Showing posts with label Science. Show all posts
Showing posts with label Science. Show all posts

Tuesday, March 2, 2010

உயிரி கார்பன்

உயிரி கார்பன் என்பது பாறைவடிவிலான செறிவுமிகுந்த கார்பன் ஆகும். சாதாரண கரியில் நீர் மூலக்கூறுகள் காணப்படும். ஆக்சிஜன் இல்லாத சூழலில் சாதாரணகரியை வெப்பப்படுத்தினால் இந்த நீர் மூலக்கூறுகளை அகற்றமுடியும். நீர் மூலக்கூறுகள் அற்ற கார்பன் ‘உயிரி கார்பன்’ (bio char) எனப்படுகிறது. ஆதிவாசிகளான அமேசான் இந்தியர்கள் மண்வளத்தைப்பெருக்குவதற்காக உயிரி கார்பனை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுபற்றிய கட்டுரை அண்மையில் வெளிவந்த Environmental Science & Technology இதழில் வெளியாகியுள்ளது.




கார்பன் டை ஆக்சைடு ஒரு பசுமை இல்ல வாயு. புவி வெப்பமடைவதற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடில் கார்பன் என்னும் கரிமம் அடங்கியுள்ளது. உயிரி கார்பனை அதிக அளவில் தயாரிப்பதன் மூலம் காற்றில் கலந்துபோகும் கரிமத்தை மண்ணிலேயே நிலைபெறச் செய்யலாம்.இதன்மூலம் மண்வளம் பெருகும் என்பது இந்தக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் ஆதிவாசிகளான அமேசான் இந்தியர்கள் வேளாண் கழிவுகளில் இருந்து உயிரி கார்பனை உற்பத்தி செய்திருக்கிறார்கள். மரம், புல், தட்டைகள் இவற்றை காற்றில்லா சூழலில் எரித்து மண்வளத்தை பெருக்கியிருக்கிறார்கள். மக்கும் பொருட்களுடன் இந்த உயிரி கார்பனையும் கலந்து நிலத்திற்கு உரமாக இட்டார்கள் என்னும் செய்தி விஞ்ஞானிகளிடம் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மேலும் கரிமப்பொருளை காற்றில் கலக்கவிடாமல் நிலத்திலேயே உயிரி கார்பன் வடிவில் நிலைபெறச்செய்தார்கள் என்பது நமக்கெல்லாம் வியப்பூட்டும் செய்தி ஆகும்.

காற்றில்லா சூழலில் கரிமப்பொருட்களை எரிக்கும்போது கார்பன் மோனாக்சைடு - ஹைட்ரஜன் வாயுக்கலவை (synthesis gas) வெளியாகும். இந்த வாயுவை சேமித்து எரிபொருளாக பயன்படுத்தலாம். இது ஒரு ஆற்றல் குறைந்த எரிபொருள். ஆனால் வற்றாத வளமுடையது.

நன்றி: மு.குருமூர்த்தி

Sunday, February 28, 2010

தாகம் - ஒரு அறிவியல் பார்வை


மனிதர்களிலும், விலங்குகளிலும் காணப்படும் இயல்பூக்கம் தாகம் எனப்படும். தாகத்தின் விளைவாக நாம் திரவங்களைத் தேடுகிறோம். உடலில் உள்ள திரவத்தின் சமநிலையை பராமரிப்பதற்கான கருவியாக தாக உணர்வு செயல்படுகிறது.

thirstyஉடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும்போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது.

உடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் நரம்பியல் கோளாறுகளின் விளைவாக மூளையின் செயல்திறன் குறையும்; சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அளவுக்கதிகமான தாக உணர்வை polydipsia என்கிறோம். அதிகப்படியாக சிறுநீர் போதல் polyuria எனப்படும். இது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

தாக உணர்வு மையநரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. extracellular thirst என்பது உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். intracellular thirst என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும்.

இரண்டுவகையான தாக உணர்வுகளுமே மூளையின் மைய நரம்புமண்டலத்தால்தான் உணரப்படுகின்றன.

நன்றி:
மு.குருமூர்த்தி

Saturday, February 20, 2010

குளிர் ரத்த பாலூட்டி ஆடு...?

பறவைகள், பாலூட்டிகள் அனைத்தும் வெப்ப ரத்த பிராணிகள் என, நாம் பள்ளியிலேயே படித்திருக்கிறோம். இது என்ன குளிர் ரத்த பாலூட்டி ஆடு என்று புதுசாக ஒரு கதையை அவுத்து விடுகிறீர்கள் என கிண்டலடிக்கிறீர்களா...? நண்பா இது முற்றிலும் உண்மை. 916- தங்க உண்மையப்பா...! ஆம்... இந்த விலங்கினம் பற்றி இதன் தொல்படிமத்தை இப்போதுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவலை, அறிவியல் அகாடமி இதழ் 18.11.09ல் வெளியிட்டுள்ளது.

பறவைகளும், பாலூட்டிகளும் ஊர்வன வகையிலிருந்து பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை என பரிணாம வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஊர்வன இனங்களிலிருந்து ஒரு பிரிவு பறவை இனங்களாகவும், பாலூட்டிகள் தனியாகவும் பிரிந்தன. அப்படி உருவானபோது.. அவைகளின் துவக்ககால உறுப்பினர்கள், ஊர்வன, பாலூட்டி இரண்டுக்குமான குணங்களைப் பெற்றிருந்தன. அது போன்ற உயிரிகள் எப்போதோ உலகிலிருந்து விடைபெற்று சென்றுவிட்டன. அவைகளில்... பனியூழிக்காலத்தின் இயற்கைப் பேரழிவால், பூமிக்குள்ளும், பனிப்பாறைக்குள்ளும் புகையுண்டவைகளில் ஒரு சிலவற்றை, தற்போது எப்போதாவது கண்டுபிடிக்கின்றனர், அறிவியல் அறிஞர்கள்! அதுபோன்ற ஒன்றுதான் இந்த குளிர் ரத்த பாலூட்டி ஆடு!

இப்போது கண்டுபிடித்துள்ள குளிர் ரத்த பாலூட்டி ஆட்டின் பெயர் ‘மயோடிராகஸ் பாலெயரிகஸ்’ (ஆலடிவசயபரள யெடநயசiஉரள) என்பதாகும். இது மறைந்துபோன பாலூட்டிதான். இருந்தாலும், இது பற்றிய தகவல்கள் படு சுவையாக உள்ளன. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஆடு, குளிர் ரத்த பிராணியாக இருந்திருக்கிறது என்றால் ஆச்சரியமான விஷயம் அல்லவா? இந்த சுவைமிகு தகவல், கண்டுபிடிக்கப்பட்ட ஆட்டின் எலும்பு தடயங்களிலிருந்து, இந்த ஆடு, குளிர் ரத்த பிராணியாக வாழ்ந்திருக்கிறது என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மயோடிராகஸ் பாலெயரிகஸ் என்ற ஆடு, மத்திய தரைக்கடல் தீவுகளில் ஒன்றான, ‘மஜோஸ்கா’ (ஆயதடிளஉய)வில் வாழ்ந்ததாம். மிகமிகக்குறைவான வளங்களுடன், உணவு போதாமல் வாழ்ந்திருக்கிறது. ஆனால் அதன் குணங்கள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் யாவும், ஊர்வன இனங்களையே ஒத்துள்ளன. இதன் வளர்ச்சியும், வளர்சிதை மாற்றமும், ஊர்வன வகைகளையே சார்ந்துள்ளது. அந்த காலத்தில் ஏற்பட்ட மாறும் கால நிலைக்கேற்ப தன் உடல் வெப்பநிலையையும், வளர்சிதை மாற்றத்தையும் அமைத்துக் கொண்டு, சீராக, சிக்கல் மிகுந்த கொடுமையான கால நிலையில், வாழ்நிலையில், உயிரை தக்கவைத்து வாழ்ந்திருக்கிறது. பெரிய பாலூட்டிகள், வாழ முடியாத குறைமிகு வளங்களே அப்போது அங்கு இருந்தன என்பதை, அதன் உடல், எலும்புத் தகவல்களிலிருந்து, நவீன ஆய்வு முறையால் அறிஞர்கள் கணித்துள்ளனர். இதிலிருந்து, ஊர்வன வகைகளிலிருந்துதான், பாலூட்டிகள் உருவாயின என்ற பரிணாம உண்மையை நிரூபிக்கும் நிஜமாக விளங்குகிறது ‘மயோடிராகஸ் பாலெயரிகஸ்’ - பாலூட்டி குளிர்ரத்த ஆடு? இது எப்படி இருக்கு?

நன்றி: பேராசிரியர் சோ.மோகனா

Thursday, January 28, 2010

சுட்டெரிக்கும் வெயில் காலங்களுக்கேற்ற ஆடை எது?

கோடைகாலத்தில் வெள்ளை அல்லது வெளிர் நிறத்தில் உள்ள மெலிதான ஆடைகளை அணிவது நல்லது என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருப் பீர்கள். வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளே கோடைகாலத்திற்கேற்றவை. வெள்ளை அல்லது வெளிர்நிற உடை எனில் சூரிய வெளிச்சத் தைப் பெருமளவு பிரதிபலித்துவிடும். அதனால் வெப்பம் நம் உடலை அதிகமாகத் தாக்காது. கருப்பு அல்லது அடர்த்தியான நிறமுள்ள உடை எனில் வெப்பத்தை அதிகமாக உள்வாங்கிக் கொள்ளும். எனவே அம்மாதிரியான உடைகளை கோடை காலத்தில் தவிர்த்துவிடலாம்.

அதே சமயம், கருப்பு அல்லது அடர்த்திநிற உள் ளாடையை உள்ளேயும், வெள்ளை அல்லது வெளிர்நிற உடையை வெளியேயும் அணிவதில் ஒரு நன்மை உண்டு. வெளியே உள்ள உடையைத் தாண்டி உள்ளே செல் லக்கூடிய வெப்பத்தை உள்ளாடை உறிஞ்சி நம் தோலையொட்டியுள்ள காற்றை சற்று சூடுபடுத்தும். அந்தக் காற்று இலேசாகி வெளியேறும்போது வெளியே உள்ள காற்று அந்த இடத்தை நிரப்ப உள்ளே வரும். இது ஒரு வெப்பசலனத்தை ஏற்படுத்துவதால் காற் றோட்டம் கிடைத்து உடலுக்குச் சிறிது நிவாரணம் கிடைக்கும்.

குளிர்காலத்தில் நம் உடலின் மற்ற பாகங்களைவிட கைவிரல்களும்,
மூக்கு-காது நுனிகளும் குளிர்ச்சியாக இருப்பது ஏன்?

இரண்டு வித்தியாசமான அளவுள்ள உலோக கப்புகளில் உள்ள தண்ணீர் எப்படி குளிர்ச் சியடைவதில் வேறுபடு கிறது என்பதை வைத்து இதைப் புரிந்து கொள்ளலாம். தண்ணீ ருடைய மேற்பரப்பின் அளவு குளிர்ச்சியடையும் வேகத் தைத் தீர்மானிக்கிறது. 5 செ.மீ. உயரம், 5 செ.மீ. நீளம், 5 செ.மீ. அகலம் உள்ள கப் பில் ( இந்தக் கப்பின் மேற் பரப்பு 25 சதுர செ.மீ.-கொள் ளளவு 125 கன செ.மீ.) உள்ள தண்ணீர், 10 செ.மீ. உயரம், 10 செ.மீ. நீளம், 10 செ.மீ. அகலம் உள்ள கப்பில் (மேற்பரப்பு 100 சதுர செ.மீ.-கொள்ளளவு 1000 கன செ.மீ.) உள்ள தண் ணீரைவிட சீக்கிரம் குளிர்ந்து விடும். இதற்குக் காரணம், ஒரு கன சென்டிமீட்டர் கொள் ளளவுக்கு அதிக மேற்பரப்பு எந்த கப்பிற்கு உள்ளதோ அந்த கப்பில் உள்ள நீர் சீக்கிரம் குளிர்ச்சியடைகிறது. மேற் கண்ட உதாரணத்தில், முதல் கப்பில் ஒரு கன செ.மீ. கொள் ளளவுக்கு 25/125 = 1/5 சதுர செ.மீ. ஆகவும் இரண்டாவது கப்பில் ஒரு கன செ.மீ. கொள் ளளவுக்கு 100/1000 = 1/10 சதுர செ.மீ. ஆகவும் இருப்ப தால் முதல் கப்பில் உள்ள நீர் சீக்கிரம் குளிர்ச்சியடைகிறது. நம் உடல், வெப்பத்தை உள்ள டக்கிய ஒரு பாத்திரத்திற்கு ஒப் பானது. உடலின் மற்ற பாகங் களைவிட விரல்கள், காது-மூக்கு நுனிகளின் அமைப்பு ஒரு கனசெ.மீ. கொள்ளள வுக்கு அதிக மேற்பரப்பு உள்ள தாக இருப்பதால் அந்தப் பகு திகள் சீக்கிரம் குளிர்ந்துவிடு கின்றன. மற்ற பாகங்கள் குளிர்ச்சியடைய கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ளும்.

தண்ணீருக்கு நிறம் கிடையாது. ஆனால் ஓர் அருவியிலிருந்து கீழே விழும் நீர் வெண்மையாகத் தோன்று கிறதே, அது எப்படி?

ஒரு பொருள் எல்லா நிறங்களையும் பிரதிபலிக்கக்கூடியது எனில், அது வெண் மையாகத் தோன்றும். வெள்ளைத்தாள், முகப்பவுடர், மேகம், நீராவி, மூடுபனி போன்றவை வெண்மையாகத் தெரிவதற் குக் காரணம் இதுதான். அருவியிலுள்ள நீர்த்துளிகளைச் சுற்றி காற்று இருக்கிறது. காற்றிலிருந்து ஒளி நீருக்குள் புகும்போது, ஒளிவிலகல் எண் வேறுபடுவதால், அது ஒளிவிலகலுக்கும், பிரதிபலிப்பிற்கும் உள்ளாகிறது. அருவியிலுள்ள ஆயிரக் கணக்கான நீர்த்திவலைகளிலிருந்து பிரதி பலிக்கப்படும் ஒளி ஒன்று சேர்வதால் அது வெண்மையான தோற்றத்தைத் தருகிறது

Thursday, November 19, 2009

அறிவியல் - லூயி பாஸ்டர் (1822-1895)

லூயி பாஸ்டர் (டுடிரi ஞயளவநரச) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற வேதியியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானி. நுண்ணுயிரியல் (அiஉசடிbiடிடடிபல) என்ற பிரிவு தொடங்கப்படக் காரணமாக இருந் தவர். மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் ஏற்படும் அநேக தொற்றுநோய்களுக்கு நுண்ணுயிர்களே காரணமாக இருக்கின் றன என நிரூபித்தவர். இதன் மூலம் நோய்கள் பற்றிய கிருமிக் கொள்கையை (பநசஅ வாநடிசல டிக னளைநளநள) உருவாக்கியவர்.

சோதனைச்சாலையில் தயாரிக்கப் படும் டார்டாரிக் அமிலத்திற்கும், திராட் சைலிருந்து தயாரிக்கப்படும் டார்டாரிக் அமிலத்திற்கும் ஒளிக்கதிரைப் பாதிக்கும் தன்மையில் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடித்து 26 வயதிலேயே பாஸ்டர் வேதியியல் உலகில் புகழ் பெற்றார். பின் னர் பீர், ஒயின், பால் போன்ற திரவங் களைப் புளித்துப் பொங்கவைக்கும் (கநசஅநவேயவiடிn) துறையில் விரிவான ஆராய்ச்சிகள் செய்து, அவை கெட்டுப் போவதற்கு சிலவகை நுண்ணுயிர்கள் தான் காரணம் என்பதை அவர் கண்டு பிடித்தார். அப்போது பிரான்ஸ் நாட்டிலி ருந்த ஒயின் தயாரிக்கும் ஆலை அதிபர் களுக்கு பீரும் ஒயினும் கெட்டுப்போவது மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. அவை கெடாமலிருப்பதற்கு ஒரு வழி யைக் கண்டுபிடிக்குமாறு அவர்கள் பாஸ் சரைக் கேட்டுக் கொண்டனர். கெட்டுப் போன பீரை அவர் ஒரு நுண்ணோக்கி வழியாகப் பார்த்தபோது அதில் உருண்டை வடிவிலான ஈஸ்ட் செல்களுக்குப் பதி லாக குச்சி வடிவிலான நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டார். பீர், ஒயின் போன்ற திரவங்கள் புளிப்பதற்கு நுண்ணுயிர்கள் தேவை என்றாலும், அவை கெடுதலை உண்டாக்காதவையாக இருக்க வேண்டும் என அறிந்தார். ஒயினையும் பீரையும் சுமார் 60 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு சிறிது நேரம் சூடுபடுத்தி, பின்னர் பாட் டில்களில் பாதுகாக்க வேண்டும் எனக் கண்டுபிடித்து ஆலை அதிபர்களுக்குத் தெரிவித்தார். இப்படி ஒயினைப் பாதுகாப் பதற்குத் தொடங்கிய ஆராய்ச்சி, பால் கெடாமலிருக்க அதன் மேல் அதிக காற்றழுத்தம் செலுத்தி, சூடுபடுத்திப் பின்னர் குளிர்வித்துப் பாட்டில்களில் பாதுகாக்கும் முறையாக (யீயளவநரசணையவiடிn) விரிவுபடுத்தப்பட்டது. இன்று பால் தயா ரிக்கும் நிறுவனங்கள் பாலைக் கெடாமல் பாதுகாத்து நுகர்வோர்களுக்கு விநியோ கம் செய்ய முடிகிறதெனில் அதற்கு லூயி பாஸ்டர் செய்த ஆராய்ச்சிகளே காரணம். நமக்கு விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளில் யீயளவநரசணைநன அடைம என்று அச்சடிக்கப்பட்டிருப்பதைப் பார்த் திருப்பீர்கள். பாஸ்டர் நமது அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்டார்.

நன்றி: தீக்கதிர்

Thursday, October 22, 2009

நோபல் பரிசை வென்ற இந்தியர்

2009ஆம் ஆண்டிற்கான வேதியிய லுக்கான நோபல் பரிசு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம்), தாமஸ் ஸ்டீட்ஸ் (யேல் பல்கலைக் கழகம்), அடா யோனத் ( வீஸ்மான் இன்ஸ்டிட்யூட், இஸ்ரேல்) ஆகிய மூவருக் கும் பகிர்ந்து அளிக்கப்பட்ட செய்தியைப் படித்திருப்பீர்கள்.

இதில் ராமகிருஷ்ணன் அமெரிக்கா வில் வாழ்பவரானாலும் இந்தியாவில் -அதுவும் சிதம்பரத்தில் - பிறந்தவர் என்ப தால் அவரது ஆராய்ச்சி பற்றி தமிழகத் தில் ஆர்வம் எழுந்திருக்கிறது. ராம கிருஷ்ணன் சிறு வயதிலேயே பரோடாவுக் குக் குடிபெயர்ந்து அங்கு படித்து, பின் னர் வெளிநாடு சென்றவர். முதலில் இயற்பியல் படித்தாலும் உடற்கூறியியலில் ஆராய்ச்சிக்கு இருந்த வாய்ப்புகள் கார ணமாக ராமகிருஷ்ணன் அத்துறைக்கு மாறியவர்.

ரைபோசோம் பற்றிய ஆராய்ச்சி

ரைபோசோமின் (சibடிளடிஅந) விவரங் கள் அடங்கிய வரைபடத்தைத் தயாரித்த தற்காக இம்மூவருக்கும் பரிசு வழங்கப்பட் டிருக்கிறது. ரைபோசோம் என்றால் ... ? நம் உடலில் உள்ள செல்களிலுள்ள மர பணு தொடர்பான தகவல்களைச் சேக ரித்து அந்த அடிப்படையில் நம் உடலுக் குத் தேவையான ஆயிரக்கணக்கான வெவ்வேறுவகை புரோட்டீன்களைத் தயா ரிக்கும் மூலக்கூறுகள்தான் ரைபோசோம் கள். இந்த புரோட்டீன்கள்தான் நம் உட லில் நடக்கும் பல்வேறு செயல்பாடு களைக் கட்டுப்படுத்தி நம்மை உயிர்வாழ வைக்கின்றன. புரோட்டீன்களைத் தயா ரிக்கும் ஆலைதான் ரைபோசோம் என் பதை 1958-இல் கண்டுபிடித்த விஞ் ஞானிகள் அத்துகளுக்கு `ரைபோசோம்’ என்று பெயரிட்டனர்.

நுண்ணுயிர்களிலிருந்து மனிதர்கள் வரை உள்ள எல்லா உயிரிகளிலும் உள்ள அனைத்து செல்களிலும் ரைபோசோம் கள் இருக்கின்றன. ரைபோசோம் 25 நானோமீட்டர் அளவே உடையது (ஒரு நானோமீட்டர் என்பது ஒரு மில்லி மீட் டரில் 10 லட்சத்தில் ஒரு பகுதி). ஒவ் வொரு செல்லிலும் ஆயிரக்கணக்கான ரைபோசோம்கள் இருக்கின்றன. ஒவ் வொரு ரைபோசோமிலும் ஆயிரக்கணக் கான அணுக்கள் இருக்கின்றன. தற் போது இந்த அணுக்கள் ஒவ்வொன்றின் இருப்பிடத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ளவும் அதன் மூலம் ரைபோசோம் கள் புரோட்டீன்களைத் தயாரிக்கும் சிக்க லான முறை பற்றி அறிந்து கொள்ளவும் இந்த ஆராய்ச்சி வழிகாட்டியிருக்கிறது.

ஒரு மூலக்கூறின் கட்டமைப்பைப் (ளவசரஉவரசந) பற்றித் தெரிந்து கொள்ளாமல் அது எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது. அதனால் ரைபோசோம்கள் எப்படிப் புரோட்டீன் களைத் தயாரிக்கின்றன என்பதை அறிந்து கொள்ள அவற்றின் கட்டமைப்பைத் தெரிந்து கொள்வது அவசியம். சக்தி வாய்ந்த எக்ஸ் கதிர்களைக் கொண்டு ரைபோசோம்களில் உள்ள அணுக்களின் கட்டமைப்பு பற்றி அறிவது சவாலான பரி சோதனையாக இருந்தது. 1980-லிருந்து இத்திசையில் ஆரம்பக்கட்ட பரிசோத னைகளைத் தொடங்கி 20 ஆண்டுகளில் ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தவர் டாக்டர் யோனத். டாக்டர் ஸ்டீட்ஸூம் டாக்டர் ராமகிருஷ்ணனும் பின்னரே இந்த ஆராய்ச்சியில் இணைந்து கொண்டவர்கள்.

கண்டுபிடிப்பின் மகத்துவம்

எந்த உயிரியும் ரைபோசோம் இன்றி உயிர்வாழ முடியாது என்பதால், உட் கொள்ளப்படும் எந்த மருந்திற்கும் இலக்கு ரைபோசோம்கள்தான். இன்று பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட பல ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் காலப்போக்கில் மருந்துகளை எதிர்க்கும் சக்தியை நோயை ஏற்படுத்தும் கிருமிகள் பெற்றுவிடுவதால், மருந்துகள் செய லிழந்து விடுகின்றன. இது மருத்துவ உலகம் இன்று சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை. நோய்க்கிருமிகளைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடும் வகையில் புதிய ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தயாரிக் கப்பட இந்தக் கண்டுபிடிப்பு உதவியிருக் கிறது. எனவே, இந்த ஆராய்ச்சியின் மூலம் மனிதகுலத்திற்கு மிகப் பெரிய நன்மை கிடைக்க இருக்கிறது.

நோபல் பரிசை வென்றதற்காக ராம கிருஷ்ணனைப் பாராட்டினால் “நோபல் பரிசை வைத்து அறிவியலை எடை போடு வது தவறு. அடிப்படை அறிவியலுக்கும் அறி வுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் வகை யில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கி வளர்த்து இளைஞர்களுக்கு அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே அரசின் கடமை” என்று அவர் அறிவுறுத்துகிறார்.

இன்று மேற்படிப்பு என்றாலே பொறி யியலும் மருத்துவமும்தான் என்று பலரும் கருதும் சூழ்நிலையில், டாக்டர் ராமகிருஷ் ணனின் அறிவுறுத்தல் அரசின் காதுக ளில் மட்டும் விழுந்தால் போதாது. மாண வர்கள், பெற்றோர்களின் சிந்தனையி லும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

நன்றி: தீக்கதிர்

Friday, June 26, 2009

நம் எதிர்காலம் நம் கைகளில்



1970களின் மத்தியில் தலைசிறந்த மேற்கத்திய உலகின் விஞ்ஞானிகள் - அவர்களில் சிலர் நோபல் பரிசு பெற்ற வர்கள் - கீழ்க்கண்ட அறிக்கையை மனித இனத்தின் பரிசீலனைக்காக வெளியிட் டனர்:

நம்முடைய எதிர்காலம்

நம் கைகளில்

“நாம் பிறக்கும் `குறிப்பிட்ட அந்த நேரத்தில்’ நட்சத்திரங்களும் கிரகங்க ளும் செலுத்தும் `விசைகள்’ நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கவல்லவை என்று நினைத்துக் கொள்வது தவறு. ஒரு சில செயல்களில் ஈடுபடுவதற்கு உகந்ததாக சில நாட்களையோ, நேரங் களையோ வெகு தூரத்தில் உள்ள நட்சத் திரங்களும் கிரகங்களும் நிர்ணயிக்கின் றன என்பதோ, ஒருவர் பிறந்த ராசி அவர் மற்றவர்களுடன் இணக்கமாகவோ இணக்கமின்றியோ இருப்பதைத் தீர்மா னிக்கிறது என்பதோ உண்மையல்ல. தங்களது எதிர்காலம் நிச்சயமற்றதாகத் தோன்றும் சூழலில் முடிவெடுப்பதில் தங்களுக்கு ஏதாவது ஆலோசனை எங் கிருந்தாவது கிட்டாதா என்று பலர் ஏங்குகின்றனர். அப்படி ஆலோசனை கிடைப்பது அவர்களுக்கு மிகவும் சுகமா னது; சவுகரியமானது. தங்களுடைய சக்திக்கு அப்பாற்பட்ட விண்ணுலக சக் திகள் தங்களுடைய தலைவிதியை நிர் ணயித்துவிடுகின்றன என்று நம்புவ தையே அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், இந்த உலகம் நமக்குத் தரும் பிரச்சனைகளை நாம்தான் எதிர்கொள்ள வேண்டும். நம் முடைய எதிர்காலம் நம்முடைய கை களில்தான் உள்ளதே தவிர, நட்சத் திரங்களில் அல்ல”.

பொதுவாக மனிதர்கள் பாரம்பரிய நம்பிக்கைகளில் கட்டுண்டவர்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களது கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவை. அந்த நம்பிக்கைகளை அறிவியல் மனப்பான்மைக்குரிய விமர் சன ஆய்வுக்கு உட்படுத்தும்போது முரண்பாடுகள் தவிர்க்கமுடியாதபடி எழு கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இருந்த தற்கு அன்று கிடைத்த தகவல்களின்படி தர்க்கரீதியான காரணங்கள் இருந்திருக் கலாம். ஆனால் இன்றைய அறிவியல் வளர்ச்சியின் வெளிச்சத்தில் அப்படிப் பட்ட காரணங்கள் இல்லை.

ஏற்கவேண்டியவையும் நிராகரிக்க வேண்டியவையும்

பாரம்பரியமான விஷயங்களில் சமூ கத்திற்கு ஒருவர் ஆற்றவேண்டிய கட மை, எல்லோருமே நலமாக இருக்க வேண்டும் என்று சமூகம் ஏற்றுக் கொண்ட தர்மம், இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இவையெல்லாம் போற்றப்பட வேண்டி யவை. இன்று மட்டுமல்ல என்றுமே கடைப்பிடிக்கப்பட வேண்டியவை. இந்த இடத்தில்தான் அறிவியல் மனப்பான்மை யின் பங்கு வருகிறது. பாரம்பரியமான விஷயங்களில் எதை ஏற்க வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும் என்று பகுத்தறிய அது உதவுகிறது.

அறிவியல், தொழில்நுட்ப முன்னேற் றம் கட்டுப்பாடின்றி வளர்கையில் அவற் றின் தீய விளைவுகளை சமூகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது. அணு ஆயுதக் குவியல், ஆலைகளினால் சுற் றுச்சூழல் மாசுபடுவது, இயந்திரங்களே மனிதனின் பல்வேறு வேலைகளை எடுத் துக் கொண்டுவிடுவதால் விளையும் சோம்பேறித்தனம், அதன் விளைவாக உருவாகும் உளவியல் பிரச்சனைகள்... இவையெல்லாம் சில தீய விளைவுகள். ஆனால் தீய விளைவுகள் இருக்கின்றன என்பதாலேயே இனி அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றமே வேண்டாம் என்று கட்டுப்பெட்டித்தனமாக முடிவு செய்துவிட இயலுமா? அப்படிப்பட்ட தீர்வை நம் நாட்டில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளில் உள்ள சிலர் கூட முன்மொழி கின்றனர். அது தீய விளைவுகளைக் கண்டு அஞ்சி ஓடி ஒளியும் மனப்பான் மையே. காலச்சக்கரம் எப்போதும் முன் னோக்கியேதான் செல்லும். பாரம்பரிய மான விஷயங்களில் நல்லவற்றை உள் வாங்கிக் கொண்டு அறிவியல் பார்வை யுடன் பிரச்சனைகளை அணுகினால், எந்தப் பிரச்சனைக்கும் அறிவுபூர்வமான தீர்வைக் கண்டுபிடித்துவிட முடியும்.

நேரு எதிர்பார்த்தபடி நாடு சுதந்திரம் அடைந்தபிறகு மக்கள் மூடநம்பிக்கை களிலிருந்து விடுபட்டு சுதந்திரச் சிந் தனை உலகிற்கு வந்து சேர்ந்துவிட்டார் களா? ஒரு புறம், பல அரசு சாரா அமைப் புகளும் அறிவியல் அமைப்புகளும் பகுத் தறிவைப் பரப்புவதிலும் மூடநம்பிக்கை களுக்கு எதிரான பிரச்சாரத்தைச் செய் வதிலும் ஈடுபட்டுள்ளன. ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் மூடநம்பிக்கைகளுக் கெதிரான போராட்டத்தில் நம் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் என்ன? பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதுதான் உண்மை. மூடநம் பிக்கை என்றதும் அது கிராமங்களில் படிப்பறிவு இல்லாத மக்களிடம் உள்ளது என்று பரவலாக ஒரு கருத்து இருக் கிறது. நகரத்தில் உள்ள உயர் பட்டம் பெற்றவர்களையும் அது விட்டுவிட வில்லை என்பது சில ஆண்டுகளுக்கு முன் விநாயகக் கடவுள் பால் குடிப்ப தாகக் கிளம்பிய புரளியின்போது வெளிப் பட்டது. டில்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களிலும் பால் பாத்திரங்களு டன் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைந் ததை நாம் மறந்துவிட முடியாது.

நன்றி: பேராசிரியர் கே. ராஜு

Wednesday, March 25, 2009

நண்டுகள் தங்கள் வளைகளை எப்படிக் கண்டுபிடித்துத் திரும்புகின்றன?

உணவுக்காக வெளியே அங்கும் இங்கும் அலையும் நண்டுகள் வளைக்குத் திரும் புகையில் தங்கள் வளை யைச் சரியாக அடையாளம் வைத்துத் திரும்புகின்றனவே, அது எப்படி?

பொதுவாக விலங்குகள் திசையையும் தாங்கள் திரும் பவேண்டிய தூரத்தையும் இணைக்கும் ரகசியத்தைத் தெரிந்து வைத்துள்ளன. அவை தூரத்தை எப்படி அளக்கின் றன என்பது புதிராகவே இருந்து வருகிறது. உதா ரணமாக, தான் கடந்து செல் லும் நிலப்பகுதியைத் தேனீ கணக்கு வைத்துக் கொள்கி றது. வேறு சில விலங்குகள் தாங்கள் செல்லும் வேகத் தைக் கணக்கிட்டு அதிலிருந்து தூரத்தை அறிந்து கொள் கின்றன ! தற்போது நண்டு கள் தங்களுடைய கால் அசைவுகளை வைத்து தூரத் தை அளவிடுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தன்னுடைய வளையை நோக்கித் திரும்பும் ஒரு நண் டின் பாதையில் வழுக்கி விடக் கூடிய ஒரு திரவத்தை ஊற்றி அது எப்படிச் செல்கி றது என்பதை சின்சினாட்டி பல்கலைக்கழக ஆய்வாளர் கள் கவனித்தனர். “சாதா ரண தரையிலும் வழுக்கி விடும் பரப்பிலும் அது ஒரே எண்ணிக்கையிலான அடி களை எடுத்து வைக்கிறது. சாதா ரண தரையில் ஒரு குறிப் பிட்ட அளவு அடிகளை எடுத்து வைத்து அது தன் வளையை அடைகிறது. ஆனால் வழுக்கும் தரையில் அது அதே அளவு அடிகளை எடுத்து வைத்தாலும் சில இடங்களில் வழுக்கிவிடு வதால் முன்னேற முடியா மல் அது தன் வளையை அடைய முடிவதில்லை” என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நண்டு எப்படியோ வளையைத் தேடிக் கண்டு பிடித்துக் கொள்கிறது... அதைப் பற்றி நமக்கென்ன என்று இருக்காமல் அதன் ரகசியத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முனைகி றார்களே அதுதான் அறிவி யலின் உந்துசக்தி !