சு தருகிறார்கள். அஸோபென்ஸீன் (Azobenzene) என்ற கெமிக்கல் மூலக்கூறானது ஒளி பட்டவுடன் மடிந்து குனிந்துகொள்கிறது. இதனால் அதன் நீர் நட்புப் பகுதி வெளிப்படுகிறது. ஒளி மறைந்து இருட்டாகிவிட்டால் உடனே அவை நிமிர்ந்துகொண்டு தனது நீர்ப்பகையுடைய தலைப் பகதியைக் காட்டுகிறது. இப்படிப்பட்ட கண்ணாடியின் மீது புறஊதாக்கதிரைப் பாய்ச்சும்போது தண்ணீர் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது; ஒளியை நீக்கி இருட்டாக்கியதும் உறிஞ்சியை நீரை உடனே கண்ணாடி வெளியேற்றி வடித்து விடுகிறது. இந்தக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி பாலைவனத்திலும் ஈரத்தை வடித்து தேவையான நீரை சேமித்துக் கொள்ளலாம்.

ஈரத்திலும் உலர்ந்திருக்கும்

குளம் குட்டைகளில் மிதந்தபடி வளரும் செடியாகிய பிஸ்டியா, சால்வினியா போன்றவை எப்போதும் ஈரமில்லாமல் துடைத்துக் காயப் போட்டதுபோல உலர்ந்தேயிருக்கின்றன. இதன் தத்துவத்தின் அடிப்படையில் நீரில் மூழ்கி ஆராய்ச்சி செய்பவர்களுக்குத் தேவையான நீச்சல் உடைகளைத் தயாரிக்கலாம். இயற்கையைக் கூர்ந்து கவனித்தால் அது நமக்கு நல்ல நல்ல ஆலோசனைகளை அள்ளி அள்ளி வழங்கும். பார்த்துக்கொண்டே இருங்கள் நேனோடெக்னாலஜியை அடுத்து பயோமிமட்டிக்ஸ்தான் உலகை ஆளப்போகிறது.

நன்றி: முனைவர். க. மணி.